இன்றைய காலை செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இன்றைய காலை செய்திகள்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
* ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பொருள்* [9]

♈🇮🇳🌴1] *இந்த நாட்டிற்கும், உலகிற்கும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு அச்சுறுத்தல் என்று அதிபர் ஒபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார்*
♈🇮🇳🌴2] *மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் சரியான முறையில் தகர்க்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி கூறியுள்ளார்*
♈🇮🇳🌴3] *காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. சென்னையில் இன்று மாலையில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திர கடற்பகுதிக்குள், மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது*
♈🇮🇳🌴4] *உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், விகாஸ் ரத யாத்திரையை இன்று தொடங்குகிறார். விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலை முன்னிட்டு முதல்வர் அகிலேஷ் யாதவ் விகாஸ் ரத யாத்திரை என்னும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்குகிறார். யாத்திரை தொடக்க விழா லக்னோவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது*
♈🇮🇳🌴5] *கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் பள்ளி விடுதியில் இருந்து மாயமான 6 மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். விடுதியிலிருந்து வெளியூருக்குச் சென்ற மாணவர்கள் 6 பேர் ஆண்டிப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டனர். பள்ளிச் சீருடையில் ஆண்டிப்பட்டிப் பேருந்து நிலையத்தில் 6 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீசார் விசாரித்த போது விடுதியில் இருந்து ஓடிவந்தது தெரியவந்துள்ளது. சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்துவர ஆசிரியர்கள் கூறியதால் விடுதியைவிட்டு ஓடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டுபிடிக்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரும் ராயப்பன்பட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து 6 மாணவர்களையும் அவர்களது பெற்றோரிடம் ராயப்பன்பட்டி போலீசார் ஒப்படைத்துள்ளனர்*
♈🇮🇳🌴6] *குற்றாலம் அருவியில் குளிக்க தடை*

♈🇮🇳🌴7] *பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பதை சிவசேனா கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு விமர்சித்தால் அக்கட்சிக்குதான் அவப்பெயர் ஏற்படும் என்றும் மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்*

♈🇮🇳🌴8] *மக்களுக்கு சேவை செய்ய இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புவதாக தலாய்லாமா(81) தெரிவித்துள்ளார்*
♈🇮🇳🌴9] *திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மோதுபட்டி கிராமத்தில் களத்துகாடு வேலுச்சாமி என்பவரது தரிசு நிலத்தில் இன்று திடீரென வானத்தில் இருந்து கேஸ்சிலீண்டர் போல் ஒருபொருள் தீ புகையுடன் பயங்கர சத்தத்துடன் தரிசு நிலத்தில் விழுந்தது. இதனை கண்டு அப்பகுதி மக்கள்  பயத்துடன் அப்பகுதியில் இருந்து வெளியேறி கள்ளிமந்தயம் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் காவல் ஆய்வாலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் என அப்பதியில் விழுந்த மர்ம பொருளை பார்வை இட்டு பின்பு திண்டுக்கல் மென்பொருள் ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இந்த மர்ம பொருளால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது*

*பாராளுமன்றம் முன்பு நவம்பர் 25 ஆம் தேதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! டி.ரவீந்திரன்*

*திருவள்ளூர் அருகே ஆம்புலன்ஸ் வேன் மோதி 2 மருத்துவ மாணவர்கள் பலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here