வியாபார உலகத்தில் சேவை மருத்துவர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வியாபார உலகத்தில் சேவை மருத்துவர்

*-குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுக்கும் தனியார் நிறுவனம்!!*
தென் தமிழகத்தில் வசிக்கும் #ஏழை நோயாளிகள் குறைந்த செலவில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் மதுரை அரசு #ராஜாஜி மருத்துவமனைக்குத் தான் வர வேண்டும்.
இங்கு சிடி ஸ்கேன் எடுக்க ரூ750-ம், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுக்க ரூ. 2500 முதல் 3000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தில் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டுமெனில் நோயாளிகள் வரிசை அடிப்படையில் காத்திருக்க வேண்டும்.
மேலும் ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட் வர 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை ஆகும்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான #சேவா_ஸ்கேன்_சென்டர் என்ற பெயரில் ஒரு ஸ்கேன் சென்டர் இருக்கிறது. டாக்டர் . நாகேந்திரன் அவர்களால் நடத்தப்படும் இந்த ஸ்கேன் சென்டரில் 550 ரூபாய்க்கு சி.டி.ஸ்கேனும் 1500 ரூபாய்க்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் எடுக்கப்படுகிறது.
இங்கு ஸ்கேன் எடுப்பவர்கள் ரிப்போட்டுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. உடனுக்குடன் ரிப்போர்ட்டும் தரப்படுகிறது. இதற்காக இந்த ஸ்கேன் சென்டரில் 4 மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் 24 நேரமும் பணி செய்கின்றனர். எனவே ஏழை நோயாளிகள் இங்கு குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுத்துக் கொள்ளலாம்.
டாக்டர் நாகேந்திரன் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசடியில் தேவகி மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையில் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை, கிமோதெரபி கதிரியக்க சிகிச்சை ஆகியவை தரப்படுகின்றன. இங்கு சிகிச்சை பெறுவோர்களில் அதிகமானோர் ஏழைகள்.
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இங்கு சிகிச்சை தரப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அதிகமான ஏழைகளுக்கு சிகிச்சை அளித்ததற்காக இந்த மருத்துவமனைக்கு நிறைய விருதுகள் வழங்கப்பட்டுள்ளனர்
அரசு ஊழியர்களுக்கான காப்பீடு திட்டத்தின் கீழும் இங்கு புற்று நோய்க்காக சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
வியாபார மருத்துவர்களுக்கிடையில் ஒரு சேவை மருத்துவர் மனதுக்கு ஆறுதலான விஷயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here