புதுடில்லி:தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுப்போர், ஆவணங்களை, ஆங்கி லத்தில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'கால்நடைகளை கொல்வதால், யமுனை நதி மாசுபடுகிறது; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தில், 2015ல், ஓஜஸ்வி கட்சி மனு தாக்கல் செய்திருந்தது.இந்த மனு, ஹிந்தியில் இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை, அதே ஆண்டு, செப்டம்பரில், ஓஜஸ்வி கட்சி தாக்கல் செய்தது.
இதையடுத்து, ஹிந்தி மொழி யில், முன் தாக்கல் செய்த மனுவை ஏற்கும்படி, தேசிய பசுமைத் தீர்ப்பா யத்தில், ஓஜஸ்வி சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், நீதிபதி, யு.டி.சால்வி தலைமையி லான, பசுமை தீர்ப்பாய அமர்வு,பிறப்பித்த உத்தரவு: தேசிய மொழியாக இருப்பதால், ஹிந்தியில் தாக்கல் செய்தமனுவை ஏற்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனுதாரர் உள்ளார்.
ஆனால், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின், 33 வது விதியின்படி, விசாரணை நடைமுறைகள் ஆங்கிலத் தில் மட்டுமே நடக்கும்;ஹிந்தி மொழியில் தாக்கல்செய்யப்படும் ஆவணங்களை ஏற்க முடியாது. மனுதாரர், 2015, செப்டம்பரில், ஆங்கிலத்தில் தாக்கல் செய்த மனுவை, விசார ணைக்கு ஏற்கி றோம்.
ஆங்கில மொழியாக்கம் இல்லாமல், ஹிந்தி யில் மட்டும் தாக்கல் செய்த மனுக் களை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக