மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்

🍎மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்!!

🌻மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி, 87, சூரத் மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார்.

🌻மகாத்மா காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ் காந்தி-நிர்மலா தம்பதிக்கு கனு, சுமித்ரா, உஷா என மூன்று வாரிசுகள்.

🌻 இவர்களில், கனு, சிறு வயதில், மகாத்மா காந்தியுடன் ஆசிரமத்தில் வளர்ந்தார்.

🍊'நாசா' விஞ்ஞானி

🌻காந்தி படுகொலைக்கு பின் அமெரிக்காவில் சென்று படித்த அவர், 'நாசா' அமைப்பில், விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

🌻 அந்நாட்டு பாதுகாப்புத்துறையிலும் பணியாற்றி னார். அவரது மனைவி சிவலஷ்மியும், அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றினார்.

🌻 குழந்தைகள் இல்லாத இந்த தம்பதி, 40 ஆண்டுக்கும் மேலாக, அமெரிக்காவில் இருந்தனர்.

🌻உடல் நலம் குன்றிய நிலையில் 2014ல் இந்தியா வந்தனர். டில்லி உள்ளிட்ட இடங்களில், ஆசிரமங்களிலும், முதியோர் இல்லங்களிலும் தங்கியிருந்தனர்.

🌻 அவர்களது நிலையை அறிந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணர் கோவில் நிர்வாகம், கனு தம்பதிக்கு தங்குமிடமும், சிகிச்சையும் அளிக்க ஏற்பாடு செய்திருந்தது.

🌻இந்நிலையில், கனு காந்திக்கு, கடந்த மாதம் 22ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில், மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது.

🌻 இதனால், அவரது உடலின் ஒரு பகுதி செயல் இழந்து, கோமா நிலைக்கு சென்றார். நினைவு திரும்பாமலேயே, நேற்றிரவு கனு காந்தியின் உயிர் பிரிந்தது.

🌻மகாத்மா காந்தி, சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, உப்பு சத்தியாகிரகம் செய்வதற்கு தண்டி யாத்திரை மேற்கொண்டபோது, அவருடன், சிறுவனாக இருந்த கனுவும் சென்றார்.

🌻காந்தியின் கைத்தடியை பற்றிக் கொண்டு, முன் செல்லும் சிறுவன் கனுவின் புகைப்படம், உலகப்புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

🌻கனு காந்தி மறைவுக்கு பிரதமர் மோடி, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here