10 ம் வகுப்பில் தோல்வி அடைந்த தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

10 ம் வகுப்பில் தோல்வி அடைந்த தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித் தேர்வர்கள் மீண்டும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் 2017 மார்ச் மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் 26ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நேரடித் தனித் தேர்வர்கள் அனைவரும் பகுதி 1ல் மொழிப்பாடத்தில் தமிழ் மொழிப்பாடத்தை மட்டுமே முதல் மொழிப்பாடமாக எழுத முடியும். மேலும் பதினான்கரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், பல்வேறு திட்டங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத தகுதி உடையவர்கள். மேலும், எஸ்எஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வி அடைந்த பாடங்களில் மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஓஎஸ்எல்சி பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர மற்ற பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் அந்த பாடங்களை எழுதலாம்.

மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பழைய பாடத்திட்டத்தில் ஓரிரு பாடங்களில்கூட தோல்வி அடைந்து இருந்தாலும் அவர்கள் புதிய பாடத்திட்டத்தில் ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும். சேவை மையங்கள் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க முடியாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித் தேர்வர்கள் மார்ச் 2017 பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநரை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் படித்து தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்புவோர் Migration Certificate, Evaluation Certificate பெற்று அரசுத் தேர்வு சேவை மையங்களில் கொடுத்து விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரம் வேண்டுவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ெதரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here