மதிய செய்திகள் 16/12/2016 ( 10&12 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு தேதி /,ஊழல் விவகாரம் எதிர்கட்சிகள் கூட்டு என மோடி பேச்சு/போயஸ் கார்டனில் எம்எல் ஏக்கள் கூட்டம் /மோடியை சந்தித்த ராகுல்/தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு) - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய செய்திகள் 16/12/2016 ( 10&12 ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு தேதி /,ஊழல் விவகாரம் எதிர்கட்சிகள் கூட்டு என மோடி பேச்சு/போயஸ் கார்டனில் எம்எல் ஏக்கள் கூட்டம் /மோடியை சந்தித்த ராகுல்/தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு)

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

1.        *மார்ச் 8 முதல் மார்ச் 30 வரை 10ம் வகுப்பு தேர்வு

2.         மார்ச் 2 முதல் 31 வரை பிளஸ் 2 தேர்வு நடக்கும்

3.         ஊழல் விவகாரத்தில் எதிர்கட்சியினர் கூட்டு: மோடி


4.         எங்களின் கோரிக்கைக்கு பிரதமர் பதிலளிக்கவில்லை: ராகுல்

5.         அதிகாரி மீது தாக்கு: அழகிரி மீதான வழக்கு விசாரணை பிப்., 4க்கு ஒத்திவைப்பு
தொடர்ந்து சரிகிறது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.128 குறைவு

நிதிஷ் குமார், நவீன் பட்நாயக்கிற்கு பிரதமர் மோடி பாராட்டு

விவசாயிகள் கடன் தள்ளுபடி: பிரதமருடன் ராகுல் சந்திப்பு


*தமிழகத்தில் அடுத்து 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாயப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது*

*பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த கால அவகாசம் அளிப்பது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக ரூபாய் நோட்டு வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய கபில்சிபில் மருத்துவமனை மற்றும் சுங்கசாவடிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் பணம் எடுக்கும் உச்சவரம்பை 24000 என்பதை அதிகரித்து அறிவிக்க வேண்டும் எனவும் கபில்சிபில் வலியுறுத்தினார்*

*நெல்லை மாவட்டத்தில் கடனுக்காக டிராக்டர்களை வங்கிகள் பறிமுதல் செய்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்*

*பாஜக மூத்த தலைவர் அஸ்வினிகுமார் உபயத்யாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாள்தோறும் பொதுநல வழக்கு தொடுப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது*
♈🇮🇳🌴1] *சிரியாவின் அலெப்போ நகரில் முற்றுகையில் இருக்கும் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேலானோர் பேருந்துகள் மற்றும் அவசர மருத்துவ ஊர்திகள் மூலம் வெளியேற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்*
♈🇮🇳🌴2] *உலகிலேயே மிக பெரிய சமூக ஊடக வலைதளமாக விளங்குகின்ற பேஸ்புக் (முகநுல்) போலி செய்திகள் பரப்பப்படாமல் இருப்பதற்கு புதிய அம்சங்களை தன்னுடைய வலைதளத்தில் அறிவித்திருக்கிறது*
♈🇮🇳🌴3] *ஸ்டண்ட் கலைஞரை வியக்க வைத்த அஜித்!!அஜித் ஒரு பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் சொந்தமாக பி.எம்.டபிள்யூ பைக் ஒன்றை வைத்துள்ளார். உலகின் எந்த விலையுயர்ந்த பைக்கையும் ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் உடையவர். இவர் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் தல 57 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் இண்டர்போல் ஆபீசராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அக்ஷரா ஹாசனும் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் அஜித்தின் சண்டை காட்சிகளுக்கு டூப் போட்ட பல்கேரிய பைக் ரேசரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியன் பொனமரெப் அஜித்தை பற்றி புகழ்ந்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தது அஜித் தானாம். ஜோரியன் பொனமரெப் பைக் வீலிங் செய்தபோது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்து, இவருக்கு பரிசாக கொடுத்தததைப் பார்த்து வியந்துபோன அவர், அஜித் சிறந்த மனிதர். என்னுடைய பைக்கில் பயங்கரமான ஸ்டண்ட்களை செய்துள்ளார். அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று கூறியுள்ளார்

♈🇮🇳🌴4] *இன்று போயஸ்கார்டனில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம். முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 135 பேரும் விரைவில் சசிகலாவை சந்தித்து பொதுச் செயலாளர் பதவியேற்க அழைப்பு விடுக்க இருக்கின்றனர். இது தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.இந்தப் பணி முடிந்ததும், சசிகலாவை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோடு சந்திப்பார் என தெரிகிறது. அனேகமாக, 20–ந்தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று கூறபட்டது.இந்த் நிலையில் சென்னை போயஸ்கார்டனில் ஒன்று பிற்பகல் 1 மணிக்கு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வருகை த்ர இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், ஏகமனதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கபடுகிறது*

♈🇮🇳🌴5] *தேர்தல் ஹேக்கிங் விவகாரத்தில் ரஷியாவிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா சபதமிட்டு உள்ளார்*

♈🇮🇳🌴6] *ரூபாய் நோட்டு விவகாரம் :பிரதமர் மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தார் ராகுல் காந்தி*

♈🇮🇳🌴7] *டெல்லியில் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம், ஒருவன் கைது*
♈🇮🇳🌴8] *நொய்டா,தனியார் வங்கியில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், போலி நிறுவனங்களின் கணக்கில் ரூ.60 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஒரு நகை வியாபாரிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது*

♈🇮🇳🌴9] *உளவுத்துறை அறிக்கை எதிரொலி 7 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து மத்திய அரசு நடவடிக்கை*
♈🇮🇳🌴10] *சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் என்ற இடத்தில் 5 நக்சலைட்டுகள் போலீசார் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன*
♈🇮🇳🌴11]  *பென்னேரியில் இந்தியன் வங்கி ஓவர்சீஸ் வங்கி முன் வாடிக்கையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணம் இல்லை எனக் கூறி வங்கி அதிகாரிகள் அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்*
♈🇮🇳🌴12] *தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்*
♈🇮🇳🌴13] *பொன்னேரி - பழவேற்காடு சாலையில் கள்ளுக்கடைமேடு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். புயல் ஓய்ந்து 5 நாட்களாகியும் கிராமத்துக்கு குடிநீர், மின்விநியோகம் இல்லை எனக் கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்*
♈🇮🇳🌴14] *வங்கி கணக்கில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வைத்திருந்தால் பான் கார்டு அவசியம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரூ.2 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால  பான் கார்டு  எண் கட்டாயம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு ரிசர்வ் வங்கி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது*


♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here