http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡சாலை விபத்துகளில்87 ஆயிரம் பேர் பலி
புதுடில்லி;நாட்டின் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், 2014ல், 2.37 லட்சம் விபத்துகள் நடந்துள்ளன; 87 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்
🌍தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.1.84 கோடி!
தினக்கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூ.1.84 கோடி வரவு வைக்கப்பட்டதால், அதிகாரிகள் அவரின் கணக்கை முடக்கி உள்ளனர்.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், கோமட்டிகுண்ட கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசலு நாயுடு (48). இவர், அருகில் உள்ள கல் குவாரியில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
சீனிவாசலு நாயுடுவுக்கு ஆந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவரின் வங்கிக் கணக்கில், ரூ1.84 கோடி வரவு வைக்கப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், சீனிவாசலுநாயுடுவின், வங்கிக் கணக்கை முடக்கினர். மேலும், அவரது சொத்து விவரம், மாத வருமானம், முக்கிய பிரமுகர்களுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
என்பன குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📡திருமலையில் யானை மிதித்து பாகன் கால் முறிவு
திருமலையில் யானை மிதித்ததில், பாகனுக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது.
திருமலையில் தினசரி ஊஞ்சல் சேவை முடிந்தவுடன் மாடவீதியில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா நடைபெறும். அப்போது, 2 யானைகள் முன் செல்லும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் லட்சுமி, அவனீஜா என்ற இரு யானைகள் உற்சவ மூர்த்திகளின் வீதி உலாவுக்காக ஊஞ்சல் மண்டபத்துக்கு சென்று கொண்டிருந்தன.
அப்போது, கிழக்கு மாடவீதியில் உள்ள வராக ஸ்வாமி கோயில் அருகில் யானை லட்சுமி, திடீரென பாகன் கங்கய்யாவை துதிக்கையால் தள்ளியது. இதில் அவர் அருகிலிருந்த அவனீஜா என்ற யானையின் முன் விழுந்தார்.
அப்போது யானை அவனீஜா, கங்கய்யாவை காலால் மிதித்தது.
இதில் அவரின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கங்கய்யாவை மீட்டு, திருமலை அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக, மாட
வீதியில் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்கு யானைகளால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
யானைகளின் திடீர் ஆவேசத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகனை மிதித்த யானை அவனீஜா. (வலது) காயமடைந்த கங்கய்யா.
🌍தீர்க்கப்படாத மொபைல் போன் சிக்னல் பிரச்னை சுனாமி குடியிருப்போர் போராட்டம் நடத்த முடிவு
புதுச்சேரி: சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டும் காலாப்பட்டு சுனாமி குடியிருப்பில் மொபைல் சிக்னல் பிரச்னை தீர்க்கப்படாததை கண்டித்து, மீண்டும் போராட்டம் நடத்த மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு பகுதிகளில் 1431 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2012ம் ஆண்டு சிறைச் சாலையில் மொபைல் போன் பயன்பாட்டை தடுக்க ஜாமர் கருவி பொருத்தப்பட்டது.இதன் காரணமாக காலாப்பட்டு சிறை அருகில் இருக்கும் சுனாமி குடியிருப்புகளில் முழுவதுமாக மொபைல்போன் சிக்கனல் தடைப்பட்டுள்ளது. சுனாமி குடியிருப்பில் வசிக்கும் நான்கு கிராம மீனவர்கள் மொபைல் போனை பயன்படுத்த முடியாமல் மூன்று ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர்.அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ள முடிய வில்லை.அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், பல கட்ட போராட்டம் நடத்தியும் பிரச்னையை தீர்க்கவில்லை.
📡மாநில தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் 'சாதிப்போம் சதம் பெறுவோம்' வழிகாட்டி நிகழ்ச்சி
புதுச்சேரி: புதுச்சேரி மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான 'சாதிப்போம் சதம் பெறுவோம்' வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது
🌍டாக்டர்களுக்கு சட்டம் குறித்த அறிவு அவசியம்: முதல்வர் வலியுறுத்தல்
புதுச்சேரி: தவறான சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என, முதல்வர் நாராயணசாமி பேசினார்.கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சட்டம் சார் மருத்துவத்துறை சார்பில், தற்போதைய மருத்துவவியல் சட்டத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கு நேற்று நடந்தது.கல்லுாரி இயக்குநர் கோவிந்தராஜ் வரவேற்றார்.முதல்வர் நாராயணசாமி, மருத்துவ கல்வி கருத்தரங்கை துவக்கி வைத்தார். நல வழித்துறை செயலர் பாபு, இயக்குநர் ராமன் வாழ்த்தி பேசினர்.கருத்தரங்கில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது; மருத்துவர்களுக்கு எந்த மாதிரியான சட்ட சிக்கல்கள் ஏற்படும், அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.
சிகிச்சையின்போது தவறு நடந்துவிட்டால் போலீசார் மற்றும் நீதிமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லும் நிலை ஏற்படும்
📡பணமில்லா பரிவர்த்தனை குறித்த பயிற்சி பட்டறை
காரைக்கால்: பணமில்லா பரிவர்த்தனை பயிற்சி பட்டறையை கலெக்டர் பார்த்திபன் துவக்கி வைத்தார்.காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், நேற்று முன்தினம், பணமில்லா பரிவர்த்தனை பயிற்சி பட்டறையை, கலெக்டர் பார்த்திபன் துவக்கி வைத்தார்.வெளிப்படையான பண வினியோகம் குறித்து மக்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த கல்லூரியை சேர்ந்த என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சந்தனசாமி, பாரத ஸ்டேட் பாங்க் முதன்மை மேலாளர் கிரிஸ்டோபர் தேவாரம், இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் அசோக்குமார், வணிக அவை தலைவர் அமுதா ஆறுமுகம், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
🌍காவிரியில் குறைந்தது நீரோட்டம்:ரயில்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு
ஈரோடு:'காவிரியில் நீரோட்டம் இல்லாததால், வெளியூர் ரயில்களுக்கு தண்ணீர் நிரப்ப முடியாது' என, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📡தங்க கொடிமர பீடம் அடிக்கல்:ஏப்.7-ல் நடக்கிறது
சபரிமலை;சபரிமலையில் புதிய தங்க கொடிமரம் அமைப்பதற்கான பீடம் அடிக்கல் நாட்டு விழா ஏப்., ௭ல் நடக்கிறது.சபரிமலையில் தற்போதய கொடிமரம் மாற்றப்பட்டு புதிய தங்க கொடிமரம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரான்னி காட்டில் இருந்து தேக்கு மரம் வெட்டப்பட்டு, பம்பையில் அது வடிவமைக்கப்பட்டு எண்ணெய் தோணியில் ஊற வைக்கப்பட்டுள்ளது. செப்புத் தகடுகள் சபரிமலையில் பூஜிக்கப்பட்டு, ஆலப்புழா மாவட்டத்தில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.மகரவிளக்கு காலம் ஜன.,20ல் நிறைவு பெற்ற உடன் தற்போதுள்ள கொடிமரத்தை அப்புறப்படுத்தும் பணி தொடங்கும். இந்த பணிகள் தொடங்குவதற்கு முன்பாக மூன்று நாள் சிறப்பு பூஜை நடைபெறும்.தற்போதுள்ள கொடிமரத்தின் மேற்பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வாஜி வாகனத்தின் சக்தியை ஐயப்பன் விக்ரகத்தில் ஆவாகிக்கும் சடங்கு நடக்கும் அதன் பின் கொடிமரம் முழுமையாக மாற்றப்படும்.தொடர்ந்து புதிய கொடிமரம் அமைப்பதற்கான கல்பீடம் கட்டும் பணி தொடங்கும்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2017 ஏப்., ௭ காலை 10:45 மணிக்கு நடக்கும்.ஜூன் 25- காலை 11:50 மணிக்கு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படும். நான்காம் கலச பூஜை முடிந்ததும் கொடியேற்றப்பட்டு பத்து நாள் திருவிழா நடக்கும்.
🌍டிச.26 -ல் மண்டல பூஜை: நெய் அபிஷேக நேரம் குறைப்பு
சபரிமலை:சபரிமலையில் டிச., 26 காலை 11:55 முதல் மதியம் ௧:௦௦ மணிக்குள் மண்டலபூஜை நடக்கும். இதனால் அன்று காலை 10:30 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடக்கும்.சபரிமலையில் நவ.,16-ல் தொடங்கிய மண்டல காலம், நிறைவு கட்டத்தை நெருங்கி உள்ளது. 41 நாட்கள் நடக்கும் பூஜைகளின் நிறைவுதான் மண்டல பூஜை.இந்த நாளில் ஐயப்பனுக்கு திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் வழங்கிய தங்க அங்கி அணிவிக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜைக்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது.அன்று காலை 11:55 முதல் மதியம் ௧:௦௦ மணிக்குள் இந்த பூஜை நடக்கும்.முன்னதாக தந்திரி கண்டரரு ராஜீவரரு களபபூஜை நடத்தி, அதை மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி பவனியாக எடுத்து வருவார்.
களப அபிஷேகம் முடிந்த பின் மண்டலபூஜை துவங்கும். தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜை நடத்துவார். மதியம் ௧:௦௦ மணிக்கு நடை அடைக்கப்படும். இதனால், வழக்கமாக மதியம் 12:30 வரை நடக்கும் நெய் அபிஷேகம், அன்று காலை 10:30 மணிக்குள் நிறைவுபெறும்.டிச.,26- இரவு 10:00 மணிக்கு நடை அடைத்த பின் மகரவிளக்கு காலத்துக்கான பணிகள் தொடங்கும்.
மகரவிளக்குக்கு கால பூஜைகளுக்காக டிச., 30 மாலை ௫:௦௦ மணிக்கு நடை திறக்கும். டிச.,3௦ இரவு ௩:௦௦ மணிக்கு நடை திறந்ததும், மகரவிளக்கு கால நெய் அபிஷேகம் தொடங்கும்.
🌍புதுவை போலீஸ்காரர் அடித்து கொலை:கல்லூரி தாளாளர் உட்பட இருவர் கைது
புதுச்சேரி;புதுச்சேரியில், 11 மாதங்களுக்கு முன் மாயமான, போக்குவரத்து போலீஸ்காரரை அடித்து கொலை செய்த, தனியார் கல்லுாரி தாளாளர் மற்றும் கூலிப்படை தலைவனை, போலீசார் கைது செய்துள்ளனர்
📡திமுகவின் லட்சியத்துக்காக இறுதி வரை வாழ்ந்து மறைந்தவர் கோ.சி.மணி - ஸ்டாலின் புகழாரம்
கும்பகோணம்: திமுகவின் லட்சியத்துக்காவும், கொள்கைக்காகவும், வாழ்நாள்முழுவதும் வாழ்ந்து மறைந்த முன்னோடி கோ.சி.மணி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
🌍ரூபாய் நோட்டு விவகாரம்: 22-ம் தேதி விளக்கம் அளிக்கிறார் உர்ஜித் பட்டேல்!
'500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது' என பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, தீவிரவாதிகளிடம் புழங்கும் பணத்தைத் தடுப்பது, கள்ள நோட்டு விவகாரம் ஆகியவற்றிற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியிருந்தார். இதனையடுத்து பழைய நோட்டுகள் வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்ளப்பட்டன. புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இன்னும் மக்களிடையே பணப்புழக்கம் சீராகவில்லை. இந்நிலையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர், நாடாளுமன்ற குழுவினரிடம் விளக்கம் அளிக்கவுள்ளார்.
வரும் 22-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இதுகுறித்து விளக்கம் அளிக்க இருப்பதாக, நாடாளுமன்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
📡புயல் சேதத்தை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு
லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தமிழகத்தில் அண்மையில் தாக்கிய "வர்தா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய குழு விரைவில் தமிழகத்துக்கு வருகிறது.
🌍கறுப்பு பண ஒழிப்பு முயற்சி:மக்களுக்கு சுகமான சுமை'
தேனி;''கறுப்பு பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஏற்படும் சிரமத்தை சாமானிய மக்கள் சுகமான சுமையாக கருதுகின்றனர்,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
📡தேர்தலுக்காக உ.பி., அரசின் கண்துடைப்பு நாடகம்: மாயாவதி
லக்னோ : உ.பி., அரசு சிறுபான்மையினர் உரிமைகள் தினம் கடைப்பிடிப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் என மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்
🌍ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க.,வினர் கைது
திருச்சி: வைகோ கார் மீதான தாக்குதலை கண்டித்து, திருச்சியில், ஆர்ப்பாட்டம் நடத்திய, ம.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.சென்னை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நலம் விசாரிக்க சென்ற வைகோ கார் மீது, தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர்.இதை கண்டித்து, திருச்சி சிந்தாமணி அண்ணாதுரை சிலை அருகே, ம.தி.மு.க.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 30க்கும் மேற்பட்டோர், இதில் பங்கேற்று, தி.மு.க.,வினரை கண்டித்தும், ஸ்டாலினுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவர்களை, கோட்டை போலீசார் கைது செய்தனர்.
📡மல்லையாவின் சொத்துகள் 3வது முறையாக இன்று ஏலம்
மும்பை : விஜய் மல்லையா, வங்கிகளிடம் வாங்கிய கடனை ஈடுகட்ட அவரது சொத்துகளான கிங் பிஷர் ஹவுஸ் மற்றும் கிங் பிஷர் வில்லாவை மறு ஏலம் விட வங்கிகள் முடிவு செய்துள்ளன.
🌍மணிப்பூரில் வாகனங்களுக்கு தீ வைப்பு: ஊரடங்கு உத்தரவு
மணிப்பூர் மாநிலத்தில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. இதனால் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பினர், மணிப்பூர் முழுவதும் காலவரையற்ற பொருளாதார முற்றுகை போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
போராட்டம் காரணமாக மணிப்பூர் மாநிலத்துக்கு உணவு மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
📡பெங்களூருவில் லண்டன் பாலம், சீன டிராகன் கேக் உருவாக்கம்
பெங்களூரு: வரவிருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு 42வது ஆண்டு கேக் நிகழ்ச்சியில் உலகின் முக்கிய இடங்களான லண்டன் பாலம் மற்றும் சீன டிராகன் கேக் உருவாக்கப்பட்டுள்ளது. 500 கிலோ எடைகொண்ட லண்டன் பாலம் கேக்கும் மற்றும் 7.5 அடி நீளமுள்ள சீன டிராகன் கேக்கும் உருவாக்கியுள்ளனர்.
🌍நன்கொடை பெற அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு
அனுப்பியவரின் பெயர் கூறாமல், வருகிற நிதி நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெறுவதற்கு அரசியல் சாசனமோ, பிற சட்டங்களோ எந்தவொரு தடையையும் விதிக்கவில்லை.
ஆனால், 1951-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 29 சி, இப்படி வருகிற ரூ.20 ஆயிரத்துக்கு மேற்பட்ட நன்கொடைகள் குறித்து சுய பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று மட்டுமே கூறி உள்ளது.
இந்தநிலையில் அரசியல் கட்சிகள் பெயர் தெரிவிக்காதவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்துக்கு மேல் நிதியாக நன்கொடை பெறுவதற்கு தடை விதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.
அரசியல் கட்சிகள் கூப்பன் வெளியிட்டு பெறுகிற நன்கொடைகள் தொடர்பான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டின் 1996-ம் ஆண்டு உத்தரவின்படி பதிவு செய்வதை சட்ட அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
🌍புதுடெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான சேவை பாதிப்பு
புதுடெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் மற்றும் 8 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக வருகை தரவும், செல்வதும் உள்ளது.
📡தொண்டி அருகே ஐஸ் கம்பெனியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 7 பேருக்கு மூச்சு திணறல் மூன்று பேர் உயிரிழப்பு.
🌍புதுடெல்லியில் கடும் பனிமூட்டம்:
ரயில் சேவை பாதிப்பு
புதுடெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 24 ரயில்கள் தாமதமாக வரவுள்ளது, 5 ரயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது மற்றும் 1 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
📡தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் சீமான்!
இந்த ஆண்டும் அனுமதி கிடைக்காவிட்டால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்.
🌍சாமானிய மக்களுக்கு பிரதமர் மோடியால் பேரழிவு!
ரூபாய் நோட்டுகளை தடை செய்தது, சாமானிய மக்களுக்கு பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
📡தற்கொலைப்படை தாக்குதல்: 40வீரர் பலி
ஏமனில் ராணுவ வீரர் உடையில் ஊடுருவிய தற்கொலைப்படையை சேர்ந்தவர் வெடித்ததில் 40 வீரர் பலியாகினர்.
🌍இலங்கையில் மர்மமாகத் தரை இறங்கிய அமெரிக்க புலனாய்வு விமானம்
சமீபத்தில் மத்தல விமான நிலையத்தில் ஒரு அமெரிக்க புலனாய்வு விமானம் தரையிறங்கியுள்ளது. கடற்கொள்ளையர்கள் மற்றும் சீனக் கப்பல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக அவ்விமானம் வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டதாக இலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
📡டெல்லி புறப்பட்டார் முதல்வர் பன்னீர்செல்வம்!
மூன்றாவது முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியை சந்திக்க முதல்முறையாக டெல்லி சென்றுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன், தலைமை செயலாளர் ராம் மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் 8 செயலாளர்களும் சென்றுள்ளனர்.
🌍ஜெ. சமாதியில் இசை அஞ்சலி செலுத்திய வீணை காயத்ரி
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் சமாதியில் இசை அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வீணை காயத்ரி. நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் இந்த இசை அஞ்சலி நடைபெற்றது. வீணை மூலம் பல 'அம்மா' பாடல்களை இசைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்
📡கங்கைக் கரையில் இன்று வள்ளுவர் சிலை திறப்பு
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் சில மதவாதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அது பிளாஸ்டிக் துணியால் மூடப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை திருவள்ளுவர் சிலை மீண்டும் திறக்கப்பட உள்ளது
🌍ஜெ. மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரும் சசிகலா புஷ்பா.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாதான் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை, தமிழக-மத்திய அரசுகள் முறையான விளக்கம் அளிக்க வலியுறுத்தியுள்ளார் சசிகலா புஷ்பா.
🌍📡🌍📡🌍📡🌍📡🌍📡🌍
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக