இரவு செய்திகள் 21/12/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 21/12/2016


         


📡📡📡📡📡📡📡📡📡📡📡

📺📺📺📺📺📺📺📺📺📺📺

📡📺📡📺📡📺📡📺📡📺📡


📡KYC படிவம் போதுமே.. எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.5,000 மேல் டெபாசிட் செய்யலாம்.
டெல்லி : வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்ய சில விதிமுறைகளை நேற்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து இன்று அந்த விதிகளை தளர்த்தியது.
ஒரே ஒரு முறை மட்டுமே டெபாசிட்
வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் ஒரே ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்றும், அதற்கு வங்கியில் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய ரிசர்வ் வங்கி நேற்று புதிய கட்டுபாடு ஒன்றை அறிவித்தது.
இதையடுத்து இன்று அந்த விதிகள் தளர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளது. அதுவும் குறிபிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது.
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து இருங்கள்( KYC), இதனை பூர்த்தி செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி இந்த KYC பூர்த்தி செய்த வாடிக்கையாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துக்கொள்ளலாம்.



📺நளினி வழக்கு: ஜனவரி 9-ம் தேதி ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு விசாரணை ஜனவரி 9-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.




📡கருணாநிதி நலம்... வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ்- ஸ்டாலின்
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி மூச்சு திணறல் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சுவாச கோளாறு தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கையாக சுவாசிக்க, தொண்டையில் துளையிட்டு, ட்ராக்கியோஸ்டமி சிகிச்சை தரப்படுகிறது.
ஞாபக மறதி நோய் இருப்பதால், அதற்கான நரம்பியல் சிகிச்சையும் தொடர்கிறது. மருத்துவமனையில் உள்ள கருணாநிதியை இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், தலைவர் கருணாநிதியின் உடல் சீராக உள்ளது, நலமடைந்து வருகிறார். வரும் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்தார்.




📺சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம்
டெல்லி : சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம்.மத்திய அரசு முடிவு.2018ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட உள்ளது.



📡ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 6 பேர் பலி
மஹாராஷ்ட்டிர மாநிலம் Gondia நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில், 6 பேர் உடல் கருகி பலியாகினர்.
Gondia நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் இன்று காலை திடீரென தீ விபத்து நேரிட்டது. அப்போது, உணவு விடுதியில் உணவருந்திக்‍ கொண்டிருந்த பலர் அலறியடித்து வெளியே ஓடினர்.
இருப்பினும், 6 பேர் பலத்த தீக்‍ காயமடைந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.




📺கமிஷனுக்கு பணமாற்ற முயன்ற கும்பலிடம் பணம் பறித்த போலீசார் கைது
திருச்சியில் பழைய ரூபாய் நோட்டுகளை கமிஷனுக்காக புது ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தரும் கும்பலை மடக்கி, அந்த கும்பலிடமிருந்து ரூ.3.50 லட்சம் பணத்தை மிரட்டி பறித்ததாக மணப்பாறை காவலர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது.




📡ரூ.5000 டெபாசிட் கட்டுப்பாடு : தளர்த்தியது ஆர்பிஐ
புதுடில்லி : ரூ.5000 க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது.பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை டெபாசிட் செய்வதற்கு புதிய கட்டுப்பாடு ஒன்றைய சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள், ரூ.5000 மட்டுமே டிபாசிட் செய்ய முடியும்.
அதற்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டால், அது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை தளர்த்துவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, கேஒய்சி விபரங்களை முழுமையாக அளித்தவர்கள் ரூ.5000 க்கு மேல் டெபாசிட் செய்யலாம். கேஓய்சி விபரங்களை அளிக்காதவர்கள் ஒருமுறை ரூ.5000 மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



📺ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் விமானப்படைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டது.



📡தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



📡இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி வருகை
திருப்பதி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதிக்கு வருகை தந்துள்ளார். திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

📺இன்று திமுகவில் இணைகிறார் நாஞ்சில் சம்பத்...!!!
கடந்த ஒரு வார காலமாக அதிமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகுவதாக எழுந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கபட்டுள்ளது.
இன்று நாஞ்சில் சம்பத் திமுகவில் இணையவுள்ளார்.
மதிமுகவின் முக்கிய பேச்சாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத் வைகோவுக்கு அடுத்த இடத்தில மேடை பேச்சில் வல்லவரான நாஞ்சில் சம்பத் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
அப்போது அவருக்கு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா கட்சியின் உறுப்பினர் அட்டையுடன் இன்னோவா கார் ஒன்றையும் பரிசளித்தார்.
அன்று முதல் அவரை சிலர் கிண்டலாக இன்னோவா சம்பத் என்று அழைத்தனர். அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் என்ற பெரிய பதவியை ஜெயலலிதா வழங்கினார்.
ஆனால் அதிமுக கூட்டணி பற்றி தானாக இவர் கருத்து கூறியதால் இவரது பதவி பறிக்கப்பட்டது
அப்போது முதல் வெறும் பேச்சாளராக மட்டும் இருந்து வந்தார். இநிலையில் கடந்த டிசம்பர் 5 அன்று ஜெ மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பல மர்மங்கள் ஏற்பட்டது
இந்த சூழ்நிலையில் நாஞ்சில் சம்பத் ஒதுங்கியிருந்தார். அவர் திமுகவில் சேரப்போவதாக பேச்சு அடிப்பட்டது
இதற்கு மறுப்பு தெரிவித்து தனது முகநூலில் தான் ஜெ. மறைந்த துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறி தான் திமுகவுக்கு செல்லவில்லை என்று மறுத்திருந்தார்.
ஆனால் மதிமுகவில் இவரது முந்தய நண்பர்களும் தற்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்ட ஜோயல் மற்றும் டாக்டர் சரவணன் இருவரும் பேசி ஏற்பாடு செய்ததின் பெயரில் திமுகவில் இணைத்து கொள்ள ஸ்டாலின் ஒப்புதல் தனது விட்டதாக கூறபடுகிறது
இதையடுத்து இன்று அல்லது நாளை நாஞ்சில் சம்பத் திமுகவில் தன்னை இணைத்துக்கொள்வார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.




📡ரூபாய் நோட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு பின்வாங்கல்: பாஜக வட்டாரங்கள் அதிர்ச்சி
விஜயவாடா: கறுப்பு பணம் ஒழிப்புக்கு காரணமாக இருந்தது தெலுங்கு தேசம் கட்சி தான் என்று பெருமையாக மோடிக்கு வரவேற்ப்பு அளித்தது. இதை தொடர்ந்து இந்த ரூபாய் நோட்டு விவகாரத்தில் உயர் மட்டக் குழு அமைதது மத்திய அரசு. அந்த குழுவுக்கு தலைவராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நியமிக்கப்பட்டார். தற்போது இந்த விவகாரத்தில் வெற்றி பெறமுடியாமல் தலைகுனிவதாக நாயுடு கூறியிருப்பது பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



📺நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூபாய் எவ்வளவு தெரியுமா?
மும்பை: பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு பிறகு நவம்பர் 10 முதல் டிசம்பர் 19 வரையிலான காலகட்டத்தில் 5.92 லட்சம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


📡ரூ. 5000 டெபாசிட் செய்யும் போது விசாரணை கிடையாது: ரிசர்வ் வங்கி புது அறிவிப்பு
டெல்லி:
ரூ. 5000 மற்றும் அதற்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது விசாரணை நடத்தப்படும் என்று கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி இன்று திரும்பப் பெற்றுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. மக்களிடம் உள்ள பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கு டிசம்பர் 30ம் தேதி வரை கெடுவிதித்திருந்தது. இந்நிலையில், கடந்த 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டது.
அதில், 5000 ரூபாய் அல்லது அதற்கும் மேலான தொகையை டிசம்பர் 30ம் தேதி வரை ஒரே ஒருமுறை மட்டுமே செலுத்த முடியும் என்றும், அப்படி செலுத்தும் போது, குறைந்தபட்சம் 2 வங்கி அதிகாரிகளின் முன்னிலையில், தொகை தாமதமாக செலுத்தப்படுவதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
மேலும், இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யும் பொதுமக்களிடம் எந்தவிதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று கூறியிருந்தார்.
இதனால் மக்களிடையேயும், வங்கி அதிகாரிகளிடையேயும் ஒரு குழப்பமான சூழல் உருவானது. இந்நிலையில் டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப் பெறுவதாக திடீரென ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இதனால், 5000 ரூபாய் செலுத்தும் போது வங்கி அதிகாரிகள் பொதுமக்கள் கேள்வி கேட்டு விசாரணை நடத்தமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



📺விதிகளை மீறிய 5 வெளிநாட்டு வங்கிகளுக்கு அபராதம்: ரிசர்வ் வங்கி நடவடிக்கை
மும்பை: வங்கி விதிமுறைகளை மீறியதற்காக 5 வெளிநாட்டு வங்கிகளுக்கு, அந்நிய செலவாணி சட்டப்படி ரூ 60,000 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



📡தமிழகத்துக்கு புதிய தலைமை செயலாளர்: ஓபிஎஸ் முடிவு
சென்னை:
தமிழகத்துக்கு புதிய தலைமை செயலாளரை நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முடிவெடுத்துள்ளார்


📺மோடி சகாராவிடம் ரூ.40 கோடி பெற்ற வழக்கு என்னவாயிற்று? ராகுல் கேள்வி
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா அமைப்பிடம் ரூ.40 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் என்னவாயிற்று என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.



📺வருமானவரித்துறை சோதனையில் அரசியல் இல்லை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழக தலைமைச் செயலர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் அரசியல் எதுவும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் தங்களது வேலையை செய்கின்றனர் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



📡வங்கிக்கட்டுப்பாடுகளை மீறியதற்காக 5 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. பேங்க் ஆப் அமெரிக்கா, -பேங்க் ஆப் டோக்கியோ மிட்சுமிஷி, டியூட்ஸ்செ பேங்க், ஸ்காட்லாந்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ராயல் பேங்க் ஆகிய வங்கிகளுக்கு அபராதம் விதித்துள்ளது.




📡இந்திய அணி, 120 தரப்புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (105), பாகிஸ்தான் (102), தென் ஆப்ரிக்கா (102), இங்கிலாந்து (101) அடுத்த இடங்களில் உள்ளன



📺ராவ் மகன் விவேக் வீட்டில் தங்கம் மற்றும் வைரம் குவியல்
சென்னை: திருவான்மியூரில் உள்ள ராவ் மகன் விவேக் வீட்டில் தங்கம் மற்றும் வைரம் குவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் 10 கிலோ தங்க நகைகள் சிக்கியுள்ளது.  சிக்கிய நகைகளை மதிப்பிடும் பணி 2 மணி நேரம் நடைபெற்றது.

📡சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி கைது
சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர் ரெட்டி
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்



📺தமிழக தலைமைச் செயலாளர் பதவி நீக்கம் அறிவிப்பு எந்த நேரத்தில் வெளியாகலாம் என தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



📡புதுகுயிலம் கிராம மாரியம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணம்  மற்றும் அம்மன் கழுத்திலிருந்த 2.5 பவுன் தங்கதாலி கொள்ளை செங்கம் போலீசார் விசாரணை


📺மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க வேண்டும் - தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி முக.ஸ்டாலின் வலியுறுத்தல்



📡விழுப்புரம் அருகே வெங்கந்தூரில் விதிமுறைகளை மீறி எடுத்து செல்லப்பட்ட 200 கிலோ வெடிமருந்து மினி வேனுடன் பறிமுதல்.



📺ஜெயலலிதா சிலை:
குவியுது ஆர்டர்
ஆத்துார்: ஜெயலலிதா சிலை வைப்பதற்கு, அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுவதால், சிலைக்கான ஆர்டர் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்தவர் சிற்பி வரதராஜன், 45. இவர், அரசியல் கட்சி தலைவர்கள் சிலை, கோவில் கோபுரம், சுவாமி சிலைகள் செய்து வருகிறார். இவர், எம்.ஜி.ஆர்., உருவச்சிலையை அதிகளவில் செய்து கொடுத்துள்ளார். இவர் வடிவமைத்த, ஏழு அடி உயரமுடைய ஜெயலலிதா உருவச்சிலை, சில நாட்களுக்கு முன் புதுச்சேரி மாநிலம், திருக்கனுார் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டது. தற்போது, 13 இடங்களில் ஜெயலலிதா சிலை வைப்பதற்காக ஆர்டர் கொடுத்துள்ளதால், ஜெயலலிதா சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, சிற்பி வரதராஜன் கூறியதாவது: கடந்த, 1991 முதல், சிற்ப தொழில் செய்து வருகிறேன். 20, எம்.ஜி.ஆர்., சிலைகளை, தர்மபுரி மாவட்டத்துக்கு செய்து கொடுத்தேன். அந்த சிலைகள் உட்பட, 30க்கும் மேற்பட்ட சிலைகளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, சிலை வடிவமைப்பை பாராட்டினார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, குடியாத்தம், பொள்ளாச்சி, மணப்பாறை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உட்பட, 13 இடங்களிலிருந்து, சிலை அமைக்க ஆர்டர் கொடுத்துள்ளனர். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், 50 முதல், 100 சிலைகள் ஆர்டர் வரும். ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்டர் குறைந்துள்ளது. எம்.ஜி.ஆர்., சமாதி அருகில், ஜெயலலிதா உடல் அடக்கம் செய்துள்ளதால், எம்.ஜி.ஆர்., சிலையுடன் ஜெயலலிதா சிலையும் வைப்பதற்காக ஆர்டர் கொடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



📡சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட  சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் சீனிவாசலு ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர் இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலு இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.




📺திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 1-வது வார்டு விடத்திலாம்பட்டியில் கடந்த இரண்டு தினங்களாக கேபிள் சேவை முழுவதுமாக ரத்து. காரணம் தெரியாமல் பொதுமக்கள் அவதி.



📡2015-ல் கே.வி.குப்பத்தில்  மாற்றுத்திறனாளி ஜெயவேலு என்பவரை அவரது கள்ளக்காதலி கொலை செய்த வழக்கில்   கள்ளக்காதலி முனியம்மா (55), இவரது மகள் துர்காதேவி(34), இவரது கள்ளக்காதலர்  சக்கரவர்த்தி(35) ஆகியோருக்கு வேலூர் மாவட்ட கூடுதல் விரைவு நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.
முனியம்மாள், சக்கரவர்த்திக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு. 3 பேருக்கு சேர்த்து 5 ஆயிரம் அபராதம் விதிப்பு.



📡எதிர்க்கட்சியினர் நரேந்திர மோடியின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து வரும் நிலையில் வருமான வரி உச்சவரம்பை 2.5 லட்சத்தில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்த வாய்ப்புள்ளதாக இந்தியா டூடே சேனல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது



📺டிச., 30க்கு மேல் வழங்க ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகள் உள்ளன: அருண் ஜெட்லி
டெல்லி: முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டிசம்பர் 30க்கு மேல் வழங்க ரிசர்வ் வங்கியிடம் போதுமான இருப்புகள் உள்ளன எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


📡பயிர்கடனை செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை பெற அவகாசம் நீட்டிப்பு
டெல்லி : குறுகிய கால பயிர்கடன்களுக்கான ஊக்கத்தொகை பெறுவதற்கான அவகாசம் 60 நாட்கள் நீடடிக்கப்பட்டுள்ளது. பயிர்கடனை முறையாக திருப்பி செலுத்துவோருக்கு 3% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



📺13 மாவட்டங்களிலுள்ள கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை : மதுரை, விருதுநகர், தேனி , ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்ட தலை நகரங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் முன்னாள் மேயர் பட்டுராஜ் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் சீமை கருவேல மரங்களை 20 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றும் தெரிவி்த்துள்ளது. நீர் நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களையும் வேரோடு வெட்ட வேண்டும் எனவும நீதிமன்றம் கூறியுள்ளது. சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு ஜனவரி 11-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.




📡தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி : தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். காணாமல் போன மாட்டை வனப்பகுதியில் தேடி சென்ற போது யானை தாக்கியதில் விவசாயி மாதையன் உயிரிழந்தார்.


📺பிரதமர் ஆடையை மாற்றுவது போல் ரிசர்வ் வங்கி விதிகளை மாற்றி வருகிறது: ராகுல் காந்தி
டெல்லி: பிரதமர் ஆடையை மாற்றுவது போல் ரிசர்வ் வங்கி விதிகளை மாற்றி வருவதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை விதிக்கப்பட்ட நாட்களில் இருந்து ஒவ்வொரு நாளும் புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

📡வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவு
மும்பை: வர்த்தக முடிவில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிந்து 26,307 புள்ளிகளாக உள்ளது. நிஃப்டி 21 புள்ளிகள் சரிந்து 8,082 புள்ளிகளாக உள்ளது.



📺சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டு முன் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி தொண்டரை அப்பகுதி மக்கள் சிலர் தாக்கினர்




📡சென்னையில் குவிந்த அ.தி.மு.க.வினர்: போக்குவரத்து நெரிசல்
சசிகலாவை சந்திக்க தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, போயஸ் தோட்டத்தை இணைக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது!


📺சோதனை முடிந்தது
தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் அறையில் நடந்த  வருமான வரிதுறை சோதனை முடிந்தது
சுமார் 5 மணி நேரம் இந்த சோதனை நடந்தது

📡விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது. இப்புதிய 50 ரூபாய் நோட்டுகள் ‛L' வரிசையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com


📡📺📡📺📡📺📡📺📡📺📡

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here