http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*தலைவர் ஆனவுடன் தலைகால் புரியாமல் பேசும் திருநாவுகரசர்.இவர யாராவது கேட்டிங்களா நம்பறீங்களா என்று* விஸ்வருபம் -ஜெயலலிதாவின் திடீர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை புகழ் பெற்றது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் என அனைவருமா பொய் சொல்கிறார்கள்? அனைவரும் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை. வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா? அவரின் மரணம் பற்றிய வதந்திகள் தேவையில்லாதவை. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்*
*ரூபாய் நோட்டு ஒழிப்பு வழக்கு அரசியல்சாசன அமர்விற்கு மாற்றம் - 6 வார காலத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. செல்லாத நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம் நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு*
*ok.what about ruling parliament mps -பாராளுமன்றம் முடக்கம்: எம்.பி.க்களை சுயப்பரிசோதனை செய்ய கேட்டுக் கொண்டார் சபாநாயகர்*
*அரசு கல்லூரி பேராசிரியர்களை கண்டித்து, மாணவிகள் போராட்டம்.சிவகங்கையில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரியில் 12 பாடப்பிரிவுகளின் கீழ் காலை மாலை என இரு வேளைகளில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், போராசிரியர்களின் வசதிக்காக 600-க்கும் மேற்பட்ட மாணவிகளை எவ்வித காரணமுமின்றி மாலை வகுப்புகளுக்கு மாற்றுவதாக புகார் எழுந்துள்ளது. பேராசிரியர்களின் இந்த செயலை கண்டித்து, ஏராளமான கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்*
*செல்போன் டவர்களுக்கு சொத்துவரி விதிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. செல்போன் டவர் அமைக்க வாடகை விட்டவர்களிடம் இருந்து சொத்துவரி வசூலிக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*
*கரண்ட் வேணும்னா காசு கொடு.. சென்னை புற நகரில் மிரட்டி பணம் பறிக்கும் மின் வாரிய ஊழியர்கள்.குரோம்பேட்டை, பல்லாவரம் உட்பட தெற்கு சென்னையாகட்டும், வட சென்னையின் புறநகராகட்டும், நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மந்த கதியில் நடக்கின்றன. சாலையில், மரங்கள் அகற்றப்படவில்லை, மின்சார கம்பங்கள் திரும்ப நடப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் புற நகர் பகுதிகளில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், புற நகர் பகுதிகளின் ஒரு சில இடங்களில் மட்டும் மின் வினியோகம் செய்யப்படுவது ஆச்சரியம் அளித்துள்ளது.மின்வாரிய ஊழியர்கள் சிலரின் வசூல் வேட்டையும் ஜோராக நடக்கிறது. பணம் கொடுத்தால் உடனே மின்சார இணைப்பை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஊழியர்கள் சிலர் குடியிருப்பு சங்கங்களிடமும், அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடமும் பேரம் பேசிவருகிறார்கள். கையில் பணம் கொடுக்கப்பட்டதும், அங்கெல்லாம் மின்சார வினியோகம் சீரமைக்கப்படுகிறது*
♈🇮🇳🌴
16-12-2015 - jj speech -தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புடன் உள்ளனர்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநாட்டில் பேசும்போது, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புடன் உள்ளனர் என்று கூறினார். மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது.
இதற்கு காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளே காரணம். தமிழகத்தில் இடது சாரி தீவிரவாதம், மதவாத வன்முறைகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவல் ஆரம்ப நிலையிலேயே தடுக்கப்பட்டு உள்ளது என்று பேசினார்.
♈🇮🇳🌴1] *மகன்களா பெத்துட்டு நடுதெருல விடுற தந்தைங்க இருக்கற இந்த காலத்துல, நல்ல தொழில வச்சிக்கிட்டு பொம்பளைங்கள அடிக்கலாமா.கைவசம் தொழில் இல்லனாதாண்டா கவலைபடனும்* அய்யோ நம்மால மனைவியையும் குழந்தையையும் காப்பாற்ற வக்கிலையே என்று. அப்பகூட பெண்கள அடிப்பது கேவலம் .ஆண் வாரிசு இல்லை: மனைவி, மகளை கொடுமையாய் தாக்கிய வழக்கறிஞர்.டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வசந்த் கஞ்ச் பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.அந்த வழக்கறிஞர் தனது மனைவி மற்றும் மகளை கதறக் கதற அடித்துள்ளார். இதை மற்றொரு மகள் வீடியோ எடுத்து போலீசில் கொடுத்துவிட்டார்.இது குறித்த போலீஸ் விசாரணையில், ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் பல ஆண்டுகளாக மனைவி மற்றும் மகளை கொடுமைப்படுத்துகிறார் என்பது தெரியவந்துள்ளது*
♈🇮🇳🌴2] * வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான 'விசாரணை' திரைப்படம் இந்தியா சார்பாக, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது*
♈🇮🇳🌴3] *கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுகிறது - காவேரி மருத்துவமனை*
♈🇮🇳🌴4] *The great dubai police. Investigation technology .
துபாயை சேர்ந்த 35 வயது பெண் ஒரு மளிகை கடையில் பொருட்களை ‘ஆர்டர்’ செய்திருந்தார். அங்கு பணிபுரியும் 23 வயது இந்திய வாலிபர் அந்த பொருட்களை எடுத்து வந்தார்.அப்போது தனது வீட்டின் தோட்டத்தில் இருந்த அப்பெண் வாலிபரை உள்ளே வர அனுமதித்தார். அதை தொடர்ந்து அந்த நபர் பொருட்களை டெலிவரி கொடுத்து விட்டு திரும்பினார். அப்போது திடீரென அப்பெண்ணை தொட்டு முத்தமிட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் போலீசுக்கு டெலிபோன் செய்வதாக மிரட்டினார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின்போது தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை வாலிபர் மறுத்தார்.தான் பொருட்களை எடுத்து சென்ற போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும், தன்னையும் மது அருந்த அழைத்ததாகவும் கூறினார். அதற்கு மறுத்ததால் தன் மீது செக்ஸ் புகார் கூறுவதாக தெரிவித்தார். ஆனால் தடயவியல் நிபுணர்கள் அப்பெண்ணின் கழுத்தில் டி.என்.ஏ. சோதனை நடத்திய போது வாலிபர் முத்தமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் குற்றவாளி என கோர்ட்டு அறிவித்தது. அதை தொடர்ந்து அவருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் தண்டனை அனுபவித்தபின் அவரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பவும் உத்தரவிடப்பட்டது*
♈🇮🇳🌴5] *மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக மாற்றுத்திறனாளிகள் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது*
♈🇮🇳🌴6] *வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. வர்தா புயல் காரணமாக 4 நாட்களுக்கு முன் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இன்று மின்உற்பத்தி தொடங்கிய நிலையில் 810 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது*
♈🇮🇳🌴7] *மாற்றுத்திறனாளிகள் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடையும் படி சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வோருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும்ம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்யும்*
♈🇮🇳🌴8] *நிதி சேமிப்பு வாரிசுதாரராக சசிகலாவை ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார் என பொன்னையன் தெரிவித்துள்ளார். ஸ்ரீராம் நிறுவன முதலீடு தொடர்பாக பொன்னையன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். 1997ல் ரூ.7 லட்சம் முதலீடு செய்த போது நிதி சேமிப்பு வாரிசுதாரராக சசிகலாவை குறிப்பிட்டார் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார்*
♈🇮🇳🌴9] *நெல்லூரில் ரூ.1.54 கோடி மதிப்புள்ள புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு பறிமுதல்*
♈🇮🇳🌴10] *48 நுகர்வோரிடம் ரூ.6 லட்சம் மோசடி; பேடிஎம் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு*
♈🇮🇳🌴11] *அமெரிக்க நகர மேயராக இந்திய பெண் தேர்வு*
♈🇮🇳🌴12] *கொத்தமங்கலம் பகுதியில் எழுமிச்சம் பழம் கி.ரூ. 10க்கு விற்பனை.
விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை.கீரமங்கலம்*
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக