மாலை செய்திகள் 31/12/2016 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாலை செய்திகள் 31/12/2016

♈🇮🇳🌴 *5pm-31-12-2016-news* 🌴🇮🇳♈🙏📡

*அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலாவுடன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சந்திப்பு*

*நியூசிலாந்து நாட்டில் 2017 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்*

*புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். கிரண்பேடியின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக அமைச்சர் கந்தசாமி பேட்டி அளித்துள்ளார்*

♈🇮🇳🌴1] *இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் போலிஸாரின் பாவனையிலுள்ள தமக்குரிய காணியை விடுவிக்கக் கோரி தரும ஸ்தாபனமொன்றை சேர்ந்தவர்கள் இன்று சனிக்கிழமை சாலையில் இறங்கி பிரார்த்தனை வழியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்*
♈🇮🇳🌴2] *கவர்ச்சியாக நடிக்க தான் தயார் எனவும், ஆனால் தொப்புளை காட்ட மாட்டேன் எனவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்*
♈🇮🇳🌴*முடிவுக்கு வந்தது சிக்கல் - அகிலேஷ் யாதவ் இடைநீக்கம் ரத்து*
♈🇮🇳🌴3] *ஆவியுடன் மிரட்ட வருகிறார் இனியா.பேய் சீஸன் 2017லும் தொடர்கிறது. ஆவியால் இனியாவுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதுதான் சமீபத்திய தகவல்*
♈🇮🇳🌴4] *தீபிகா படுகோனே மிகவும் திறமையான நடிகை என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்*

♈🇮🇳🌴5] *செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடித்துவரும் மன்னவன் வந்தானடி படத்துக்காக பிப்ரவரியில் படக்குழு அமெரிக்கா  செல்லவுள்ளது*

♈🇮🇳🌴6] *இந்திய ராணுவம் எந்த சவால்களையும் சந்திக்க தயாராக உள்ளது என ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் இன்று கூறியுள்ளார்*

♈🇮🇳🌴7] *நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரும் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையும் என ராகுல் வாழ்த்துச் செய்து தெரிவித்துள்ளார்*

♈🇮🇳🌴8] *பி.எஸ்.என்.எல் இணையதள சேவையில் பல சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக சென்னையில் பி.எஸ்.என்.எல் மேலாண் இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தற்போது இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்*

♈🇮🇳🌴9] *அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் 33 பேர் பாஜகவில் இணைந்தனர். அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து முதல்வர் பெமா காண்டு, துணைமுதல்வர், 7 எம்.எல்.ஏக்கள் நேற்று நீக்கப்பட்டனர். அருணாச்சலப்பிரதேச பேரவையின் 60 உறுப்பினர்களில் 43 பேர் அருணாச்சல் மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்*

♈🇮🇳🌴10] *திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பயிர் கருகியதால் மனமுடைந்த விவசாயி கணேசன் வயலிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்*
♈🇮🇳🌴11]  *ஆலங்குடி அடுத்த மாங்காட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். பயிர்கள் கருகியதால் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்*
♈🇮🇳🌴12] *இலங்கை சிறைபிடித்துள்ள 51 மீனவர்கள், 119 படகுகளை விடுவிக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். படகுகளை சொந்தமாக்கிக் கொள்ளும் இலங்கை அரசின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த நடவடிக்கை இருநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார்*

♈🇮🇳🌴13] *விழுப்புரம்: சின்னசேலம் அருகே லாரி மீது பஸ் மோதல்: 3 பேர் பலி*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here