''டிசம்பர் 8 அறிவுத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சர்வதேச தினம்''
''International Day for Mentally Retarded December 8''
பெண்ணில் கரு உருவாகியது முதல் குழந்தைக்கு அந்தந்த வயதில் அதற்கு உரியவற்றை செய்யவில்லை என்றால் சிக்கல் உருவாகிறது. இதனால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு உடல் மற்றும் அறிவு வளர்ச்சி திறனில் குறைவாடு உருவாகிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
மூளை பாதிப்பால் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் போன்ற சுய தேவையைக் கூட இந்தக் குழந்தைகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. இவ்வாறு அறிவுத் திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மென்டலி ரிட்டார்டட் என்று அழைக்கிறார்கள். இந்தக் குழந்தை பிறப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே அறிவுத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கான சர்வதேச தினம் (International Day for Mentally Retarded December 8 ) ஆண்டு தோறும் டிசம்பர் 8 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்த வரையில் ஆயிரம் குழந்தைகளில் சுமாராக 5 குழந்தைகளுக்கு இவ்வாறு பாதிப்பு ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கீழ் கண்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் போது தட்டம்மை போன்ற வைரஸ் நோய் தாக்குதல், காயம் ஏற்படுதல், அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பது, கருவை கலைக்க மாத்திரை சாப்பிட்டிருப்பது போன்றவற்றால் கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.
பிரசவம் தாமதமாகுதல், குழந்தையின் தலை வெளியே வர முடியாமல் தத்தளிக்கும் நிலை, நஞ்சுக் கொடி குழந்தையின் கழுத்தை சுற்றுக் கொள்வதால் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனில் பற்றாக்குறை ஏற்படுவது போன்றவைகளாலும் மூளை பாதிப்பு ஏற்படும். குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் அழ வேண்டும். அப்போதுதான், சுவாசக் காற்றை உள் இழுத்து மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லத் தொடங்கும். மேலும், பிறந்த உடன் தாய்ப்பால் குடிக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்க நாக்குக்கு ஆணையிடுவது மூளைதான்.
குழந்தை பிறந்த பிறகு வலிப்பு, மூளைக் காய்ச்சல், தலையில் காயம் ஏற்படுதல் போன்றவற்றின் மூலமாகவும் மூளை பாதிப்பு ஏற்படும்.
குழந்தைக்கு 3 மாதத்தில் தலை நிற்கவில்லை, 6 மாதத்தில் உட்காரவில்லை, 8 மாதத்தில் நிற்கவில்லை, 12 மாதத்தில் நடக்கவிலலி என்றால் அதற்கு பிரச்னை இருக்கிறது. இதில் ஓரிரு மாதங்கள் தாமதமானால் பரவாயில்லை. http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
மூளையின் ஆணைக்கு ஏற்பவே மனித உடலில் உறுப்புகள் அனைத்தும் செயல்படுகின்றன. மூன்று வயது வரை குழந்தைகளின் உடல் அசைவுகளை கவனிக்க வேண்டும். அதற்கு மேல் அவற்றின் பேச்சு, செய்கை திறனை கவனிக்க வேண்டும்.
மூளை பாதிப்பு அதிகம் உள்ள குழந்தைகளைக்கு எல்லாவற்றையும் பிறர் செய்துக் கொடுக்க வேண்டியிருக்கும். பாதிப்பு ஓரளவுக்கு உள்ள குழந்தைகளுக்கு ஆரம்பம் முதல் பயிற்சி கொடுக்கத் தொடங்கினால் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும். மேலும் இந்தக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை சொல்லித் தரவில்லை என்றாலும் வாழ்க்கைக்கு உரிய சாப்பிடுவது, வீட்டுக் கதவை தாள் போடுவது, சாலையில் வாகனங்கள் செல்லாத போது சாலையை கடப்பது போன்ற விஷயங்களை சொல்லி கொடுக்கலாம்.
இது போன்ற பிரச்னைகளை பிள்ளைகளிடம் இருப்பதாக தெரிந்தால் அதற்கு உரிய சிறப்பு மருத்துவரை தேடி செல்வதுதான் சரியானது. அவர்கள் குழந்தைகளுக்கு பேச்சுப் பயிற்சி, உடல் இயக்கப் பயிற்சிகளை அளிப்பார்கள்.
பெரிய நகரங்களில் இது போன்ற அறிவுத் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு என சிறப்புப் பள்ளிகள் இருக்கின்றன. அவற்றில் சேர்த்து வைப்பது நல்லது. மேலும் இந்த குழந்தைகளிடம் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம்.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக