இந்தியாவின் எதிரிகளை அழிக்க பிறந்த அரிஹந்துக்கு சல்யூட் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவின் எதிரிகளை அழிக்க பிறந்த அரிஹந்துக்கு சல்யூட்

"இந்தியாவின் எதிரிகளை அழிக்க பிறந்துள்ள அரிஹந்துவுக்கு இந்தியர்கள் சார்பாக ஒரு சல்யூட்."

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்சுக்கு அடுத்து ஆறாவது நாடாக நாங்களும் கடலுக்கு அடியிலும் அணு ஆயுதங்களை சொந்தமாக தயாரித்து வைத்துள்ளோம், என்பதை ஐஎன்எஸ்.அரிஹந்த் என்கிற அணு நீர் மூழ்கி கப்பலை இந்திய கடற்படையில் சேர்த்து உலகிற்கு அறி வித்து விட்டது இந்தியா.

ஏற்கனவே நம்மிடம் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன் எஸ் சக்ரா, ஐஎன்எஸ்அகூலா என்கிற அணு சக்தி நீர் மூழ்கி கப்பல்கள் கைவசம் இருந்தாலும் இந்த அரிஹந்துக்கு தான் மதிப்பு அதிகம் ஏனென்றால் இது நம்முடைய சொந்த தயாரிப்பு.

நீர்மூழ்கி கப்பல்கள் எல்லாம் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்க பட்டிருக்கும். ஆனால் அணு நீர் மூழ்கி கப்பலில் அணு உலைகள் அமைக்கபட்டு அதில் கிடைக்கும் மின்சாரத்தின் மூலம் இயங்கி கொண்டிருக்கிறது. இதனால் மற்ற நீர் மூழ்கி கப்பல் போல பேட்டரிகளை ரீ சார்ஜ் செய்ய கடலுக்கு மேலே வர வேண்டிய அவசியம் இந்த அரிஹந்துக் கு இல்லை.

அரிஹந்த் என்கிற பெயருக்கு சமஸ்கிருதத்தில் எதிரிகளை அழிப்பவன் என்று பொருளாகும். வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவிலேயே அணு நீர் மூழ்கி கப்பலை கட்ட வேண்டும் என்கிற ஆசையில் தொடங்க பட்ட இந்த அரிஹந்த் விசாகபட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் சுமார் 14,500 கோடி மதிப்பில் இந்தியக் கடற்படை, பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு, இந்திய அணுவாற்றல் துறை ஆகிய நான்கும் இணைந்து இந்த நீர் மூழ்கி கப்பலை உருவாக்க ஆரம்பித்தது.

112 மீட்டர் நீளமும், 25 மீட்டர் அகலமும் கொண்டு 6000 டன் எடையுடன் கடலில் மூழ்கியிருக்கும் இந்த அணு நீர் மூழ்கி கப்பலில் 83 மெகாவாட் திறனுள்ள அணுஉலை உள்ளது. இந்த நீர் மூழ்கி கப்பலில் உள்ள விசேஷம் என்ன வென்றால் சோனார் கருவிகளை ஏமாற்றும் வசதி உள்ளது. அதாவது இந்த கப்பலை சுற்றிலும் ஒரு ரசாயன கலவை பூசப்பட்டு ள்ளது. இந்த கலவை சோனார் கருவிகளுக்கு காட்டி கொடுக்காமல் அரிஹந்தை எதிரி நாட்டு நீர்மூழ்கி கப்பல்களின் கண்ணில் தென் படாமல் பாதுகாக்கிறது.

இந்த நீர் மூழ்கி கப்பலில் எதிரி ஏவுகணைகளை தடுத்து திருப்பி தாக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆயிரக்கணக்கில் உள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வேலை என்ன வென்றால் நம்மை தாக்க வரும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தி அதை அழிக்கும் வேலையை செய்வதே.

ஒரு முக்கியமான விஷயம் முதல் கட்ட பாதுகாப்பில் பிருத்வி ஏவுகணைகள் உள்ளது. நம்முடைய வான் பரப்பில் சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவில் வரும் ஏவுகணைகளை கண்காணிப்பதற்கு என்றே ஒரு ஸ்பெசல் ராடார் உள்ளது. இதனை ஸ்வார்ட்பிஷ் என்கிறார்கள். இஸ்ரேல் உதவியுடன் நமம டிஆர்டிஓ தயாரித்த இந்த ராடாரின் உதவியால் இந்திய வான் பரப்பில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலேயே அணு ஆயுதங்களை கொண்டு வரும் ஏவுகணைகளை தாக்கி பிரித்வி அழித்து விடும்.

ஒரு வேளை பிருத்வி ஏவுகணைகள் தடுமாறினாலும் அடுத்து இந்திய வளி மண்டலத்தில் அஸ்வின் என்கிற பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாராக உள்ளது. இந்த அஸ்வின் நம்ம நாட்டுக்குள் அணு ஆயுதங்களை உள்ளே நுழைய விடாமல் வான் பரப்பிலேயே பிரித்விக்கு தண்ணி காட்டி வரும் ஏவுகணைகளை அழித்துவிட்டு அதுவும் அழிந்து விடும்.

நம்ம அரிஹந்த் அணு நீர் மூழ்கி கப்பல் உள்ளேயும் சகாரியா என்கிற பாலிஸ்டிக் ஏவுகணைகள் வைத்துள்ளார்கள். இந்த சகாரியாவின் வேலை என்ன வென்றால் நீர் மூழ்கி கப்பலில் டன் கணக்கில் இருக்கும் அணு ஆயுதங்களில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு எங்கே போடணுமோ அங்கே கொண்டு போட்டு விட்டு திரும்பிவிடும். ஒரே ஷாட்டில் 12 ஏவுகணைகள் திசைக்கு மூன்றாக பறந்து செல்லும் வகையில் பாலிஸ்டிக் பாதுகாப்பு அமைப்பு இந்த அணு நீர்மூழ்கி கப்பலில் உள்ளது.

இந்தியாவின் எதிரிகளை அழிக்க பிறந்துள்ள அரிஹந்துவுக்கு இந்தியர்கள் சார்பாக ஒரு சல்யூட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here