முக்கிய அரசாணைகள் - (1)- பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது (RG. 1984.P.278) (2)- கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975) (3)- அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை. (அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974) http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com (4)- அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள் (பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996) (5)- மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும். (அரசு கடித எண். 2290/93-1,நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993) (6)- அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும். (G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992) (7)- தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். (அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993) (8)- மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது, நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983) http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com (9)- அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம். (அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996) (10)- பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும். (அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)
Post Top Ad
Home
Unlabelled
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான முக்கிய அரசாணைகள்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான முக்கிய அரசாணைகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Subscribe Here
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padsalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக