மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு எம்ஜிஆர் நினைவிடம் அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு எம்ஜிஆர் நினைவிடம் அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா உடல் தங்கப் பேழையில் ஊர்வலமாக  கொண்டு வரப்பட்டு,  சந்தனப் பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
முப்படை அணிவகுப்பு, அறுபது  துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செய்தனர்.
சென்னை மெரினா கடற்கரை எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.
முன்னதாக ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன்,
மாநில முதல்வர்கள்
மத்திய பிரதேசம் சிவராஜ்சிங் சவுகான், உத்திர பிரதேசம் அதிலேஷ்சிங் யாதவ், ஒடிசா நவீன் பட்நாயக், கர்நாடகா சித்தராமையா, கேரளா பினராய் விஜயன், ஆந்திரா சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிரா தேவேந்திர பட்னாவிஸ், புதுச்சேரி நாராயணசாமி, டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால்,
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், கேரள ஆளுநர் சதாசிவம்,  தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி,
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழக எதிர்கட்சித் தலைவர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா,  காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரி அனந்தன், பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை, இல.கணேசன் எம்.பி., புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ், தலைவர் கோ.க.மணி, அன்புமணி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி தமீமுன் அன்சாரி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான் பாண்டியன், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர், நாம் தமிழர் கட்சி சீமான், முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், தமிழ் தேசிய முன்னணி பழ.நெடுமாறன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஞானதேசிகன்,
திரையுலகின்
ரஜினிக்காந்த், விஜய், சூர்யா, கார்த்தி, நாசர், சிலம்பரசன், விஷால், வடிவேலு, சிம்ரன், நமீதா, நயன்தாரா, இளையராஜா, பாரதிராஜா, சேரன், பிரபு, பாக்யராஜ், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கவுதமி, சுகன்யா,  ராஜேஷ், குட்டி பத்மினி, ஒய்.ஜி.மகேந்திரன், மனோபாலா, சசிக்குமார், ஸ்ரீகாந்த்,  பொன் வண்ணன், மயில்சாமி, சுஹாசினி, ரேவதி, ரஹ்மான்,  சிவகார்த்திகேயன், ஜெய், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், ரேகா, சமுத்திரகனி, சிநேகா, பிரசன்னா, செந்தில், விக்ரம் பிரபு,  கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி, வைஜெயந்திமாலா,  ராதாரவி, லட்சுமி, பிரமிட் நடராஜன், பி.வாசு, எஸ்.ஏ.சந்திரசேகர்
மற்றும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால்,  எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here