http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
📡📡📡📡📡📡📡📡📡📡📡
📺📺📺📺📺📺📺📺📺📺📺
📡📺📡📺📡📺📡📺📡📺📡
📡டில்லியில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு இயக்கத்தினர் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் !
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கோரி டெல்லியில் ஜல்லிக்கட்டு உரிமை மீட்புக் கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி மாணவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தைத் தொடர்ந்து வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
📡உ.பியில் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க..!!! - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
உத்தர பிரதேசம்,கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📺இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா? சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள்
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலர் வெளியிட்டார்.
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2017 இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன்,இன்று ரிப்பன் மாளிகையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
📡48 மணி நேரத்தில் சார்-பதிவாளரை கைது செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்றம் "அதிரடி" உத்தரவு
முறைகேடாக பத்திரப் பதிவில் ஈடுபட்ட சார்-பதிவாளரை 48 மணி நேரத்தில் கைது செய்ய போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📡விவசாயிகள் உயிரிழப்பை அடுத்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: விவசாயிகள் உயிரிழப்பை அடுத்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் அணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்தது எப்படி என விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு குறித்து 6 வாரத்தில் பதிலளிக்க தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
📺விவசாயிகள் மரணம்.. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: விவசாயிகள் தொடர் மரணம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
📡சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற ஜப்பான் ஆர்வம்!!!
இந்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகளில் ஜப்பான் பங்களிக்க ஆர்வமாக உள்ளதாக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிரமஸ்து அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சென்னை, அகமதபாத், வாரனாசி உள்ளிட்ட இந்திய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தும் முயற்ச்சியில் ஜப்பான் உதவி செய்ய முடிவு செய்துள்ளதாக கென்ஜி தெரிவித்துள்ளார்.
📺அன்பு சகோதரர் நடராசனுக்கு நான் நன்றியுள்ளவன்!'' உருகிய வைகோ
'மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுகிறது' என்று திடீரென அறிவித்து அதிரடி அரசியல் காட்டினார் வைகோ. 'அ.தி.மு.க-வின் தலைமையோடு வைகோவுக்கு இருக்கும் நெருக்கம்தான் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறுவதற்கு காரணம்' என்றப் பேச்சுக்கள் பலமாக அடிப்பட்டது. அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனும் வைகோவும் நண்பர்கள் என்பதால் இந்த கருத்தின் உறுதித்தன்மைக்கு வலுசேர்த்தது.
அ.தி.மு.க தரப்பிலோ அல்லது ம.தி.மு.க கட்சியினரோ, இவ்விரு கட்சிகளுக்கு இடையேயான உறவு குறித்த எந்தத் தகவலையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.
📡எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது - தீபா அதிரடி
தொண்டர்கள் உணர்வுகளை கேட்டு வருகிறேன் எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
📺புதிய கலர் வாக்காளர் அடையாள அட்டை - தேர்தல் அலுவலர் அறிவிப்பு
சென்னையில் புதிய வாக்காளர் அடையாள அட்டையை எப்போது பெறலாம் என்று தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
📡திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் - அருண் ஜெட்லி!
திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் - அருண் ஜெட்லி!
5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் திரு.அருண்ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார்.
📺ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடிய சுந்தர் பிச்சை!
ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடிய சுந்தர் பிச்சை!
இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை உலக அளவில் சந்தைப் படுத்துவதற்கான இணையதள தொழில்நுட்பம் குறித்து கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை காரக்பூர் ஐ.ஐ.டி. மாணவர்களிடையே கலந்துரையாடினார்.
📡சென்னை ஓபன்: யூகி பாம்ரி அதிர்ச்சி தோல்வி
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ரி - ஃப்ரான்ஸின் பெனாயிட் பேர் மோதினர். 2-வது சுற்று ஆட்டமான இன்று பெனாயிட்டிடம் 3-6, 4-6 என்கிற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார் யூகி பாம்ரி. ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு தகர்ந்தது.
📺ஜியோவுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஏர்டெல் : ஓராண்டுக்கு இலவச திட்டங்கள்!
ஜியோவுக்கு போட்டியாக களத்தில் இறங்கிய ஏர்டெல் : ஓராண்டுக்கு இலவச திட்டங்கள்!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கயாளர்களை தக்கவைக்க இலவச டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.
📡உ.பி.யில் சைக்கிள் சின்னம் யாருக்கு?: பலத்தை நிரூபிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
டெல்லி:
சமாஜ்வாடி கட்சியின் சைக்கிள் சின்னம் யாருக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய தனித்தனியாக பலத்தை நிரூபிக்குமாறு முலாயம் சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளது.
📡பெங்களூருவில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 பேர் கைது: வீடியோ ஆதாரம் கைகொடுத்தது
பெங்களூரு:
பெங்களூருவில் புத்தாண்டு அன்று அதிகாலையில் பெண்ணை கட்டிபிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்கள் வீடியோ ஆதாரம் மூலம் பிடிபட்டனர்.
📺ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து பிபின் ராவத் ஆய்வு
ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுபேற்றுள்ள பிபின் ராவத், பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றுள்ளார். அவரை, மூத்த ராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.
மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள ராவத், உதம்பூர், ஸ்ரீநகர், நக்ரோடா மற்றும் சியாசின் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார். ஜம்மு - காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு, தீவிரவாதிகள் ஊடுருவல் என்பன உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. பின்னர் நடந்த ராணுவ அதிகாரிகள் கூட்டத்திலும் பிபின் ரவாத் கலந்து கொண்டார்.
📡இலங்கை சிறையில் உள்ள 51 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சசிகலா
இலங்கை சிறையில் உள்ள 51 மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார். மீனவர்களை இன்னலுக்கு ஆட்படுத்தவது மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என்று அவர் கூறியுள்ளார். மீனவரின் உரிமையை பாதுகாக்க மத்திய அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா வலியுறுத்தியுள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
📺தாம்பரம் அருகே லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூர் மாணவர் பலி
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் கல்லூர் மாணவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சிவசங்கரன் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
📡தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பயிர் கருகியதை பார்த்து விவசாயி உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பயிர் கருகியதை பார்த்து விவசாயி உயிரிழந்துள்ளார். ஒரத்தநாடு அருகே சின்னபொன்னாப்பூர் கிராமத்தில் விவசாயி கணேசன் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
📡சென்னை CBI கோர்ட்டில் பரஸ்மல் ஆஜர்
சட்டவிரோத பண மாற்ற வழக்கில் கைதாகியிருப்பவர் பரஸ்மல் லோதா.கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரான இவர், சேகர் ரெட்டிக்கும் தொடர்புடையவர் என கூறப்படுகிறது.இந் நிலையில் இவர் தற்போது சென்னை CBI நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
📺டெல்லியில் தமிழக விளையாட்டு வீரர்கள் மீது தாக்குதல்
தேசிய கையெறி பந்து போட்டியில் தமிழக வீரர்கள், வீராங்கனைகள் கலந்து
கொண்டனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் டெல்லி அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதை தமிழக வீரர்களும், பயிற்சியாளர்களும் தட்டிக்கேட்டதால் அவர்கள் மீது தாக்கிதல் நடத்தப்பட்டுள்ளது.
📡வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படுமா தமிழகம்
வறட்சி மாநிலமாக அறிவிக்க தகுந்த அனைத்து கட்டங்களையும் அடைந்து வருகிறது தமிழகம்.பயிர்களின் அழிவால் நாளுக்கு நாள் விவசாயிகள் மரணிப்பதும் அதிகரித்து வருகிறது.வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிய மனு மீதான விசாரணை பிப்.8ம் தேதி நடைபெற உள்ளது
📺வறட்சி பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு
வேடசந்தூர் அருகில் வறட்சி பாதிப்பு பகுதிகளில் அமைச்சர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.தருமபுரி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு பற்றி அமைச்சர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
📡ஐந்து மாநில தேர்தல் அதிகாரிகள் நியமனம்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்., மார்ச் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 5 மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
📡கர்நாடகாவுக்கு ரூ.1782 கோடி வறட்சி நிதி
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில், வறட்சி நிதியாக கர்நாடக மாநிலத்திற்கு ரூ.1782.44 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.மேலும், வெள்ளம் பாதித்த உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.208.91 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
📺ஐ.நா. வரம்பை மீறுகிறது இந்தியா: சீனா
அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை விவகாரங்களில் இந்தியா ஐ.நா.வின் வரம்பை மீறுகிறது இந்தியா என சீன மீடியா ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.அணு ஆயுத தயாரிப்பில் இந்திய பெற்றுள்ள சலுகைகளை பாகிஸ்தான் பெற வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.சீனா முழுவதையும் இலக்காக கொண்ட அக்னி- 4, அக்னி- 5 ஏவுகணை சோதனையை இந்திய வெற்றிக்கரமாக முடித்ததால் சீனா ஆடிபோய் உள்ளது.
📡அமைச்சகங்களை ஆய்வு செய்கிறார் மோடி
மத்திய அமைச்சகங்களின் செயல்பாட்டை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார்.அமைச்சகங்கள் முக்கியத்துவத்தின் அடிப்படையில் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.4 நாட்களில் இந்த 5 குழுக்களையும் ஆய்வு செய்ய உள்ளார் மோடி.
📺அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்
ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் மவுன ஊர்வலம் வந்து அஞ்சலி செலுத்தினர்.மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் அதிமுகவினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.மெரினா காந்தி சிலை முதல் ஜெ. சமாதி வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது.
📡விவசாயிகளின் உயிரிழப்பு குறித்து 6 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
📺ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால், அவர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்:
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
📡சிவகங்கை - மதுரை சாலையில் விபத்து: 2 பேர் உயிரிழப்பு
சிவகங்கை - மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் கார் மோதி உயிரிழந்தனர். நல்லாகுளம் என்ற இடத்தில் கார் மோதியதில் காளி, காளிதாஸ் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
📺சேலத்தில் ஜெ.தீபா பேரவை கொடி அறிமுகம்
25 லட்சம் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் ஜெ.தீபா பேரவையில் இணைந்துள்ளனர் .. விரைவில் இது ஒரு கோடியாக உயரும் ... அம்மா பிறந்த நாளான பிப்ரவரி 24 ல் ஜெ.தீபா தலைமையில் " அம்மா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் " (AADMK) என்ற புதிய அரசியல் கட்சி உதயம் ஆகிறது ...
📡நாகர்கோவில் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே பறக்கை கிராமத்தில் சரஸ்வதி என்ற பெண் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 4 நாள்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்துள்ளார்.
📺தங்கம், வெள்ளி விலைகள்: மாலை நிலவரம்
22 கேரட் தங்கம்
ஒரு கிராம் - ₹2,732
22 கேரட் தங்கம்
ஒரு சவரன் - ₹21,856
24 கேரட் தங்கம்
10 கிராம் - ₹
வெள்ளி: ஒரு கிராம் - ₹43.40
வெள்ளி கட்டி:
ஒரு கிலோ - ₹40,520
📡📺📡📺📡📺📡📺📡📺📡
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக