#### காலை செய்திகள் ###
28/01/2017
1. *விருத்தாச்சலம் அருகே லாரி மோதி 43 ஆடுகள் பலி*
2. *திருச்சி அருகே ஆம்னி பஸ்-லாரி மோதி விபத்து; 2 பேர் பலி*
3. *திருவாரூரில் இடி மின்னலுடன் கனமழை*
4. *காஷ்மீர் பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு*
5. *திருவாரூர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் தாக்குதல்*
6. *மதுரை ரயில்நிலையத்தில் 35 பண்டல் புகையிலை பொருட்கள்*
7. *இந்திய மீனவர்கள் 60 பேரை சிறைப்பிடித்தது பாக்., கடற்படை*
♈*சென்னையில் தினந்தோறும் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல இருசக்கர வாகனம், ஷேர் ஆட்டோ, ரயில் மற்றும் பேருந்து போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மெட்ரோ ரயில் நிலையம் சாலையின் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், மாசு ஏற்படுவதை குறைக்கவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.அதாவது பொதுமக்களை மிதிவண்டி பயன்படுத்த ஊக்குவிக்கும் திட்டமாகும். இதற்காக தற்போது ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆண்கள், பெண்கள் என தனி தனியே பயன்படுத்த 10 மிதிவண்டிகள் வைக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்த் விரும்புவர்கள் வைப்புத்தொகையாக ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். பின்னர் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கட்டணமின்றி பய்ன்படுத்தி கொள்ளலாம். மிதிவண்டி தேவை இல்லை என்றபோது வைப்புத் தொகையை முழுவதுமாக பெற்றுக் கொள்ளலாம்*
♈ *உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் நேற்று போலீசார் சட்டவிரோதமான ஆர்ம்ஸ் ராக்கெட் என்ற துப்பாக்கியை அழித்தெறிந்தனர். மேலும் நாட்டின் கைத்துப்பாக்கி உடன் பிற ஆயுதங்களுடன் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்*
♈*காசியாபாத்தில் நேற்று இரவு கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 4 பயணிகளும் உயிரிழந்துள்ளனர் மற்றும் காரில் இருந்த 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக காரில் காற்றுப்பை இருந்ததால் 2 பேரும் காப்பாற்றப்பட்டனர்*
♈*புதுடெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் 2 சர்வதேச விமானங்களும் மற்றும் 8 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக வருகை தரவும், செல்லவும் உள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக 20 ரயில்கள் தாமதமாக வரவுள்ளது, 2 ரயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது. மற்றும் 1 ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது*
♈*கோவாவின் பனாஜி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்*
♈*பஞ்சாப் மாநிலத்தில் 3 இடங்களில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்*
♈*சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தில் இருந்து நேப்பியர் பாலம் வரை போராட்டம் நடத்த தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது*
♈*உள்நாட்டிலேயே தயாரித்த கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட் திட்டத்தில் மைல்கல் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது*
♈*மாணவர்கள் மீது தடியடி சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் சென்னையில் நடந்து வருகிறது. கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில், ஜல்லிக்கட்டு உரிமைக்காக அமைதியாகப் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலையும் பொதுச் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தியதையும் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் என்று முத்திரைக் குத்தி அவர்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தியதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன*
♈*காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வானிலை சீரானவுடன் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என ராணுவம் தெரிவித்துள்ளது*
♈*கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தை தகர்க்க போவதாக விமான நிலைய ஆணையருக்கு அடையாளம் தெரியாத நபர் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடிதம் மூலம் மிரட்டும் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்*
♈*சென்னை வியாசர்பாடி வேகமாக வந்த லாரி மோதியதில் 4 வயது குழந்தை பலியாகினார். இந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வியாசர்பாடி சேர்ந்தவர் ஜெயக்குமார் பெயிண்டராக உள்ளார். இவர் நேற்று இரவு தனது 5 வயது மகள் பிரியதர்ஷியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். வியாசர்பாடி நரசிம்மபுரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, ஆந்திராவில் இருந்து கட்டுமான பொருட்கள் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி ஒன்று ஜெயக்குமாரின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.இதில் ஜெயக்குமாரும், அவரது குழந்தை பிரியதர்ஷினியும் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது குழந்தை பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டியவந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் லாரியை தீ வைத்து கொளுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி வழியாக 3 லாரிகள் மீது கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். தகவல் அறிந்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதன் பின்னர் உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக