வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயருமா? அல்லது வழக்கம்போல அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நடுத்தர வர்க்கத்திற்கு ஆப்புவைக்குமா .... .... ...... மத்திய அரசு ... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயருமா? அல்லது வழக்கம்போல அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நடுத்தர வர்க்கத்திற்கு ஆப்புவைக்குமா .... .... ...... மத்திய அரசு ...


பிப்., 1ல், மத்திய பட்ஜெட்தாக்கலாகிறது.முதன்முறையாக,ரயில்வே மற்றும் பொதுபட்ஜெட் ஆகியஇரண்டும் கலந்த ஒருங்கிணைந்த பட்ஜெட்,தாக்கலாக உள்ளது;இதில், வருமான வரிவிலக்கு

உச்சவரம்பு உயர்த்தப்படுமா என்றஎதிர்பார்ப்பு, மாதஊதியதாரர் களிடையேஏற்பட்டுள்ளது.

பட்ஜெட்டில்,என்னென்னவிஷயங்கள் இடம்பெறும் என்பது குறித்தஎதிர்பார்ப்பு, இப்போதேதுவங்கி விட்டது.வழக்கம் போல், மாதஊதிய தாரர்கள்,தொழில் துறையினர்உள்ளிட்ட, பல்வேறுதரப்பைச் சேர்ந்தவர்கள்,இந்த பட்ஜெட்டில்,தங்களுக்கு சாதகமானஅம்சங்கள்வந்துவிடாதா என,ஆவலுடன்காத்திருக்கின் றனர்.கடந்த சிலஆண்டுகளாக, ஆண்டுவருமான வரிஉச்சவரம்பு, 2.5 லட்சம்ரூபாயை தாண்டமறுக்கிறது. கடந்தஆண்டும், ஏமாற்றமேமிஞ்சியது. அதனால்,இந்த ஆண்டு, அதுநிச்சயம் உயரும் என்றஎதிர்பார்ப்புஏற்பட்டுள்ளது.

மாத வருவாயும், கடந்தசில ஆண்டுகளில்,குறிப்பிடத்தக்கவகையில் அதிகரித்துவரு கிறது. அதனால்,குறைந்தபட்சம், 4.5லட்சம் ரூபாய் முதல்,ஐந்து லட்சம் ரூபாய்வரை யாவது, வருமானவரி உச்சவரம்பைஉயர்த்த வேண்டும்என்ற எதிர்பார்ப்புநிலவுகிறது.

இன்சூரன்சுக்கு தனிகழிவு?

மாத ஊதியதாரர்கள்,80 -சி பிரிவில், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ செலவு, வீட்டுக் கடன் மாதத் தவணை, எல்.ஐ.சி., உள்ளிட் டவை, வரிக்கழிவிற்கு உதவுகின்றன. இதில் அதிகபட்சம், 1.5 லட்சம் ரூபாய் மட்டும் கழிக்க முடியும். இதை, 2.5 லட்சம் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை உயர்த்தினால், மக்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டுவர்.

குறிப்பாக,இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு தனிக் கழிவு, 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால், சேமிக் கும் வழக்கம் மக்களிடம் அதிகரிக்கும்; சமூக பாது காப்பும் கிடைக்கும்.

இந்த பிரிவில், மருத்துவ செலவுகளுக்காக கழிக்கப்படும் தொகை, 15 ஆயிரம் ரூபாயாக, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது; அது, 30 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட வேண்டும். இது போல், மற்றோர் பிரிவான, 80 டிடிஏ - வில், வங்கி சேமிப்பு மீதான வட்டிக்கான வரி விதிப்பு குறைக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அப்படி செய்தால், 'செட்டில்மென்ட்' பணத்தின் மீதான வட்டியை நம்பியிருக்கும், 60 வயதிற்கு, மேற்பட்டோர் பயனடைவர்.

புதிய 'பென்ஷன்' திட்டம்

புதிய,'பென்ஷன்' திட்டத்தில் சேர்ந்தால்,ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, 80 சிசிடி (1பி) பிரிவின் கீழ், வருமான வரி கழியும். இந்த பட்ஜெட்டில், முதலீடு தொகை முழுவதற்கும், நிதியமைச்சர் ஜெட்லி, விலக்களிக்க முயற்சிப்பார் என, தெரிகிறது.

வீட்டுக்கடன்வட்டிக்கான உச்சவரம்ரபு, பிரிவு 24 - ன் கீழ், 2 லட்சம் ரூபாயாக உள்ளது. வீடு விலை ராக் கெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது; எனவே, அதை உயர்த்த வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

50 கோடி பேர் 'எஸ்கேப்'

நாட்டில், நான்கு கோடிக்கும் குறைவானவர் களே, குறிப்பாக, மாத வருமானம் பெறுவோர் தான், வரி செலுத்துகின்றனர். வருமான வரி வரம்பிற்குள்

வரக்கூடிய, மருத்துவர்,வியாபாரிகள், சுயதொழில் வருவாய்மற்றும் வீட்டு வாடகைவருவாய் ஈட்டுவோர்உட்பட, 50 கோடிக்கும்அதிகமானோர்,வருமான வரித்துறைவளையத்திற்குள்இன்னும் வரவில்லை.

அவர்களையும்,வரிவிதிப்பு முறையின்கீழ் கொண்டு வரவேண்டும். அதற்கு, வரிவிதிப்பு முறை எளிதாகவேண்டும். அதாவது,வருமான வரிஉச்சவரம்பை உயர்த்தவேண்டும்.

மேலும், ஐந்துலட்சத்திற்குள்வருமானம் இருந்தால், 10 சதவீத வரி விதிப்பு;ஐந்து லட்சத் திற்கு மேல், 20 சதவீதம்; 10லட்சத்திற்கு மேல், 30சதவீதம், வரி என்பதைகுறைக்க வேண்டும்.அப்போது தான்,குடிமக்கள் அனைவரும்சமமாக நடத்தப்படும்நிலை உருவாகும்.

ஊக்கம் கிடைக்குமா?

பண மதிப்பிழப்பிற்குபின், ரொக்கமில்லாபரிவர்த்தனைக்கு மாற,அரசு ஊக்குவிப்பதால், 'கிரெடிட் கார்டு, டெபிட்கார்டு, நெட் பேங்கிங்'உள்ளிட்டவை போன்றபரிவர்த்தனைக்கு, அரசுஅதிக சலுகை அளிக்கவேண்டும் என்றஎதிர்பார்ப்பு உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here