உலகில் மோசமான விமான சேவை .....ஏர் இந்தியா விமானம் . - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உலகில் மோசமான விமான சேவை .....ஏர் இந்தியா விமானம் .


சமீபத்தில் மோசமான விமான சேவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஏர் இந்தியா விமானம் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் ஃபிளைட் ஸ்டாட்ஸ் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் சிறந்த சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்கள் பட்டியலையும், மிக மோசமான சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் பட்டியலையும் வெளியிடும். அந்த பட்டியலில் சேவையின் தரம், விமானங்களின் தாமதம், விமானங்கள் ரத்து ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படும். 2016 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, மோசமான சேவை வழங்கும் பட்டியலில் முதலிடத்தை இஸ்ரேலின் ’இஎல் ஏஎல்’ நிறுவனமும், 2வது இடத்தை ’ஐஸ்லேண்ட் ஏர் ஏர்லைன்ஸ்’ நிறுவனமும் பிடித்துள்ளன. இந்தியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான ’ஏர் இந்தியா’ 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து ஏர் சைனா, ஹாங்காங் ஏர்லைன்ஸ், பிலிப்பைன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், குவாடர் ஏர்வேஸ் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

2016-ம் ஆண்டில் சிறந்த சேவை வழங்கிய விமான நிறுவனங்கள் பட்டியலில் ’கேஎல்எம்’ நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ’இபேரியா’ நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வறிக்கை பொய்யானது. எனவே, இதை ஏற்க முடியாது என ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஃபிளைட் ஸ்டாட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கப் பிரிவின் துணைத் தலைவர் ஜிம் ஹெட்செல் கூறுகையில், ”விமான நிறுவனங்களின் சேவைகள் குறித்த விவரங்களை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிய காரியமல்ல. சுமார் 500 வெவ்வேறு அறிக்கை விவரங்களை வைத்து இந்தப் பட்டியலை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, ஒட்டுமொத்தமாக விமான நிறுவனங்களின் சேவைகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டி அதிகரித்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here