ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) மத்திய அரசு 8300 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) மத்திய அரசு 8300 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை: மத்திய அரசில் பணியாற்ற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,300 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff) பணியிடங்கள் 8,300 காலியாகவுள்ளன. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 என்ற ரீதியில் வழங்கப்படும்.
வயதுவரம்பானது 01.08.2017 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதியா பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
http://ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்விற்கான வினாக்கள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் அமைந்திருக்கும். ஒவ்வொரு தவறான பதில்களுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
எழுத்துத் தேர்வு மையங்கள் புதுச்சேரி(8401), சென்னை(8201), கோயம்புத்தூர்(8202), மதுரை(8204), திருச்சிராப்பள்ளி(8206), திருநெல்வேலி(8207) ஆகிய நகரங்களில் அமையும்.
எழுத்துத் தேர்வு 16.04.2017, 30.04.2017 மற்றும் 07.05.2017 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.01.2017 ஆகும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய http://164.100.129.99/mts/html/mtsfinalnotice301216.pdf என்ற இணையதள லிங்க்கைத் தொடர்புகொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here