மாணவர் சமுதாயத்தின் பொக்கிஷம் விஜயலலிதா என்னும் அரசுப்பள்ளி ஆசிரியை .....சல்யூட் ..... - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவர் சமுதாயத்தின் பொக்கிஷம் விஜயலலிதா என்னும் அரசுப்பள்ளி ஆசிரியை .....சல்யூட் .....



கரூர் காந்தி கிராமத்தின்அருகில் இருக்கும் அந்த அரசுதொடக்கப் பள்ளியைச்சுற்றிலும், ஏராளமான தனியார்பள்ளிகள். பள்ளிக்கு வெகுஅருகில், இரண்டு மெட்ரிக்பள்ளிகள். ஒரு காலத்தில் 5 பேர்மட்டுமே படித்த ஆரம்பப்பள்ளியில் இன்று 246 பேர்படிக்கின்றனர். இதில் சுமார் 100குழந்தைகள், தனியார்பள்ளிகளிலிருந்து இங்கு வந்துசேர்ந்திருக்கின்றனர். ஆறுபெங்காலி குழந்தைகள் இந்தப்பள்ளியில் சேர்ந்து தமிழையும்கற்கின்றனர். இவைஅனைத்துக்கும் யார் காரணம்?

அத்தொடக்கப்பள்ளியின்தலைமை ஆசிரியைவிஜயலலிதா சொல்கிறார்.

வாசிப்பு பயிற்சியும், சுகாதாரமும்

தொலைக்காட்சி பார்ப்பதைக்குறைக்க வேண்டும்; தினசரிசெய்தித்தாள்களை பார்க்கவேண்டும்; வாரம் ஒருதடவையாவது நூலகம் செல்லவேண்டும் போன்ற விஷயங்கள்குழந்தைகளின் மனதில்விதைக்கிறோம்.

வாசிப்புப் பயிற்சிக்காகக்குழந்தைகளை,செய்தித்தாள்களின்தலைப்புகளை வெட்டி, தங்கள்நோட்டுப்புத்தகங்களில் ஒட்டச்சொல்கிறோம். 6 ஆசிரியர்கள், 6தமிழ்ச் செய்தித்தாள்களைவாங்கித் தருகின்றனர். ஒருஆசிரியர் ஆங்கிலசெய்தித்தாளை வாங்கிவருகிறார்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com 

விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குவருபவர்களுக்கு நிச்சயம் பரிசுஉண்டு. இதனால் உடல்நிலைசரியில்லாமல் விடுமுறைஎடுப்பவர்களைத் தவிர,பெரும்பாலான மாணவர்கள் 100சதவீத வருகையை உறுதிசெய்கின்றனர்.

பள்ளியின் சுகாதாரத்தில்நாங்கள் சமரசம் செய்துகொள்வதே இல்லை. மூவாயிரம்ரூபாய் கொடுத்து ஆயாஒருவரை வேலைக்குவைத்திருக்கிறோம்.சுகாதாரமான குடிநீர்வழங்கப்படுகிறது. கழிப்பறைவசதி செய்யப்பட்டு முறையாகப்பராமரிக்கப்படுகிறது. எங்கள்வளாகத்தில் குப்பையைக்கண்டுபிடித்துச்சொல்பவர்களுக்குப் பரிசுகள்அளித்து தூய்மையை உறுதிசெய்கிறோம்.

வாராவாரம் வியாழன் அன்றுசுற்றுச்சூழல் மன்றமும்,வெள்ளியில் செயல்திட்டப்பொருட்கள் கண்காட்சியும்உண்டு. மூலிகைத் தோட்டமும்இங்கே பராமரிக்கப்படுகிறது.பல்லாங்குழி, கொலகொலயாமுந்திரிக்கா, கோலி, பட்டம்விடுதல் போன்ற பாரம்பரியவிளையாட்டுகளை நடத்தவும்குழு அமைத்திருக்கிறோம்.

பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி,கட்டுரைப் போட்டி, கண்காட்சிஆகியவையும் உண்டு. எங்கள்பள்ளியில் ஒவ்வொருவகுப்புக்கும் இவற்றில் ஒருபொறுப்புஅளிக்கப்பட்டிருக்கிறது.வருடந்தோறும் சிறப்பானமுறையில் ஆண்டு விழாநடத்தப்படுகிறது. திறமை, தரம்தாண்டி ஆர்வத்துடன் எல்லாக்குழந்தைகளையும் மேடை ஏறவைப்பதுதான் எங்களின்குறிக்கோள். இதில் மாணவர்கள்அனைவருக்குமே பரிசுகள்உண்டு.

கிராமக் கல்விக் குழுக்கள் மூலம்எல்லா வகுப்பறைகளுக்கும்மின்விசிறி வசதிகள்செய்திருக்கிறோம். எட்டுகணிப்பொறிகள் வாங்கப்பட்டு,ஏசி அறையில் வைத்துப்பயன்படுத்தப்படுகின்றன. அரசுதரும் சீருடைகளோடு,ஸ்பான்சர்ஷிப் மூலம்மாணவர்களுக்கு கூடுதல்சீருடைகள் வழங்கப்படுகின்றன.

பள்ளி மேலாண்மைக் குழுமூலம், மாதந்தோறும் பெற்றோர்சந்திப்பை நடத்தி வருகிறோம்.செயல்முறைத் திட்டங்களைஆண்டின் தொடக்கத்திலேயேகொடுத்து விடுகிறோம்.பெற்றோர்களின்ஒத்துழைப்போடு அவை ஆண்டுவிடுமுறைகளிலேயேமுடிக்கப்படுவதால் இதுசாத்தியமாகிறது. செயல்வழிக்கற்றலில் தொடர்ந்து மூன்றுவருடங்களாக சிறந்த பள்ளிவிருதைப் பெற்று வருகிறோம்.

பலமாக நினைப்பது

பலவீனமாக இல்லைஎன்பதைத்தான் என்னுடையபலமாக நினைக்கிறேன். எங்கள்அரசுப் பள்ளி நகர்ப்புறத்தில்இருக்கிறது. இதனால் இட வசதிபோதவில்லை. நடந்து செல்லும்தூரத்திலேயே இரண்டு தனியார்பள்ளிகள் இருக்கின்றன. இவைஎல்லாவற்றையும் தாண்டிதான்இயங்கிக் கொண்டிருக்கிறோம்.நல்லதை நோக்கிப்பயணிப்பதால்தான் நீண்டதூரத்துக்கு வெற்றிகரமாகசெயல்பட முடிகிறது.

இங்கேயும் டயரி முறை உண்டு.அதில் தினமும்வீட்டுப்பாடங்களை எழுதிக்கொடுக்கிறோம். பெற்றோர்கள்பார்த்து அதில் கையெழுத்துப்போட்டுக்கொடுக்க வேண்டும்.

ஆர்.டி. எனப்படும் தொடர்சேமிப்பு மூலம், பெற்றோர்கள்தங்கள் குழந்தை பெயரில்மாதமொரு முறைகுறைந்தபட்சமாக 100 ரூபாயைசெலுத்தலாம். அவர்கள் அதைஐந்தாம் வகுப்பு முடித்துச்செல்லும்போது பெற்றுக்கொள்ளுமாறுசெய்திருக்கிறோம்.

பள்ளி வேலை நேரங்களில்ஆசிரியர்கள் செல்பேசிபயன்படுத்த அனுமதி இல்லை.அவசரத்துக்கு லேண்ட்லைனைஅவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பெற்றோர்களும்அதன் வழியேதான் தங்கள்மாணவர்களைத் தொடர்புகொள்கின்றனர். எங்கள்பள்ளியைப் பற்றிக்கேள்விப்படும் பெற்றோர்கள்தொலைவில் வசித்தாலும்ஆட்டோ மூலம் தங்கள்குழந்தைகளை அனுப்பிவைக்கின்றனர். இது எங்களைஇன்னும் உற்சாகமாக செயல்படவைக்கிறது.

எதிர்காலத் திட்டங்கள்

தொடக்கப் பள்ளியாக இருக்கும்எங்கள் பள்ளியைநடுநிலைப்பள்ளியாக ஆக்கவேண்டும் என்பது என்னுடையகுறுகிய காலத் திட்டம்.பால்வாடியில் இருக்கும் 35குழந்தைகளை, எங்கள்ஆசிரியர்களைக் கொண்டுபார்த்துக் கொள்கிறோம்.அவர்கள் அனைவருமே அடுத்தகல்வியாண்டில் எங்கள் பள்ளிக்குழந்தைகள் ஆகப் போவதால்இப்போதே அக்கறையுடன்கவனிக்கிறோம்.

5 மாணவர்களே இருந்த எங்கள்தொடக்கப்பள்ளியில் இப்போது246 பேர் படிக்கிறார்கள்.குறைந்தபட்சம் 1000மாணவர்களாவது இங்கே படிக்கவேண்டும் என்பதே எங்கள்இலக்கு. என்னையும் சேர்த்துஇங்கு பணிபுரியும் 8ஆசிரியர்களும் பெண்கள்தான்.நிச்சயம் பெண்களால், நாட்டின்தலைவிதியை நல்லபடியாகநிர்ணயிக்க முடியும்தானே?

வாழ்த்துக்கள் குருக்களே...உங்கள் ஆசிரியர்பணி சிறக்கட்டும்... 

     ~தமிழ் இணைய செய்திகள் ~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here