பரபரப்பான பிப்ரவரி 09 ம் தேதி ........காலை முதல் மாலை வரை ஒரு பார்வை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பரபரப்பான பிப்ரவரி 09 ம் தேதி ........காலை முதல் மாலை வரை ஒரு பார்வை

ஆலோசித்தார் ஓபிஎஸ் உரிமை கோரினார் சசிகலா எம்எல்ஏக்கள் சிறை வைப்பு
என்ன செய்யப் போகிறார் ஆளுநர்?
ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்.

சென்னை, பிப். 9-

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழனன்று மாலைசென்னை வந்தடைந்தார். அவரை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுமார் 15 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளரும், அக்கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவருமான வி.கே.சசிகலா, ஆளுநரை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆதரவு எம்எல்ஏக்களின் பட்டியலை அளித்தார்.இதைத்தொடர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடி யரசுத் தலைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் அறிக்கை அனுப்பி வைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டா ரங்கள், இரவு சுமார் 9 மணி அளவில் தெரி வித்தன. ஆளுநரிடமிருந்து மற்றொரு விரிவான அறிக்கை சென்ற பின்னரே இதுதொடர்பான விபரங்கள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே வியாழனன்று முழுவதும் ஓ.பன்னீர்செல்வம் அணியிலும், சசிகலா அணியிலும் அடுத்தடுத்த பல காட்சிகள் அரங்கேறின.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

10.40: தமிழக டிஜிபி ராஜேந்திரன், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசினார்.

10.45: “உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றாலும், அதிமுக சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளது. ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக முடியாது. அவர் இரு வழிகளையும் இழந்துவிட்டார்” என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

10.50: முதல்வர் பன்னீர்செல்வத்தை தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

11.00: நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப் பட்டது. தமிழக முதல்வராக சசிகலா உடனடியாக பதவியேற்க வேண்டும் என்பது அவர்களது விருப்பக் குரலாக இருந்தது.

11.55: சென்னை போயஸ் கார்டனில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிராக

அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

12.15: “அதிமுகவின் உட்கட்சி விவகாரங் களில் திமுக தலையிடவில்லை. அதிமுகவில் நடக்கும் பிரச்சனைகள் மோசமாகவும், வருத்தமளிப்பதாகவும் உள்ளது” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தில்லியில் கூறினார்.

12.20: “எங்களை யாரும் கடத்தவில்லை. சுதந்திரமாகவே இருக்கிறோம். ஆளுநர் சென்னை வந்தவுடன் சசிகலாவுக்கு எங்களது ஆதரவை தெரிவிப்போம்” என்று குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமசந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

12.30: மும்பையிலிருந்து ஆளுநர் வித்தி யாசாகர் ராவ் சென்னை புறப்பட்டார்.

12.55: தனது மனைவியைக் காணவில்லை என கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

12. 55: நெல்லித்தோப்பு முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகரை சசிகலா நீக்கியதற்கு

எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி நெல்லித் தோப்பு அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

1.17: “அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களது விடுதியில் சுதந்திரமாக உள்ளனர். தமிழ்நாட்டின் முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்பார்” என்று அதிமுகவின் பா. வளர்மதி கூறினார்.

1.22: முதல்வர் பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வந்து, ஆதரவு தெரிவித்தார்.

2.58: “சசிகலாவை ஆதரித்தவர் பன்னீர் செல்வம். தற்போது நாடகமாடுகிறார். பன்னீர் செல்வமும், மதுசூதனனும் துரோகிகள். அதிமுகவின் சொத்துக்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது” என்று அதிமுகவின் கோகுல இந்திரா கூறினார்.

3.17: அதிமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி, பன்னீர்செல்வத்தை சந்தித்தார்.

3.20: அதிமுகவின் முன்னாள் எம்பி கே. பழனிசாமி முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

3.24: வில்லிவாக்கம் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார்.

3.30: “அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களது விருப்பத்தில்தான் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. 10 முக்கிய அமைச்சர் களுடன் ஆளுநரை இரவு 7.30 மணிக்கு சந்திக்க இருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா. விரைவில் சசிகலா தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் பன்னீர்செல்வம்” என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

4.00: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ராஜ்பவன் வந்தடைந்தார்.

4.41: ஓ. பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.

4.49: தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், பிரதமர் மோடியுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்துப் பேசினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து தம்பிதுரை மற்றும் பிரதமர் மோடி பேசவில்லை என்றும்,

நாடாளுமன்ற கூட்டத் தொடர் முதல்பகுதி நிறைவடைவதால் மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்ததாக தகவல் வெளியானது.

5.10: முதல்வர் பன்னீர்செல்வம், ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஆலோசனை நடத்தி னார். முதல்வருடன பி.ஹெச். பாண்டியன், கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடன் சென்றனர்.

5.17: ஆளுநருடனான பன்னீர்செல்வத்தின் சந்திப்பு நிறைவு பெற்றது. ஆளுநர் உடன் சுமார் அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது.

5.35 : ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், “தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆளுநருடன் விரிவாக விளக்கினேன். நல்லது நடக்கும். அந்த நம்பிக்கை இருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்றார்.

5:45: சசிகலாவை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களது ஹாஸ்டலில்தான் உள்ளனர் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன் தெரிவித்தார். ஆனால் செய்தியாளர்கள் ஹாஸ்ட லில் சென்று பார்த்த போது எம்.எல்.ஏ.க்கள் அறை பூட்டியே கிடந்தது தெரிய வந்தது.

சிவானந்தா சாலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டல் வளாகம் வெறிச் சோடிக் கிடந்தது. எம்.எல்.ஏ.க்களின் கார்கள்

அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அறை கள் பூட்டியே கிடக்கின்றன.

7.05: ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய சசிகலா, எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அடங்கிய

கோப்பு ஒன்றை அங்கு வைத்து வணங்கி னார். பின்னர், அங்கிருந்து ஆளுநர் மாளி கைக்கு புறப்பட்டார்.

7.40: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தன்னிடம் உள்ள ஆதரவு

எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை ஆளுநரிடம் அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். பத்திரிகையாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார். அப்போது மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.

8.00: பன்னீர்செல்வத்திற்கு திமுக நிபந்த னையற்ற ஆதரவு அளிக்கும் என்று சுப்பு லட்சுமி ஜெகதீசன் கூறியதாக தகவல் வெளியானது. எனினும் அதை சிறிது நேரத்தி லேயே அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here