5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு ஏப்ரலில் துவக்கம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு ஏப்ரலில் துவக்கம்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது.'ஆதார்' எண் வழங்கிய ரேஷன் கார்டுதாரர்களுக்கு 'ஸ்மார்ட் கார்டு' வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் 'ஆதார்' எண் இருந்தால் மட்டுமே 'ஸ்மார்ட் கார்டு' வழங்க முடியும்.

தற்போது, தாலுகா அலுவலகங்களில் 'ஆதார்' அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 'ஆதார்' அட்டைக்கு படம் எடுக்கும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன. இதனால், 'ரேஷன் கடைகளில் குழந்தைகளின் பிறப்பு சான்று வழங்கினால் போதும்' என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குழந்தைகளுக்கு 'ஆதார்' அட்டை புகைப்படம் எடுக்கும் பணி ஏப்ரலில் துவங்க உள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'குழந்தைகளுக்கு கைரேகை, கருவிழி பதிவு செய்த போது ஸ்கேனர் கருவி வேலை செய்யவில்லை. இக்குறையை களைந்து குழந்தைகளுக்கு மட்டும் 'ஆதார்' பதிவு பணி ஏப்ரலில் துவங்க உள்ளது; தாலுகா அலுவலகங்களில் இப்பணி நடக்கும்' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here