ஜெர்மனியில் தினமும் சராசரியாக 10 அகதிகள் தாக்கப்படுகிறார்கள் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி அமைச்சரவை விடுத்துள்ள முக்கிய அறிக்கையில், கடந்த ஆண்டு 2016இல் மட்டும் வேறு நாட்டிலிருந்து ஜெர்மனி வந்து வாழும் 3500 அகதிகள் வன்முறை தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். தினமும் சராசரியாக 10பேர் மீது வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ளன. இந்தச் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகக் கூறியுள்ள ஜெர்மனி அரசு, நம் நாட்டைத் தேடி வருகிறவர்கள் பாதுகாப்பு உறுதியை நிச்சயம் எதிர்ப்பார்ப்பார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியது நமது கடமை என்று கூறியுள்ளார்கள்.
அதேபோல, அகதிகள் தங்கியுள்ள 988 வீடுகளின் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2015இல் 890,000 அகதிகள் ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அதிலிருந்துதான் அவர்கள் மீது வெறுப்புணர்வு அதிகமானதாகத் தெரிகிறது. போன மாதம் அகதிகள் தங்கிருந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் தீ வைத்த நபருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மட்டும் ஜெர்மனி நாட்டுக்குள் 280,000 அகதிகள் வந்துள்ளார்கள். இதனால் ஜெர்மனிவாழ் இளைஞர்கள் தங்களது வேலைவாய்ப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கிறார்களாம். இதுவும் அகதிகள் மீதான வெறுப்புக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக