தொகுதிக்குள் வரத் தடை; தனியரசு எம்எல்ஏவுக்கு நேர்ந்த கதி!
.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி அதிமுக எம்எல்ஏவான தனியரசு, தற்போது சொகுசு பங்களாவில் கடந்த சில நாட்களாக இருந்துவருகிறார். இவர், சசிகலா முதல்வராக ஆதரவு தெரிவித்து அங்கே இருப்பது குறித்து, அவரின் தொகுதி மக்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை பரப்பிவருகின்றனர்.
அதில், காங்கேயம் எல்எல்ஏ., தனியரசுக்கு, நாங்கள் ஜெயலலிதாவுக்காகவும், அவரது ஆட்சிக்காகவும் மட்டுமே உங்களுக்கு ஓட்டு போட்டோம். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப்பின் தார்மீக அடிப்படையில், எம்எல்ஏ., தகுதியை இழந்துவிட்டீர்கள். நீங்கள் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிந்தோம்.
வாக்களித்த எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒருவரை தேர்வு செய்ய நீங்கள் யார்? உங்கள் பதவியை உடனே ராஜினாமா செய்துவிடுங்கள்; தொகுதிக்குள் கால்வைக்க வேண்டாம் என்று அதில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக