சிறுதானியங்களின் பெரும்பயன்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சிறுதானியங்களின் பெரும்பயன்கள்

🌿 *இயற்கை 🌿 மருத்துவம்*🌿

        
            🌿🍶 *20\02\17*🍶🌿


🌿🍶சிறுதானியத்தில்
பெரும்பலன்கள்!🍶🌿

🌿🍶ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம்.

🌿🍶ஒவ்வொரு சிறு தானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன.

🌿🍶எந்தெந்த சிறு தானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றைப் பயன் படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.

🌿கம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.

🌿தினை - இதயத்தைப் பலப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலையைத் தரும்.

🌿சாமை - ரத்தசோகையைக் குணப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது. மலச்சிக்கல் தீரும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க உதவும். உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும்.

🌿சோளம் - உணவுக் குழாய் தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படும். ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும். செரிமான சக்தி மேம்படும். வாயுத்தொல்லை நீங்கும். உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியது.

🌿கேழ்வரகு - எலும்புகளை உறுதிசெய்யும். இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். மூப்படைதலைத் தாமதப்படுத்தும். சருமத்தில் பளபளப்பு உண்டாகும்.

🌿வரகு -
உடல் எடையைக் குறைக்கும். மாத விடாய்க் கோளாறு களைச் சரிசெய்யும். மூட்டுவலி இருப்போர் அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை, நரம்பு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்லது.

🌿குதிரைவாலி - சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச் சிக்கலைத் தடுக்கும்

🌿🍶🌿🍶🌿🍶🌿🍶🌿🍶🌿

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here