தமிழக மாணவர் நலன் காக்கவும் தமிழக நலன் காக்கவும் வாருங்கள் சென்னைக்கு -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழக மாணவர் நலன் காக்கவும் தமிழக நலன் காக்கவும் வாருங்கள் சென்னைக்கு -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

CBSE NEET வலைதளத்தை பாருங்கள். அனைத்தும் ஆங்கிலத்தில். ஆனால் "நீட்" கேள்வித்தாள் மட்டும் தமிழிலில் தரப்படும் என்று அறிவிப்பு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்வர் ரூபாய்1400/- பட்டியல் இனத்தவர் (SC / ST) மாற்றுத்திறனாளி (DAP) ரூபாய் 750/- கட்டி விண்ணப்பிக்க வேண்டும். மாதிரி கேள்விகள், பதில் எதுவும் தமிழில் கிடையாது. டாக்டர் கனவோடு மாவட்ட ஆட்சியர் சேர்த்துவிட்ட இராமநாதபுரம் மாவட்டம் அரசின் Elite பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் "கண்ணைக் கட்டி காட்டில் விட்டு வேடிக்கை பார்க்கிறீர்களே! இது நியாயமா?" என்று கேட்கின்றனர். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மத்திய அரசு நடந்துக் கொள்கிறது. தமிழ் நாடு சட்டமன்றம்  ஏகமனதாக நிறைவேற்றிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பிவைத்திருக்கவேண்டும். அனுப்பி வைத்தாரா? இந்திய அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர் நடந்து கொண்டாரா? எதிர்காலம் கேள்விக்குள்ளான மாணவர்கள் ரௌதரத்துடன் கேட்கின்றனர். தமிழ் நாடு என்ன பதில் சொல்லப் போகிறது? ... கேள்வி எழுப்பும் கருத்தரங்கு நாளை (19.2.2017) சென்னை -5, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், பெசன்ட் சாலை, NKT தேசிய பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தமிழ் நாடு மாநில உரிமை காக்கவும் , மாணவர் நலம் காக்கவும்! வாருங்கள்! அரசுக்கு வலுவான செய்தி சொல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here