*பன்னீர் கூடாரத்திற்கு நடிகர்கள்
வருகை தொடங்கியது
தியாகு, ராமராஜன் வந்நநாச்சு
கலை கட்டுதுய்யா.
அம்மா மூன்று எழுத்து
ஓபிஎஸ் மூன்று எழுத்து
டவுசர் பேச்சு..
*வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி*
*தமிழக பாஜகவின் மாநில செயலாளர் கரு.நாகராஜன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், தேவநாதன் யாதவ், நடிகர் நெப்போலியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைவேந்தர் வீ.கே.என். காலமானார்*
*பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது யோகா குருவுக்கு ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை பரிசாக அளித்துள்ளாராம்*
*பன்னீருக்கு ஆதரவாக பாண்டியராஜன்: பின்னணியில் மத்திய நிதி அமைச்சர்*
*பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*
*இலங்கையில் முன்னாள் துணை அமைச்சரான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது*
*நீலகிரியில் தமிழக-கேரள எல்லையான தாளூரில் காட்டு யானை தாக்கி நாகப்பன் என்பவர் உயிரிந்துள்ளார். மாங்காடு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்*
*தமிழக ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என முன்னாள் நீதிபதி ஜெகதீசன் கருத்து தெரிவித்துள்ளார். ஆளுநர் கால தாமதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய அவகாசம் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்*
*அரசியல் குழப்பம் தீரும் வரை சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை தொடரும் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அடையாள அட்டையின்றி யாரையும் தங்கவைக்க மாட்டோம் என விடுதி நிர்வாகிகள் காவல்துறையினரிடம் உறுதி அளித்துள்ளனர்*
*நெல்லை: நாங்குநேரி அருகே களக்காட்டில் 20 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்*
*தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அவசியமில்லை: விஜயகாந்த்*
*ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டுவண்டி போட்டியில் மாடு முட்டி ஒருவர் பலி*
*தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: ஆவடி சட்டசபைத் தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் பாண்டியராஜன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, தற்போதும், அமைச்சராக இருந்து செயல்பட்டு வருகிறார். முதல்வராகும் வாய்ப்பு சசிகலாவுக்கு இருப்பதால், அவரை ஆதரிக்க முடிவெடுத்த பாண்டியராஜன், அவர்தான் தமிழகத்தின் முதல்வராகும் தகுதி படைத்த பெண்மணி என்று தொடர்ந்து கூறி வந்தார்.இதை அறிந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பாண்டியராஜனை போனில் அழைத்துப் பேசியுள்ளார். நீங்கள், மக்கள் செல்வாக்கு இல்லாத சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படத் தேவையில்லை; முதல்வர் பன்னீர்செல்வத்தையும் ஆதரியுங்கள் என கூறியுள்ளார். இதையடுத்தே, பாண்டியராஜன், அடுத்த நாளே, பன்னீர்செல்வம் பக்கம் ஓடோடி வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறினர். http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக