போலியோ சொட்டு மருந்து இந்த ஆண்டு முதல் தவணையாக ஜனவரி 17ம் தேதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இயக்கத்தின் மூலமாக இரட்டை தடுப்பூசி மருந்து 9 மாதம் முடிந்த 15 வயதுக்குட்பட்ட 1.7 கோடி குழந்தைகளுக்கு பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதியும், பிப்ரவரி 21ம் தேதியும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களின் தேதியை மாற்றி சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
அதன்படி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து மார்ச் 5ம் தேதியும், 2வது தவணை ஏப்ரல் 2ம் தேதியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி பல மாவட்டங்களில் நிறைவு பெறாத காரணத்தால், இந்த தடுப்பூசி போடும் பணி மார்ச் 14 வரை காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2ம் ேததி முதல் தவணையாகவும், 30ம் தேதி 2வது தவணையாகவும் வழங்கப்படும்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக