தற்போதைய நிலையில் அதிமுக இரண்டு அணியாக உள்ளது. ஒன்று பன்னீர் செல்வம் அணி மற்றொன்று அணி சசிகலா அணி. இதில் சசிகலாவுக்கு நிர்வகரிகள் ஆதரவும், பன்னீர் செல்வத்திற்கு மக்கள் ஆதரவும் உள்ளது.
பன்னீர் செல்வத்திற்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அதுபோல டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறும்போது;
பன்னீர் செல்வத்திற்கு சசிகலா தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்து வருகிறார். பன்னீர் செல்வத்திற்கு நிர்பந்தம் கொடுக்கவில்லை என்றால் பின்னர் எதற்காக சட்டமன்ற கூட்ட தொடர் முடிந்த மறுநாளே எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை சசிகலா கூட்டினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை என்றால் மத்திய, மாநில அமைச்சர்களை கூட சந்திக்க அனுமதி மறுத்தது ஏன்? ஜெயலலிதாவின் குடும்ப சொத்தில் என்ன தகுதியில் சசி குப்பை கொட்டி வருகிறார். போயஸ் தோட்டத்தில் இருந்து காலம் தாழ்த்தாமல் சசிகலாவை பன்னீர் செல்வம் விரட்ட வேண்டும் என்று கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக