"தமிழகத்தில் 356 சட்டபிரிவை பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்து விரைவில் தேர்தல் நடத்துவதே நிரந்தர தீர்வாகும்.
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளால் தமிழக அரசு இயந்திரம் முழுவதும் முடங்கிப் போய் இருக்கின்றது. ஆளுநர் சசிகலா அல்லது பன்னீர்செல்வம் இவர்கள் இருவரில் யாரை சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க அழைத்தாலும், சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கலவரம் உண்டாகி தமிழத்தில் நிலவும் அமைதி சீர்குலைய வாய்ப்புள்ளது.
மேலும், இந்த இருவரில் யார் வெற்றி பெற்றாலும் நிலையான ஆட்சி கொடுக்கும் வாய்ப்புக்கள் மிக குறைவு.
எனவே, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்து, ஆட்சி நிர்வாகத்தை ஆளுநர் தலைமை ஏற்று விரைவில் தேர்தல் நடத்துவது ஒன்று தான் நிரந்தர தீர்வாக முடியும்.
ஆகையால், இந்த ஒற்றை கருத்தை வலியுறுத்த நம்முடைய அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேர்ந்து ஆளுநரை வலியுறுத்துவது ஒன்று தான் தமிழக நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்"
என்று டாக்டர் அய்யா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு கடிதம் எழுத இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக