குழந்தைகளுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் -பாதுகாத்திட பெற்றோர்களுக்கான வழிகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

குழந்தைகளுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகள் -பாதுகாத்திட பெற்றோர்களுக்கான வழிகள்

குழந்தைகளுக்கு எதிரானபாலியல் தொந்தரவுகளில்இருந்து பாதுகாத்திட வேண்டியபொறுப்புகள் பெற்றோர்களுக்குதான் அதிகமாக

இருக்கின்றது. அதிலும்,குறிப்பாக பெண்களுக்கு தான்அதிகம்.

ஏனென்றால், தந்தை வேலைக்குசென்றவுடன் குழந்தையுடன்அதிக நேரம் இருப்பது ஒரு தாய்தான். குழந்தை பள்ளி விட்டுவந்தவுடன் அல்லது விளையாடிவிட்டு வந்தவுடன் என்றுஎல்லாவற்றையும்கண்காணிக்கக்கூடிய ஒருவாய்ப்பு தாய்க்கு தான்கிடைக்கின்றது.

அதுபோன்ற, நேரங்களில்குழந்தைகளை நாம் எவ்வாறுபாலியல் ரீதியானபிரச்சனைகளில் இருந்துபாதுகாத்துக் கொள்வது என்றவழிமுறைகளை பார்ப்போம்.

இளமை தொடக்கம் –குழந்தைப்பருவத்தில் இருந்தேபாலியல் ரீதியானபிரச்சனைகள் என்ன? என்பதைபுரிய வையுங்கள். அவர்கள்வயதுக்கு வர வேண்டும் என்றுகாத்திருக்காதீர்கள்.

உடல் உறுப்புக்கள் தொடர்பானவிழிப்புணர்வையும்ஏற்படுத்துங்கள். அந்தரங்கஉறுப்புக்கள் தொடர்பானஅறிவுறுத்தலையும்செய்யுங்கள்.

உடல் பாகங்களின் பெயர்களைசரியாக கூறுங்கள் –குழந்தைகளிடம் உடல்உறுப்புக்களின் பெயர்களைசரியாக சொல்லிக் கொடுங்கள்.

அப்பொழுது, தான் அவர்களிடம்யாரும் தவறாக நடந்துகொண்டால், அதை உங்களிடம்சரியாக கூறுவார்கள்.

இரகசியங்கள் இல்லாமல்பாருங்கள் – சில விஷமிகள்குழந்தைகளிடம் ஆபாசமானவிஷயங்கள் அல்லதுஉடல்ரீதியான தொந்தரவுகள்செய்துவிட்டு, பெற்றோரிடம்கூறாதீர்கள் என்று சொல்லிநான் உனக்கு விளையாட்டுப்பொருட்கள் வாங்கிதருகின்றேன் என்றுகூறுவார்கள். அதுபோன்று,யாரும் கூறினால் வீட்டில் வந்து கூற கற்றுக்கொடுங்கள்,,பழக்குங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here