உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி :இரு சக்கர வாகனம் ₹ 10000 - ₹ 12000 வரை தள்ளுபடி விற்பனை ...தள்ளுபடி வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பு குறைய வாய்ப்பு.. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி :இரு சக்கர வாகனம் ₹ 10000 - ₹ 12000 வரை தள்ளுபடி விற்பனை ...தள்ளுபடி வாகனத்தின் மறுவிற்பனை மதிப்பு குறைய வாய்ப்பு..

*நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு.*

_இருசக்கர வாகனங்களின் மாசு வெளியீட்டை நிர்ணயிக்கும் பிஎஸ்3 ((BS-III)) தரமுறையில் அமைந்த வாகனங்களை, ஏப்ரல்1ஆம் முதல் விற்பனை செய்யவோ பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையால், ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ள பிஎஸ் 3 மாடலில் அமைந்த 8 லட்சம் வாகனங்களை விற்க முடியாத நிலை நிறுவனங்களுக்கு உருவாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். எனவே இருக்கிற இருநாள் அவகாசத்தில் இருசக்கர வாகனங்களை விற்றுத் தீர்க்க ஹீரோமோட்டார், ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக இந்த இரு நிறுவனங்களும் வரலாறு காணாத விலைச்சலுகையை அறிவித்துள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் ((Hero MotoCorp)) நிறுவனம், பிஎஸ்3 மாடல் இருசக்கர வாகனங்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வரை சலுகை அறிவித்துள்ளது. ஸ்கூட்டர்களுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாயும், பிரீமியம் பைக்குகளுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயும், தொடக்க நிலையில் அதிக அளவில் விற்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர். ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனமானது, பிஎஸ்-3 மாடல் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்கள் அனைத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் சலுகை அறிவித்துள்ளது._

_ஸ்டாக்குகள் இருக்கும்வரையோ மார்ச் 31ஆம் தேதி வரையோ இந்த சலுகை பொருந்தும் என இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன._

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here