11 மணி செய்திகள் 26/03/2017 தமிழ் இணைய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

11 மணி செய்திகள் 26/03/2017 தமிழ் இணைய செய்திகள்

தமிழ் இணைய செய்திகள்
               *_26 - 03 - 2017_*
          *_ஞாயிற்றுக்கிழமை_*

       

*_📝டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு வைகோ நேரில் ஆதரவு_*

டெல்லி : டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு வைகோ நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். வறட்சி நிவாரணம் கோரி டெல்லியில் 14 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_📝இலங்கை கடற்படை அத்துமீறல்: புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் சிறைப்பிடிப்பு_*

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளையும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

மீனவர்களையும் படகுகளையும் காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 26 மீனவர்களா சிறைபிடித்துச் சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

*_📝வருமானம் வரும் துறையாக மாறிய பள்ளிக்கல்வித்துறை தரமற்ற ஆய்வக உபகரணங்களில் 4 ஆண்டுகளாக பல கோடி மோசடி_*

வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தரமற்ற ஆய்வக உபகரணங்கள் வாங்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது. இவற்றின் பராமரிப்பு, கட்டமைப்பு, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி, இடைநிலை கல்வி திட்டம் வாயிலாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு, மானியமாக ஆண்டுதோறும் தலா ரூ.50 ஆயிரம் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியில் ஆய்வக பொருட்கள், புத்தகம், சிறு பராமரிப்பு செலவு, தொலைபேசி, இணையதள சேவை பயன்பாட்டுக்கு என இத்தொகை பயன்படுத்தப்படுகிறது.

பள்ளிக்கான ஆய்வக உபகரணங்கள் உட்பட தேவையான பொருட்களை கொள்முதல் செய்யும்போது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒளிவுமறைவு இல்லாமல் தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த புள்ளி பெற வேண்டும். குறைந்த விலை குறிப்பிடும் நிறுவனத்திடம், பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்பது விதிமுறையாக வைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் மட்டுமே பொருட்களை கொள்முதல் செய்ய தலைமையாசிரியர்களுக்கு அரசியல்வாதிகள் நெருக்கடி தருகின்றனர். அவ்வாறு கொள்முதல் செய்யும்போது ரூ.7,000 மதிப்புள்ள ஆய்வக பொருட்களை ரூ.25 ஆயிரமும், ரூ.2,000 மதிப்புள்ள புத்தகங்களை ரூ.7,500 எனவும் பொருட்களின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி தரமற்றவையாக சப்ளை செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

ஆய்வக உபகரணங்கள் வாங்க கல்வி அதிகாரிக்கு நிதி வந்தவுடன், அந்த நிதி அந்தந்த பள்ளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அந்நிதியை தலைமை ஆசிரியர்கள் அரசியல்வாதிகளிடம் ஒப்படைத்து விடுவதாகவும், அப்படி கொடுக்கப்படவில்லை என்றால் தாங்கள் மிரட்டப்படுவதாகவும் தலைமை ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் விஷியத்தை வெளியில் கூறாமல் இருக்க ரூ.2 ஆயிரம் கொடுத்து தலைமை ஆசிரியர்களின் வாயை அரசியல் வாதிகள் அடைத்துவிடுகின்றனர். இப்படி வழங்கப்பட்ட நிதியில் தரமற்ற உபகரணங்களை பள்ளிகளுக்கு சப்ளை செய்துவிட்டு பணத்தை கொள்ளை அடித்து விடுகின்றனர். இந்த மோசடியை தொடர்ந்து செய்து வர உயர் கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் தங்கள் கவனிப்பை செய்து விடுவதாகவும் தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தரமற்ற ஆய்வக உபகரணங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த உபகரணங்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அதுவும் ஆண்டுக்கு ஆண்டு உபகரணங்களின் அளவு குறைந்து வருகிறது என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சில அரசு பள்ளிகள் சில குறிப்பிட்ட உபகரணங்கள் இல்லாததால் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு சென்று செய்முறையை கற்று வருகின்றனர். ஆய்வகத்தில் தரமற்ற பர்னிச்சரும், ஆய்வக உபகரணங்களும் சப்ளை செய்யப்படுவதால், பெரும்பாலான பள்ளிகளில் பல ஆய்வகங்கள் மூடியே கிடக்கின்றன என்ற புகாரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

போதிய ஆய்வக வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கும், இந்த உபகரணங்களை வாங்குவதால், அதை பயன்படுத்த முடியாமல், அவை அட்டை பெட்டிகளுக்குள் காட்சி பொருள்களாக முடங்கி கிடக்கின்றன. இதற்கு எல்லாம் எடுத்துக்காட்டாக வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் மற்றும் விலங்கியல் ஆய்வகத்தில் ஆய்வக உபகரணங்களே இல்லாமல் காட்சியளிக்கிறது. 
நடப்பு கல்வி ஆண்டும் அதே பொருட்களை வாங்கி, அதற்காகும் செலவான ரூ.25 ஆயிரத்தை காசோலையாக அனுப்பி வருகின்றனர். 

இவ்வாறு 4 ஆண்டுகளாக தரமற்ற உபகரணங்கள் வாங்குவதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்து வருவதாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு உடந்தையாக சில கல்வி அதிகாரிகளும் செயல்படுவதாக கூறப்படுகிறது.எனவே, பள்ளிகளுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் விவரங்களை பள்ளிகளிடமிருந்து முன்கூட்டியே அரசு பெற்று, அதற்கான பொருட்களை அரசே கொள்முதல் செய்து, பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கினால், இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பது சமூக ஆர்வலர்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.

*_📝திருவண்ணாமலையில் 6 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை_*

தி.மலை: திருவண்ணாமலை சேத்பட அடுத்த நெடுங்குணத்தில் வீட்டில் இருந்து 6 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விவசாயி சீனிவாசன் என்பவா் வீட்டில் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சீனிவாசன் திருவண்ணாமலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை lஅடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

           http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here