🌹இந்தியா வங்கதேச நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தானது-1972
🌹சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது-1932
🌹நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு
வந்தது-1861
🌹புளூட்டோவின் ஒளிப்படம் முதன்முறையாக எடுக்கப்பட்டது-1915
🌹அமெரிக்காவின் புகழ்பெற்ற தளபதியான ஜோசப் ஸ்டில்வெல் இன்று பிறந்தார்-1883
🌹🌹4 செயற்கை கோள்களை செலுத்த இஸ்ரோ அடுத்த முயற்சி!
🌹🌹 தமிழக பள்ளிக் கல்வித்துறையில் விரைவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
🌹🌹 இந்தியாவில் நிதியாண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றுவது குறித்து ஆராய நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
🌹🌹தமிழக காவல்துறையினரின் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க காவல்துறை இயக்குநரகம் உத்தரவு.
🌹🌹 10 பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடித்து களப்பரிசோதனை நடத்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி
🌹🌹 ஆசிரியர் பயிற்றுநர்கள் 4 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு மாற்றப்படாத நிலையில், இந்த ஆண்டின் கலந்தாய்விலும் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை, அவர்களை விரைவில் பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர கழகம் கோரிக்கை.
🌹🌹சண்டிகரில் நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக ரயிலை வைத்துக்கொள்ளுங்கள் என, விவசாயிக்கு சாதகமாக லூதியானா நீதியரசர் தீர்ப்பு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
🌹🌹அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதால்
அரசு பள்ளிகளில் புதிதாக 825 பேருக்கு ஆசிரியர் பணி!- நாளிதழ் செய்தி
🌹🌹நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை
🌹🌹தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலக கூடுதல் கட்டிட திறப்பு விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌹🌹மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
🌹🌹ஜிப்மர் வினாத்தாள் 'லீக்': சி.பி.சி.ஐ.டி., விசாரணை
🌹🌹இந்திய எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை
🌹🌹கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல்கள் விடியி விடிய ரோந்தில் ஈடுபட்டதாக புகார்*
🌹🌹பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🍎அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா?
🌻அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் ஜெயக்குமாருக்கு சொந்த ஊர் சிவகாசி அருகேயுள்ள ஜமீன் சல்வார்பட்டி . அங்கு ஆரம்பக் கல்வி கற்றார்.அப்பா இல்லை. அம்மா பட்டாசு ஆலைக் கூலித் தொழிலாளி. சொந்தங்கள் ஒவ்வொருவரும் வெடிவிபத்தில் இறக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் அவர் முடங்கவில்லை.
🌻தொடர்கதையான வெடி விபத்தின் ஆபத்தை எப்படிப் போக்கலாம் என்று யோசித்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி , நாரணாபுரம் அரசுப்பள்ளியில் படிக்கும் ஜெயக்குமாருக்கு எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை இயற்கையாக அமையப்பெற்றுள்ளது.
🌻வந்தபின் பார்ப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது என உணர்ந்த மாணவர் ஜெயக்குமார், தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கினார்.
🌻 ''ஆலைகளில் வெடிபொருட்கள் கிடங்கு அறைகளில் இந்த இயந்திரத்தைப் பொருத்திவிட வேண்டும் என்றார்.
🌻 வெடிபொருட்கள் தீப்பிடித்தால் ஏற்படும் வெப்பத்தினை உணரும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🌻இதன்மூலம் அறை வெப்பநிலையை விட சூடு அதிகமாகும்போது, அதை உணர்ந்து தானியங்கி இயந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.
🌻உடனே அலாரம் ஒலிப்பதோடு, சிவப்பு விளக்கும் எரியும். அத்துடன் தீயை அணைப்பதற்காக மணல் தொட்டியும் இயந்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
🌻அதில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறியின் உதவியால் பரவும் நெருப்பின் மீது மணலை வீசி, தீயை அணைக்கலாம்.
🌻இந்த செயல்திட்டம் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. ஜெயக்குமாரை இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவசுப்ரமணியம், இங்கர்சால், உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெக்டே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
🌻 ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனம் இவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கியுள்ளது.
🌻 இதன்மூலம் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
🌻அதே நிறுவனம் மூலம் ஜெயக்குமாருக்கு ரஷ்யா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
🌻 அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும்.
🌻 அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார். ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்படுகிறது.
🌻 இந்நிலையில் உதவும் உள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'' என்கிறார்.
🌻இது எதையும் அறியாமல் சிரித்த முகத்துடன் படித்துக்கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். நம்மிடம் பேசும்போது, ''எங்க ஊருல மாசத்துக்கு ரெண்டு வெடி விபத்தாவது நடந்துரும். எத்தனை லட்சம் குடுத்தாலும் ஒரு உயிர வாங்க முடியாதுல்ல? உயிரைக் காப்பாத்துறக்காண்டி ஏதாவது பண்ணலான்னு யோசிச்சேன்.
🌻 எல்லாரும் பாராட்டுறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அம்மா இன்னும் நிறைய கண்டுபிடிக்கணும்னு சொனாங்க.
🌻 சாலை விபத்தை தடுக்கற கருவி பத்தி யோசிச்சிட்டு இருக்கேன். சீக்கிரத்திலேயே அதையும் பண்ணிடுவேன்'' என்பவரின் முகத்தில் ஒளிர்கிறது தன்னம்பிக்கையும், சாதிக்கும் ஆசையும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக