இரவு செய்திகள் 25/03/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இரவு செய்திகள் 25/03/2017

  இரவு செய்திகள்
 
25/03/2017

தமிழ் இணைய செய்திகள்
 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*ரஜினிகாந்த் இலங்கை செல்வதை ரத்து செய்தது நல்ல முடிவு அல்ல - தமிழ் இணைய செய்திகள்

*பொதுமக்கள் வரி செலுத்த வசதியாக அனைத்து வங்கிகளும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை விடுமுறையின்றி இயங்கும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு*

*ஏப்ரல் 1 வரை பொது விடுமுறை நாள்களில், வங்கிகள் இயங்கும், RTGS, NEFT இணைய வழி பணப்பரிமாற்ற சேவைகளும்  செயல்படும்- ரிசர்வ் வங்கி*

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
1] நாமக்கல் மாவட்டம் சின்னகவுண்டம்பாளையத்தில் அட்டை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் ஆலையில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்

2] தூத்துக்குடி மாவட்டத்தில் 3-வது நாளாக தாது மணல் கிடங்குகளில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 4,37,426 டன் கார்னைட், இல்மனைட் ,ஜிர்கான் உள்ளிட்ட தாது மணல் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. வி.வி மினெரல்ஸ், பி.எம்.சி மற்றும் ஐ.எம்.சி நிறுவனங்களுக்கு சொந்தமான 22 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டது

3] நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அரை அடிக்கு மேல் விரிசல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்த உள்ளனர்

4] கோவை அருகே புதுப்பதியில் யானை தாக்கியதில் சாந்தி என்பவர் உயிரிழந்துள்ளார். ஆடு மேய்த்து கொண்டிருந்த சாந்தியை காட்டு யானை தாக்கியது

5] திமுக வரலாறு குறித்த நூலை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். க திருநாவுக்கரசு எழுதிய நூலை ஸ்டாலின் வெளியிட
டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது-தமிழ் இணைய செய்திகள்

6] எனது கருத்தை அரசியலாக்கதிர்கள் என ரஜினிகாந்த் கூறுவது நியாயமானது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பொய் கருத்து கணிப்புகள் பரப்பப்படுகின்றன என்று தினகரன் தெரிவித்தார். வரும் 27-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் தினகரன் தெரிவித்தார்

7] பாகுபலி-2 திரைப்படத்தின் டிரைலரை 4 நாட்களில் 10 கோடி பேர் பார்த்துள்ளனர். பிரம்மாண்டமான க தயாரிக்கபப்ட்டுள்ள பாகுபலி-2 திரைப்படம் ஏப்ரல் 28 ம் தேதி வெளியாகவுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் 2015 ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் வசூல் சாதனை படைத்தது

8] பெரம்பலூரில் இறந்த பெண்ணின் உடலை வைத்து பூஜை செய்த மந்திரவாதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மந்திரவாதி கார்த்திக் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

'9] தஞ்சாவூர்: தளவாய்பாளையம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரைக்குடியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் ஞானசேகரன், மற்றும் ஓட்டுநர் கருப்பையா உயிரிழந்தனர்

10] நாகை மாவட்டத்தில் இரட்டை மடிப்பு வலையை பயன்படுத்திய 7 விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 7 விசைப்படகு உரிமையாளர்கள் இரட்டை மடிப்பு வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக புகார் தெரிவிக்கபப்டத்தை தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டது -தமிழ் இணைய செய்திகள்

11] மாதவரம் அருகே ராமச்சந்திரா நகரில் 40 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கபப்ட்டது. மின் வாரிய ஊழியர்கள் என்று வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் கத்தி முனையில் நகையை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
12] ஒடிசா மாநிலம் மல்காங்கிரி என்ற இடத்தில் போலீசார் முன்னிலையியல் 3 நக்சல்கள் சரணடைந்தனர்

14]அரசியலுக்கு வருகிறாரா விஜய்⁉ -தமிழ் இணைய செய்திகள்

வரும் ஏப்ரல்.12ந் தேதி நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதி🗳இடைத்தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறது என்று சமீபத்தில் ஒரு கேள்வி எழுந்தது😳.இதனை தொடர்ந்து, இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி ஒன்றை அண்மையில் அளித்துள்ளார்😯.அவர் கூறுகையில்🎙,"10, 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்.யை அரசியலில் கொண்டு வரலாம் என்று ஆசைப்பட்டேன்👍. நடிகராக இருப்பதால் அரசியலில் நல்ல 💐வரவேற்பு கிடைக்கும், அரசியலிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரலாம்👍என்று நினைத்தேன். ஆனால் தற்போது உள்ள அரசியல் எப்படிப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே😟.இந்த சூழ்நிலையில் எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை😠.விஜய் அரசியலுக்கு வரமாட்டார்😳.மேலும், விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபடாததால் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்காது" என்று அவர் கூறியுள்ளார்.

  
           

*விவசாய கடன்களை மத்திய, மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் : நடிகர் விஷால் _*

*_மேலூர் திருமலைநாதர் கோவில் கிணற்றில் ரூ.1.90 லட்சம் பழைய ரூ.500 நோட்டுகள் _*

*ரஜினிகாந்த் இலங்கை செல்வதை ரத்து செய்தது நல்ல முடிவு : ஜி.கே.வாசன் _*

*நாமக்கல் அருகே அட்டை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து_* 

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_நாகை அருகே ரயில்வே மேம்பாலத்தில் விரிசல் _*

*_கோவை அருகே யானை தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் பலி_*

 
*_சமூக வலைதளங்களில் பொய் கருத்து கணிப்புகள் பரப்பப்படுகின்றன : டிடிவி தினகரன்_*தமிழ் இணைய செய்திகள்

*_இறந்த பெண்ணின் உடலை வைத்து பூஜை செய்த மந்திரவாதி குண்டர் சட்டத்தில் கைது _*

*_தளவாய்பாளையம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு _*

*_ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான வடகாடு போராட்டம் ஒத்திவைப்பு _*

*மாதவரம் அருகே கத்தி முனையில் 40 சவரன் நகை கொள்ளை _*

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here