காலை செய்திகள் தமிழ் இணைய செய்திகள் 29/03/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்திகள் தமிழ் இணைய செய்திகள் 29/03/2017

     *-காலை செய்திகள்-*
           *_29 - 03 - 2017_*
         *_புதன்கிழமை_*

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

      *_தமிழ் இணையசெய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மத்திய காவல் பார்வையாளர் போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை_*

சென்னை: ஆர்.கே. நகர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளிலும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க, பொது பார்வையாளர் பிரவீன் பிரகாஷ், காவல் பார்வையாளர்  ஷிவ்குமார் வர்மா ஆகியோர் கடந்த 23ம் தேதி  முதல் பொறுப்பேற்று கொண்டனர். செலவின பார்வையாளர் அபர்ணா வில்லூரி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், மத்திய பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென் னை மாநகர கமிஷனர் கரன் சின்காவுடன், காவல் பார்வையாளர் ஷிவ்குமார் வர்மா உள்ளிட்டோர் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.இதில், ஆர்.கே. நகர் தொகுதியில் தற்போதைய நிலை, பதற்றமான வாக்கு சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், மத்திய பாதுகாப்பு படையின் வருகை உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டன.   

*_✴🇮🇳✴கட்டுமானம் முடிக்கப்படும் வரை வீட்டுக்கடன் தவணைக்கும் ஜிஎஸ்டி வரி உண்டு: கடை வாடகைக்கும் வரி_*

புதுடெல்லி: கட்டிட வாடகை, குத்தகை, கடன் இஎம்ஐ கட்டுவதற்கும் இனி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டி வரும். ஜூலை 1ம் தேதி முதல்  அமலாக உள்ள ஜிஎஸ்டியில் இதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.  நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டுவர,  ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை, இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு  செய்துள்ளது. இதில் 5, 12, 18, 28 சதவீதம் என நான்கு வகையாக வரி விகிதங்கள் அமைக்கப்பட உள்ளன. எதற்கு எவ்வளவு வரி விதிப்பது  என்பது பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி முடிவு எடுக்கும்.  இதற்கிடையில் ஜிஎஸ்டிக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி,  யூனியன் பிரதேச ஜிஎஸ்டி மற்றும் இழப்பீடு மசோதா ஆகிய 4 துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஜிஎஸ்டி மசோதாக்களை  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.

துணை மசோதாக்களில், மத்திய ஜிஎஸ்டியில் வரி தொடர்பாக சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இதன்படி வணிக உபயோகத்திற்காக  கட்டிடத்தை வாடகைக்கு விடுதல், குத்தகைக்கு விடுதல், நிலம் குத்தகை ஆகியவை சேவையாக வகைப்படுத்தப்பட உள்ளது. எனவே  இவற்றுக்கு சேவை வரி வசூலிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. வணிக ரீதியாக தொழிற்சாலைகள், வீடு ஆகியவற்றை முழுமையோகவோ ஒரு  பகுதியாகவோ வாடகை அல்லது குத்தகைக்கு விட்டாலும் அது சேவை என்ற இனத்துக்குள் வகைப்படுத்தப்படுகிறது.  எனவே, ஜூலை 1ம்  தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இவற்றுக்கு சேவை வரி செலுத்த வேண்டி வரும். கட்டுமான பணியில் உள்ள கட்டிடத்தை  வாங்கியவர்கள், அதற்கான இஎம்ஐ செலுத்துவதற்கும் இந்த வரி உண்டு. 

தற்போது சேவை வரி 15 சதவீதமாக உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் சேவை வரி 18 சதவீதமாக இறுதி செய்யப்படும் என தெரிகிறது.  எனவே, வாடகை, குத்தகைக்கு அத்துடன் சேர்த்து 18 சதவீதம் சேவை வரியாக செலுத்த வேண்டிவரும். பொருட்கள் என்பதற்கு பணம் மற்றும்  பங்குகள் தவிர அசையும் சொத்துக்களை குறிக்கும் எனவும், சேவைகள் என்பது பொருட்கள் தவிர பிறவற்றை குறிக்கும் எனவும் மசோதாவில்  கூறப்பட்டுள்ளது. அசையா சொத்துக்கள், நிலம் கட்டிடம் ஆகியவற்றுக்கு பத்திர செலவு தவிர ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படலாம் என்று  மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் இதுபற்றிய தெளிவான வரையறை எதுவும் இன்னும் அளிக்கப்படவில்லை.  இதுகுறித்து  சட்ட வல்லுநர்கள் கூறுகையில், தற்போது சேவை வரி என்பது வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு வாங்கப்படும்  வாடகைக்கு வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு இது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

முழுமையாக முடிவு பெறாத, கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சேவை வரி உள்ளது என  அவர்கள் தெரிவித்தனர். நிலத்தை வைத்து இதற்கான மதிப்பீடு செய்யப்படுகிறது.  மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி வரிகளை  இறுதி செய்வது ஜிஎஸ்டி கவுன்சிலிடம்தான் உள்ளது. இந்த மாதம் 31ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கிறது இதில். வரி தொடர்பாக  வந்துள்ள பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும்’’ என்றனர்.

*_✴🇮🇳✴ரேகை வைத்து பொருட்கள் வாங்கலாம் ஆதார் பே அடுத்த மாதம் அறிமுகமாகிறது_*

புதுடெல்லி: ஆதார் அடிப்படையில் பரிவர்த்தனை மேற்கொள்ள ஆதார் பே அடுத்த மாதம் 14ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு, பணமற்ற பரிவர்த்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்  ஒரு பகுதியாக, பீம் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப  முடியும்.  இதன் தொடர்ச்சியாக ஆதார் பே ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பணமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க, டெபிட்  கார்டில் பொருள் வாங்குவோருக்கு லக்கி கிருஹக் திட்டமும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்கும் வியாபாரிகளுக்கு டிஜி தன் வியாபார்  திட்டமும் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு குலுக்கல் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது. 

நூறு நாள் கொண்ட இந்த திட்டத்தின் மெகா குலுக்கல்  அம்பேத்கர் பிறந்த நாளான அடுத்த மாதம் 14ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம்  ஆதார் பே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.  இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் பே திட்டத்தில் சுமார் 20  வங்கிகள் இணைய உள்ளன. ஆதார் பே-யில் இணையுமாறு அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்  விடுத்துள்ளது. தேசிய பேமன்ட் கார்ப்பொரேஷனிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. 

 தற்போது உள்ள பிற பரிவர்த்தனை ஆப்ஸ்களை போல, வாடிக்கையாளர் ஸ்மார்ட்போன் எதுவும் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. டெபிட்  கார்டும் தேவையில்லை. வங்கி எண்ணுடன் அவர்களது ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் போதுமானது. கடைகளில் பொருட்கள் வாங்கி விட்டு  பணம் செலுத்த ரேகை வைத்து உறுதி செய்தாலே, கடைக்காரர் கணக்கிற்கு பணம் சென்றுவிடும். இதற்கு கடைக்காரர்கள் ஒரு  பரிவர்த்தனைக்கு 0.25 சதவீதம் என்ற அடிப்படையில் சம்பந்தப்பட்ட வங்கிக்கு செலுத்த வேண்டிவரும். மொபைல் வாலட், கார்டுகளுக்கு  சிறந்த மாற்றாக இது இருக்கும் என்றார்.

*_✴🇮🇳✴புதிய 22 அம்சங்களுடன் நிசான் டெரானோ அறிமுகம்_*

சென்னை:  நிசான் இந்தியா நிறுவனம் தனது புதிய டெரானோவை, 22 புத்தம் புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம்  ட்யூயல் டோன், இன்டீரியர், குரூஸ் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரை நேவிகேஷன், ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாட்டு வசதிகள்  கொண்ட ஸ்டியரிங், கிரவுண்ட் கிளியரன்ஸ் 205 மி.மீ, 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் உள்ளன. கச்சிதமான,  போல்டான தோற்றத்துடன் இந்த எஸ்யுவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியூ டெரானோவின் தொடக்க விலை ரூ.9.97 லட்சம் (சென்னை  எக்ஸ்ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து சாலைகளுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் 6 வேக மேம்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவ் வசதி உள்ளன. எக்ஸ்எல்,  எக்ஸ்இடி, எக்ஸ்விடி பிரீ ஏஎம்டி உள்ளிட்ட 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதை அறிமுகம் செய்த நிசான் மோட்டார் இந்தியா நிறுவன  விற்பனை, வாடிக்கையாளர் சேவை பிரிவு துணை தலைவர் சத்தீந்தர் சிங் பாஜ்வா, ‘‘புதிய நிசான் டெரானோ அம்சங்கள்  வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியான ஓட்டுதல் அனுபவத்தையும் வழங்கும்’’  என்றார்.

*_✴🇮🇳✴வங்கி கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும்_*

புதுடெல்லி: மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் கூறியதாவது: ரிசர்வ் வங்கி  விதிமுறைகளின்படி, ஏற்கெனவே உள்ள குறைந்த பட்ச இருப்பு தொகை, அபராதங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்யப்பட்டால், ஒரு மாதம்  முன்பே தெரிவிக்க வேண்டும். சில வங்கிகள் ஒரு மாதத்தில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காதது  போன்றவற்றுக்கு கட்டணம்  வசூலிக்கின்றன.  
 
நிர்ணயிக்கப்பட்ட இருப்புக்கும் அதற்கும் கீழான இருப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்துக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படுகிறது.  இவற்றை  வங்கிகள் நிர்ணயிக்கலாம் எனினும், அது நியாயமான, ஏற்கத்தக்க ஒன்றாக இருக்க வேண்டும்’’ என்றார்.

*_✴🇮🇳✴நாளை ரிலீசாகும் ‘கிரேட் பாதர்’ மம்மூட்டி பட காட்சிகள் பேஸ்புக்கில் வெளியானது_*

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் மம்மூட்டி நடித்த ‘கிரேட் பாதர்’ என்ற படம் ெவளியாவதற்கு முன்பே பேஸ்புக்கில் கிளைமாக்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்த ‘கிரேட் பாதர்’ என்ற படம் நாளை(30ம் தேதி) வெளியாக உள்ளது. இந்த படத்தில் தமிழ் நடிகை ஸ்னேகா கதாநாயகியாக நடித்துள்ளார். புதுமுக இயக்குநரான ஹனீப் ஆதேனி இப்படத்தை இயக்கியுள்ளார். நாளை படத்தை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் செய்து வந்தார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் நேற்று, ‘கல்சர் அன்ட் ஆர்ட்’ என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியானது. 

செல்போனில் எடுக்கப்பட்ட இக்காட்சிகளை வெளியான ஒருசில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த பேஸ்புக் பக்கம் உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் தெரிவித்தார். படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன் பேஸ்புக்கில் முக்கிய காட்சிகள் வெளியானது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

*_✴🇮🇳✴ஜன்தன் கணக்குகளை பராமரிக்க ரூ.774 கோடி_*

புதுடெல்லி: ஜன்தன் கணக்குகளை பராமரிக்க ரூ.774 கோடி தேவைப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் வங்கி கணக்கு  துவக்கும் வகையில், ஜன்தன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.  அடுத்த மாதம் 1ம் தேதி முதல், துணை வங்கிகளை இணைத்து  ஆசியாவின் மிகப்பெரிய வங்கியாக உருமாறும் பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5,000  வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிவரும் என தெரிவித்திருந்தது. ஜன்தன் கணக்குகளை பராமரிக்க நிதி  தேவைப்படுவதால் இந்த முடிவு எடுத்ததாக, பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா அறிவித்தார்.

 இந்நிலையில், மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து, மத்திய நிதித்துறை இணையமைச்சர்  சந்தோஷ்குமார் கங்க்வார் கூறியதாவது:  பிரதமர் ஜன்தன் திட்டத்தில் துவக்கப்பட்ட கணக்குகளை நிர்வகிக்க வங்கி மற்றும் ஆண்டு  வாரியாக செலவு விவரங்கள் கணக்கிடப்படவில்லை. ஆனால், பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த விவரங்களில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம்  தேதிப்படி ரூ.774.86 கோடி கோடி செலவாவதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பு எதுவும் இல்லாத ஜன்தன் கணக்குகளின் எண்ணிக்கை கடந்த  ஆண்டு நவம்பர் 9ம் தேதிப்படி 5.93 கோடியாகவும், டிசம்பர் 28ம் தேதிப்படி 6.32 கோடியாகவும் உள்ளது.  

இதுபோல், இவற்றில் உள்ள மொத்த டெபாசிட் நவம்பர் 9ம் தேதிப்படி ரூ.45,636 கோடியாகவும், டிசம்பர் 28ம் தேதிப்படி ரூ.71,036 கோடியாகவும்  உள்ளது.  இந்த மாதம் 24ம் தேதிப்படி, 92,52,609 ஜன்தன் கணக்குகள் கடந்த ஓராண்டாக பரிவர்த்தனை இல்லாததால் முடக்கப்பட்டுள்ளதாக  பொதுத்துறை, ஊரக மற்றும் தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன என்றார்.

*_✴🇮🇳✴சிறை நிர்வாகம் அனுமதியளித்தாலும் வெளி உணவுகளை தவிர்க்கிறார் சசிகலா: பயம் காரணம் என்று தகவல்_*

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர்  சசிகலாவுக்கு வெளியில் இருந்து வரும் உணவை சாப்பிட சிறை நிர்வாகம்  அனுமதி வழங்கினாலும்  பயம் காரணமாக அதை சாப்பிட அவர் மறுப்பதாக  தெரியவந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு  கடந்த மாதம் 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா,  இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையில்  அடைக்கப்பட்டு நேற்றுடன் 42 நாட்கள் கடந்துள்ளது.  கர்நாடக சிறைதுறை சட்டம்  1963ன் 35வது பிரிவின் படி சசிகலாவுக்கு அவர் விரும்பும் ஆடைகள் அணிந்து  கொள்ள அனுமதி வழங்கியுள்ளதால், அவர் சிறை சீருடை அணியால் சொந்த உடை  அணிந்து கொள்கிறார்.

அதே சமயத்தில் சிறை விதிமுறைகள் மீறி அவருக்கு சில  சலுகைககள் வழங்கியுள்ளதாக சிறை வட்டாரம் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் அதை   சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மறுத்துள்ளார். தன்னை பார்க்க வரும்  கட்சி பிரமுகர்களை சந்திக்க தவிர்க்கும் சசிகலா, வக்கீல் செந்தில் உள்பட  சிலரை மட்டும் அடிக்கடி சந்தித்து பேசுவதாக சிறை ஊழியர்கள் மூலம்  தெரியவந்துள்ளது. சிறையில் கூழ் குடிக்கும் சசிகலா: சமீப  நாட்களாக சிறையில் உள்ள சசிகலாவுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து  தினமும் நூற்றுக்கணக்கில் கண்டனக் கடிதங்கள் வருகிறது. அதில், ஜெயலலிதா மரணத்திற்கு  அவரே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் அதிகமுள்ளது. இந்த கடிதஙகள்  சசிகலாவுக்கு ஒருவித பயம் மற்றும் படபடப்பை ஏற்படுத்தியுள்ளது. 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
சிறை  நிர்வாகம், சசிகலாவுக்கு வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிட அனுமதி  வழங்கியுள்ளது. இருப்பினும் பயம் காரணமாக, வெளியில் இருந்து வரும் உணவுகளை முழுமையாக அவர் தவிர்த்து விடுவதாக  தெரிய வந்துள்ளது. இதனால் சிறையில் வழங்கும் உணவை சாப்பிடும் அவர் கோடைக்காலம் என்பதால்  தினமும் கேழ்வரகு கூழ், சாம்பார்-சாதம், சப்பாத்தி அதிகம் விரும்பி  சாப்பிடுகிறார். சிறை வளாகத்தில் உள்ள பேக்கரியில் கிடைக்கும் பிரட், பன்,  பிஸ்கட் வாங்கி சாப்பிடுகிறார். வெளியில் இருந்து வரும் உணவு  மட்டுமில்லாமல், பால், பழங்கள், பிஸ்கட்களை கூட வாங்க மறுப்பதாக சிறை  ஊழியர்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

சசிகலாவின் பாதுகாப்பை கருத்தில்  கொண்டு அவரை சந்திக்க வரும் பிரமுகர்களிடம் நீண்ட விசாரணைக்கு பின் சிறை  கண்காணிப்பாளர் அறை எதிரில் உள்ள காலி அறையில் சந்திக்க  அனுமதிக்கப்படுகிறது. பெண்கள் பிரிவு சிறை கண்காணிப்பாளர் அனிதாவின்  பாதுகாப்பில் தான் அவர் விஐபிகளை சந்திக்கிறார். தமிழ் பேச தெரிந்த மூன்று  ஊழியர்கள் அடிக்கடி சசிகலாவிடம் சென்று தேவையான உதவிகள் செய்து  வருகிறார்கள். சிறையில் இளவரசி தவிர வேறு யாருடனும் பேசாமல் தனிமையாக  இருக்கும் அவர் அதிக நேரம் புத்தகம் படிப்பதில் செலவிடுவதாக சிறை ஊழியர்கள்  தெரிவிக்கின்றனர்.

*_✴🇮🇳✴சமாஜ்வாடியின் சட்டப்பேரவை தலைவராக அகிலேஷ் தேர்வு_*

லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் சட்டப்பேரவை தலைவராக கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள் அசம்கான், சிவ்பால் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்வில்லை. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஒருமனதாக சட்டப்பேரவை மற்றும் மேலவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முன்னதாக நேற்று முன்தினம் சமாஜ்வாடியின் சட்டப்பேரவை தலைவராக கட்சியின் மூத்த தலைவரான எம்எல்ஏ ராம் கோவிந்த் சவுத்ரியை அகிலேஷ் யாதவ் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அசம் கான் மற்றும் சிவ்பால் ஆகியோர் சட்டப்பேரவை தலைவர் பதவிக்கான போட்டியாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவராலும் அகிலேஷ் ஆதரவை பெற முடியாததால் தோல்வியடைந்தனர். இதனையடுத்து நேற்று நடந்த கூட்டத்தை அவர்கள் புறக்கணித்தனர்.

*_✴🇮🇳✴உச்ச நீதிமன்றம் உத்தரவு: லோக்பால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு_*

புதுடெல்லி: லோக்பால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்தக்  கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பொதுமக்களின் பணத்தை கையாடல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில் கடந்த 2013ல் லோகபால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா ெகாண்டு வரப்பட்டது. இதன்படி மத்திய அரசை லோக்பால் மூலமும் மாநில அரசை லோக்ஆயுக்தா மூலமும் விசாரிக்க வகை செய்யும் வகையிலான மசோதா கடந்த 2013ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இதற்காக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உள்பட 8 பேர் கொண்ட தேர்வுக் குழு, லோக்பால் அமைப்பில் இடம் பெறும் நீதிபதிகளை தேர்வு செய்வார்கள். இந்த நிலையில் லோக்பால் அமைப்பை விரைவில் உருவாக்க கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வக்கீல் சாந்திபூஷன் மூலம் வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘`லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் 2013 படி லோக்பால் தேர்வு கமிட்டியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் முக்கிய பங்கு வகிக்கிறார். தற்போது நாட்டில் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியில் யாரும் நியமிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரசுக்கு   மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவில்லை. 

இதனால் அந்த இடம் காலியாக உள்ளது. மேலும் லோக்பால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் தற்போதைய நிலையில், லோக்பால் அமைப்பை உடனடியாக ஏற்படுத்த முடியாது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘அனைத்து கட்சியினரிடமும் வழக்கு தொடர்பாக கருத்து கேட்டு முடிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறோம்’’ என்று தெரிவித்தனர்.

*_✴🇮🇳✴பனிச்சரிவால் சிக்கி தவித்த 71 சுற்றுலா பயணிகள் மீட்பு_*

ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் உள்ள சங்க்லா கணவாய் மற்றும் டாங்ஸ்டி கிராமம் இடையே பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற ராணுவ வீரர்கள் 21 பெண்கள் உட்பட 71 சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளனர். இதுதொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு உணவு, உடை மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

*_✴🇮🇳✴பண மோசடி வழக்கில் லலித்மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்ப இன்டர்போல் மறுப்பு_*

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித்மோடிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பவேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்தது. கடந்த 2009ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியை சர்வதேச அளவில் ஒலிபரப்புவதற்கான உரிமையை வழங்கியதில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக ஐபிஎல் தலைவர் லலித்மோடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சென்னை போலீசில் கடந்த 2012ல் கூறப்பட்ட புகார்  அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் லலித்மோடி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் பதுங்கியுள்ள லலித் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த 2015ம் ஆண்டில் முதல் முறையாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுக்கு கோரிக்கை விடுத்தது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரவான ஆவணங்களும்  இன்டர்போலுக்கு சிபிஐ மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் போதுமான ஆதாரம் இல்லை என கூறி ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப தாமதித்து வந்தது. 

இந்நிலையில் லலித்மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என இன்டர்போல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக லலித் மோடி தனது டிவிட்டர் பதிவில், `‘எனக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப கோரிய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் கோரிக்கையை இன்டர்போல் நிராகரித்து விட்டது’’ என பதிவிட்டுள்ளார். ேமலும் ஐபிஎல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேட்டையைும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  

        *🗞கல்விச் செய்திகள்📰*

                  

✍🏼மார்ச் 31- வரை நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

✍🏼பள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

✍🏼தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

✍🏼பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க ஆவன செய்யுமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் திரு. ஆர்.லால்வேனா இ.அ.ப அவர்கள் பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார்.

✍🏼தமிழகத்தில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்த ஆண்டு, மே, 7ல் நடக்க உள்ள, நீட் தேர்வில் பங்கேற்க, நாடு முழுவதும், 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

✍🏼DGE - தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளியின் பெயர் அவசியம் தேவைப்படுவதால், தேர்வர்களிடமிருந்து விவரங்கள் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தக் கோரியது சார்பாக சில தலைமையாசிரியர்களின் சந்தேகங்களுக்கு தெளிவுரை வழங்கி இயக்குனர் உத்தரவு.

✍🏼பிளஸ் 2 கணிதம், விலங்கியல் ‘கட் ஆப்’ மதிப்பெண் குறையும்: முதுகலை ஆசிரியர்கள் கருத்து

✍🏼ANNAMALAI UNIVERSITY -DDE - Examination Results - December 2016-Results Published on 24-03-2017

✍🏼ஆசிரியர் தகுதி தேர்வுக்கு குழப்பம் இல்லை என்றும் தேர்வுக்கு தயாராக போதிய அவகாசரம் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

        

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

     *_தமிழ் இணைய செய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

*_✴🇮🇳✴வேலூர் சிஎம்சி மருத்துவமனை வளாக வங்கியின் லாக்கரை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை_*

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் உள்ள வங்கியின் லாக்கரை உடைத்து பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். லாக்கரில் இருந்த ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

*_✴🇮🇳✴டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் பிரபல ரவுடியுமான பாலாஜி கைது_*

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் பிரபல ரவுடியுமான பாலாஜி கைது செய்யப்பட்டார். ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்கும் படி பொதுமக்களை மிடிரட்டியதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாலாஜி மீது 53 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

*_✴🇮🇳✴திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 7 முதல் விஐபி தரிசனம் ரத்து_*

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 7 முதல் 10 வாரங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடைகால விடுமுறை யொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த  நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

*_✴🇮🇳✴கோவில்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு: வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்_*

கோவில்பட்டி: விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோவில்பட்டியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு இன்று முதல் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.   

*_✴🇮🇳✴ராமநாதபுரம் கடலாடியில் 2-வது நாளாக ரேக்ளா பந்தயம்_*

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கடலாடியில் 2-வது நாளாக ரேக்ளா பந்தயம் நடைபெறுகிறது. 2 பிரிவுகளாக நடக்கும் ரேக்ளா பந்தயத்தில் 20-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்கின்றன. 

*_✴🇮🇳✴திண்டுக்கல் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 17 பேர் காயம்_*

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கொவசப்பட்டி பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்த பயணிகளுக்கு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*_✴🇮🇳✴மத்திய பிரதேசத்தில் தீ விபத்து: 20 கடைகள் எரிந்து சாம்பல்_*

உஜ்ஜையினி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினி என்ற இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 கடைகள் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவ இடத்திற்கு 10 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

      🌴 *ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் பிரபல ரவுடியுமான பாலாஜி கைது.*

_சென்னை முத்தியால்பேட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் பிரபல ரவுடியுமான பாலாஜி கைது செய்யப்பட்டார். ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரனுக்கு வாக்களிக்கும் படி பொதுமக்களை மிடிரட்டியதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாலாஜி மீது 53 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது._

🔴🔴  *இலங்கை தமிழர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை

*சென்னை அண்ணா  நூலகத்தில் குழந்தைகளுக்கான  கோடை கால முகாம்  ஏப்ரல் 1 முதல் மே 31 வரை இலவசமாக  நடத்தப்படவுள்ளது-
    
       

     •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•

  *_தமிழ் இணைய செய்திகள்_*

      •┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴🇮🇳✴கோவில்பட்டியில் 20 சவரன் நகை கொள்ளை_*

கோவில்பட்டி: கோவில்பட்டி சாலைபுத்துர்விளக்கில் டாக்டர் பிரபாகரன் வீட்டில் 20 சவரன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*_✴🇮🇳✴மணப்பாறையில் கடத்தப்பட்ட சிறுவனை மீட்க 2 தனிப்படைகள் பெங்களூருவில் முகாம்_*

மணப்பாறை: மணப்பாறையில் கடத்தப்பட்ட சிறுவனை மீட்க 2 தனிப்படைகள் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். மார்ச் 26-ல் மணப்பாறையில் சிறுவன் சாய்தர்ஷன் கடத்தல் குறித்து 10 தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது மர்மநபர் அவரை கடத்தி சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

*_✴🇮🇳✴கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி கலவரம்பின்றி மூடல்_*

கும்பகோணம்: கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி கலவரம்பின்றி மூடப்பட்டது. கல்லூரியில் ஊழல் நடந்தாக மாணவர்களின் தொடர் போராட்டத்தால் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். 

*_✴🇮🇳✴என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்: இலங்கை ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கடிதம்_*

சென்னை: நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் என நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் உள்ள ரசிகர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் நேரம் வரும்போது சந்திப்போம் என கடிதத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையில் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

*_✴🇮🇳✴தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை மீனவர்கள் கடும் எதிர்ப்பு_*

இலங்கை: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படகுகளை விடுவித்தால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று வடமாகாண மீனவர்கள்  தெரிவித்துள்ளனர். மேலும் படகுகளை விடுவித்தால் எல்லை தாண்டும் நிலை தொடரும் என இலங்கை மீனவர்கள் கூறியுள்ளனர்.

*_✴🇮🇳✴வாரணாசியில் மருத்துவரின் காரை மாணவர்கள் அடித்து நொறுக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவு_*

வாரணாசி: வாரணாசியில் சர் சுந்தர்லால் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருக்கும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் மருத்துவரின் வீட்டில் இருந்த் காரை அடித்து நொறுக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

*_✴🇮🇳✴ஜம்மு-காஷ்மீரில் உயர் போலீஸ் அதிகாரி வீட்டின் வெளியே தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு_*

குல்காம்: ஜம்மு-காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் குட்வாணி என்ற இடத்தில் தீவிரவாதிகள் உயர் போலீஸ் அதிகாரி வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர். 

✴🇮🇳✴
*_பொதுமக்கள் சாலை மறியலால் தேனி - திண்டுக்கல் தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு_*

பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெருமாள்புரம் பகுதியில் கடந்த 3 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் சாலை மறியலால் தேனி - திண்டுக்கல் தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொது மக்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

*_✴🇮🇳✴ரூ.22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் வேலூர் எஸ்.பி பகலவன் நேரில் விசாரணை_*

வேலூர்: வேலூரில் ரூ.22 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் எஸ்பி பகலவன் நேரில் விசாரணை மேற்கொண்டார். சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் கொள்ளையடிக்கப்பட்ட வங்கிக் கிளையில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

*_✴🇮🇳✴பஞ்சாபில் பாகிஸ்தான் நாணயங்களுடன் பறந்து வந்த பலூன்களால் பரபரப்பு_*

கபூர்தலா: பஞ்சாப் மாநிலம் கபூர்தலா என்ற இடத்தில் பாகிஸ்தான் நாணயங்கள் மற்றும் காகித துண்டுகளுடன் பலூன்கள் பறந்து வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பலூன்கள் மற்றும் காகித துண்டுகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴🇮🇳✴மணப்பாறை அருகே குடிநீர் கோரி அரசு பேருந்து சிறைபிடிப்பு_*

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே இடையப்பட்டியில் குடிநீர் கோரி அரசு பேருந்து சிறைபிடிக்கப்பட்டது. 3 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யபப்டுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

*_✴🇮🇳✴புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது: முதல்வர் நாரணாயசாமி பட்ஜெட்டை தாக்கல்_*

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதித்துறையை கூடுதலாக கவனிக்கும் முதல்வர் நாரணாயசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

     🌴✴🇮🇳🙏🙏🇮🇳✴🌴

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here