- STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*விவசாயிகள் பிரச்னைக்கு மாநில அரசுகள்தான் தீர்வு காண வேண்டும்: பி.முரளிதர் ராவ்

திருவொற்றியூர்: விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு மாநில அரசுகள்தான் தீர்வு காண வேண்டும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்தார்.
*ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி பாஜக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் முரளிதர ராவ் கூறியது:*

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது தில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், வறட்சி, போதிய விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. *இப்பிரச்னைகளைத் தீர்க்க வேண்டியது மாநில அரசுகளின் கைகளில்தான் உள்ளது*. இருப்பினும் மத்திய அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் விவசாயிகளுக்குத் தேவையான பல்வேறு உதவிகளை மாநில அரசுகள் மூலம் செய்து வருகிறது.
மீனவர்கள் பிரச்னைக்கு காங்கிரஸ்-திமுக ஆகிய கட்சிகள்தான் காரணம். ஆட்சியிலிருந்தபோது எடுத்த முடிவுகளால்தான் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நெடுவாசல் போன்ற இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் முடிவு குறித்து பொதுமக்களுக்குப் போதிய அளவில் விளக்கம் அளிக்கப்படும். ஆனால், அந்தப் பகுதி மக்கள் மற்றும் தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்தை மத்திய அரசு தன்னிச்சையாக நிறைவேற்றாது. இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் போதிய கால அவகாசம் உள்ளது. எனவே பொதுமக்கள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமே இல்லை என்றார் முரளிதர ராவ

🍎போலி நியமன ஆணை:

🍏 4 ஆசிரியர்கள் சிக்கினர் !!

🌻திருவண்ணாமலை மாவட்டத்தில், போலி நியமன ஆணை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌻 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, மகேஸ்வரி, 36, என்ற ஆசிரியை பணி 
இடமாற்றத்திற்கான நியமன ஆணையுடன் நேற்று முன்தினம் சென்றார்.

🌻அவர், அளித்த நியமன ஆணையை சரிபார்த்த தலைமை ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்தது.

🌻இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலகத்திடம் கேட்டார். அப்போது, மகேஸ்வரி கொடுத்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது.

🌻இது குறித்து, வந்தவாசி தெற்கு போலீசில் தலைமை ஆசிரியை புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், அவர் அளித்த, இடமாறுதலுக்கான ஆணையில் இருந்த, அனைத்து தகவல்களும் போலியானவை என்பது தெரிய வந்தது.

🌻இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்டத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் சான்றிதழை சரிபார்க்குமாறு, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று உத்தரவிட்டார்.

🌻அதனடிப்படையில் விசாரணை நடத்தியதில், மேலும், மூன்று ஆசிரியர்கள் போலி ஆணை கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

🌻இவர்கள், மூன்று பேரும் தற்போது தலைமறைவாகி விட்டனர்.இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் கூறியதாவது:

🌻-மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் பணி ஆணை உத்தரவு, கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரியும் மூன்று பேர், பணியில் சேர முயன்ற ஒருவர் என, நான்கு பேர் போலி சான்று வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

🌻அவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பணியில் சேர்ந்த நாள் முதல், தற்போது வரை அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்ப பெறவும், குற்றப்பிரிவு போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here