5ம் வகுப்பு மாணவன் தன் பெயரைக் கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது :நீதிபதி கிருபாகரன் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

5ம் வகுப்பு மாணவன் தன் பெயரைக் கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி உள்ளது :நீதிபதி கிருபாகரன்

5-ஆம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத தெரியாத அளவிற்கு கல்வி இருப்பது வேதனையகவுள்ளது என்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார். ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எத்தனை பி.எட், எம்.எட் பயிற்சிக் கல்லூரிகள் இருக்கின்றன என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். பயிற்சி பெற்ற மாணவர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
திருச்சி எஸ்விஐ கல்லூரி தொடுத்த வழக்கில் நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். வரும் 27 ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஆசிரியர் பயற்சி வகுப்பில் அதிக மாணவர்களைச் சேர்க்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெட்டர் பாட் கல்வி நிறுவனங்கள் பெருக்கத்தால் தரமான ஆசிரியர்கள் உருவாவதில்லை என்றும் கல்வித் தரம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நீதிபதி கிருபாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here