இன்றைய அரசியல் தர்பார்
தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🍎மக்களின் எதிர்ப்பால் தெறித்து ஓடிய அமைச்சர் விஜயபாஸ்கர்…!
🍏ஆட்சியாளர்கள் மீது உச்சகட்ட கொந்தளிப்பில் ஆர்.கே.நகர் மக்கள்..!
🌻ஒரு தனியார் தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது மக்கள் கொந்தளித்ததால் அமைச்சர் அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடியதோடு நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
🌻 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில், உங்கள் (ஆர்.கே.நகர் மக்கள்) வாக்கு யாருக்கு? என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடத்தியது.
🌻 சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி(ஓபிஎஸ் அணி) சார்பில் கே.பாண்டியராஜன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்
🌻மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச ஆரம்பித்ததும் பார்வையாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் அரங்கை விட்டு வெளியேறினர்.
🌻மீதமிருந்தவர்களும் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அமைச்சர் தனது பேச்சின்போது சசிகலா, தினகரன் பெயர்களை உச்சரித்ததும் உச்சகட்ட கொந்தளிப்பை அடைந்த மக்கள், நாற்காலிகளின் மீது ஏறியும் அமைச்சரின் பேச்சை நிறுத்துமாறும் முழங்கினர்.
🌻 ஆனால், மக்கள் மன்றம் என்ற பெயரில் நடக்கும் நிகழ்ச்சியில் மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு சற்றும் செவி சாய்க்காமல் அமைச்சர், மக்கள் விரும்பாத ஒன்றை தொடர்ந்து பேசினார்.
🌻இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரது பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடுமையாக கூச்சலிட்டனர்.
🌻நாம் பேசுவதை யாருமே கேட்கவில்லையே என்ற எண்ணம்கூட இல்லாமல் அமைச்சர் தொடர்ந்து பேசினார். மக்களின் எதிர்ப்பை அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் பொறுமை காக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.
🌻 ஆனால், அவரது பேச்சை சற்றும் பொருட்படுத்தாத மக்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புக் குரலை உச்சகட்ட சத்தத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
🌻 மக்களின் எதிர்ப்பை அடுத்து அரங்கை விட்டு வெளியேறினால் போதும் என்ற எண்ணத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெறித்து ஓடினார். இதையடுத்து மக்கள் மன்றம் நிகழ்ச்சியும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
🌻 தற்போதைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் எந்த அளவிற்கு கோபமாக இருக்கிறார்கள் என்பது இந்த நிகழ்விலிருந்து தெரிகிறது.
🌻 ஆட்சியாளர்கள் மீதான மக்களின் உச்சகட்ட அடக்க முடியாத கோபத்தின் வெளிப்பாடே இந்த கொந்தளிப்பான கோஷங்கள். இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த எதிர்ப்பு.
🌻 ஆர்.கே.நகர் மக்கள் தினகரன் சார்ந்துள்ள அணியைச் சேர்ந்தவருக்கு அதுவும் ஒரு அமைச்சருக்கு இந்த அளவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
🌻 மேலும் சசிகலா மற்றும் தினகரன் பெயரை உச்சரிக்கும்போது கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். வேட்பாளர் பெயரைக்கூட தொகுதிக்குள் அவர்கள் சார்ந்த அணியினரை மக்கள் பயன்படுத்த விடவில்லை என்கிறபோது தினகரன் எப்படி அந்த தொகுதியில் வெற்றி பெறுவார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது..தமிழ் இணைய செய்திகள்
🍎சுயேட்சைகள் சின்னம் வரிசையில் இடம் பெறுவதால் தொப்பி, மின்கம்பத்தை தேடுவதில் சிக்கல்
🌻ஆர்.கே.நகர் தொகுதியில் ‘‘இரட்டை இலை’’ சின்னம் இல்லாததை அ.தி.மு.க.வின் இரு அணியினருமே பெரும் குறையாக கருதுகிறார்கள்.
🌻முன்பெல்லாம் அ.தி.மு.க. வினர் ஓட்டு கேட்க செல்லும்போது இரண்டு விரலை ஆங்கில ‘வி’ எழுத்து வடிவில் விரித்து காட்டுவார்கள். அடுத்த. அது இரட்டை இலை என்று வாக்காளர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
🌻இது அ.தி.மு.க.வினருக்கு மட்டுமின்றி வாக்காளர்களுக்கும் மிக, மிக எளிதானதாக இருந்தது.
🌻ஆனால் இன்று ஆர்.கே.நகரில் அத்தகைய சூழ்நிலை இல்லை. அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்தவர்கள் தொப்பியோடு அலைகிறார்கள். அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியினர் இரட்டை விளக்கு மின்கம்பத்துடன் சுற்றி வருகிறார்கள்.
🌻தொப்பியையும், மின் கம்பத்தையும் மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அ.தி.மு.வின் இரு அணியினருக்கும் ஏற்பட்டுள்ளது. தொடர் விளம்பரம் மற்றும் இடைவிடாத பிரசாரம் மூலம் தொப்பி, மின்கம்பம் சின்னத்தை மக்களுக்கு தெரியும் வகையில் பிரபலப்படுத்தி விட முடியும் என்று இரு அணியினரும் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
🌻இந்த முயற்சிகளில் அ.தி.மு.க.வின் இரு அணிகளுக்கும் நிச்சயம் ஓரளவு வெற்றி கிடைத்து விடும். இதன் காரணமாக மக்களுக்கும் இந்த தடவை இரட்டை இலைக்கு பதில் ஒன்று இரட்டை விளக்கு மின் கம்பத்துக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டும் என்ற தெளிவான மனநிலைக்கு வந்து விடுவார்கள்.
🌻ஆனால் 12-ந்தேதி ஓட்டு போட போகும் போது அவர்கள் இரட்டை விளக்கு மின்கம்பம் அல்லது தொப்பி சின்னத்தை தேடி திணற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், ஆர்.கே.நகர் தொகுதியில் நிறைய பேர் போட்டியிடுவதுதான்.
🌻60-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 4 மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட கூடும். ஒவ்வொரு எந்திரத்திலும் தலா 16 வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள்தான் இடம் பெற்றிருக்கும்.
🌻 இப்படி 4 எந்திரங்களிலும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் வரிசையாக இருக்கும்.
🌻இதில் எந்த எந்திரத்தில் எந்த இடத்தில் தொப்பி அல்லது மின்கம்பம் சின்னம் உள்ளது என்பதை அ.தி.மு.க. வினர் தேட வேண்டிய திருக்கும். இந்த சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களின் சின்னங்களோடு சின்னமாக கலந்து இருக்கும் என்பதால் சாதாரண மக்களை அது திணற வைத்து விடும் என்று கூறப்படுகிறது.
🌻தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் முதலில் இடம் பெறும். இதனால் 2015-ம் மற்றும் 2016-ம் ஆண்டுகளில் ஆர்.கே.நகரில் தேர்தல்கள் நடந்தபோது அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் எந்திரத்தில் முதல் சின்னமாக இருந்தது.
🌻 வாக்காள ர்களும் ஓட்டுச்சாவடிக்குள் நுழைந் ததுமே பட்டனை அமுக்கி விட்டு வந்து விட்டனர். 12-ந்தேதி அப்படி செய்ய முடியாது.
🌻தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது சின்னத்தை வரிசைப்படுத்துவதற்காக 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 38-வது பிரிவில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள் மூன்று விதமாக வரிசைப்படுத்தப் படுகின்றன.
🌻அதன்படி தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் முதலில் இடம் பெறுவார்கள். அந்த வகையில் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தேசிய கட்சிகளின் அடிப்படையில் முதலில் வருவார்கள். இவர்களைத் தொடர்ந்து மாநில கட்சி என்ற அந்தஸ்தில் உள்ள தி.மு.க. வேட்பாளரின் பெயர் அடுத்ததாக இடம் பெறும். எனவே உதயசூரி யன், தாமரை சின்னங்கள் முதல் மின்னணு எந்திரத்தில் முதலாவதாக உயரத்தில் இருக்கும்.. தமிழ் இணைய செய்திகள்
🌻இரண்டாவதாக தேர்தல் கமிஷனில் பதிவு செய்து இருந்தும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சி களின் வேட்பாளர் களும், அவர்களது சின்னங்களும் இடம் பெறும். தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சிகள் இந்த வரிசைக்கு வருவார்கள்.
🌻மூன்றாவதாக சுயேட்சை வேட்பாளர்களின் பெயரும் அவர்களுக்குரிய சின்னங்களும் இடம் பெறும். சுயேட்சைகள் அதிகம் உள்ளதால் அவர்களது பெயர்கள் அகர வரிசைப்படி தொகுக்கப்படும்.
🌻அப்போது தினகரன், மதுசூதனன், ஜெ.தீபா ஆகிய மூவரின் பெயரும் சுயேட்சை வேட்பாளர்களில் எத்தனைவது இடத்தில் இடம் பெறும் என்பது தெரியவரும். 4 எந்திரங்களில் அவர்களது பெயர், சின்னம் எந்த எந்திரத்தில், எந்த இடத்தில் இடம் பெறும் என்பதும் தெரிய வரும்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌻வாக்காளர்கள் தொப்பியையும், மின்கம்பத்தையும் தேடி திணறக் கூடாது என்பதற்காக, அந்த சின்னம் இருக்கும் பகுதியை வரைபடம் மூலம் மக்களுக்கு விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த அ.தி.மு.க.வின் இரு அணியினரும் திட்ட மிட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தைப் பொருத்தே வாக்காளர் கள் தொப்பி அல்லது மின் கம்பத்தை தேடி அலையாமல் எளிதில் வாக்களிக்க முடியும்.
🍎காலத்தின் வாசனை:
🍏 வளையல்காரர் வராத தெரு!
🌻ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகச் செயல்பாடுகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி விவாதிக்கிறார்கள்.
🌻 ஆனால், 50 வருடங்களுக்கு முன்னால் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகம் தமிழகக் கிராமங்களில் வழக்கில் இருந்தது.
🌻அப்போதெல்லாம் கிராமத்துத் தெருக்களில் தலைச் சுமையிலும், தள்ளுவண்டியிலும் ஈடுபட்டவர்கள், காசு பணத்தைக் கண்ணால் பார்த்ததில்லை. எல்லாம் தானியங்களாகவே பரிமாறிக்கொள்ளப்பட்டன.
🍊வியாபாரி அல்ல கலைஞர்
🌻மோர் விற்கிற பெண்மணி, வீட்டுக்கு வீடு மோர் அளந்து ஊற்றிவிட்டு ஒரே ஒருபிடி அரிசி வாங்கிச் செல்வார்.
🌻 இதைப் போலவே செவ்வாய்க் கிழமைச் செட்டியார் (துணிமணிகள் கொண்டுவந்து விற்பவர்) வாணியச் செட்டியார் (எண்ணெய் விற்பவர்) வளையல் செட்டியார் (வளையல் வியாபாரி) என்று பலரும் பொருட்களைத் தந்துவிட்டு அரிசியாகவும், கம்பு, கேழ்வரகு, தானியங்களாகவும், காய்கறிகளாகவும் வாங்கிச் செல்வது உண்டு.
🌻இவ்வாறு விற்பவர்களைச் செட்டியார் என்ற சொல்லால் விளிப்பார்கள். அது சாதியைக் குறிப்பதில்லை.
🌻வளையல் செட்டியார் வெறும் வியாபாரி மட்டும் அல்லர். அழகியலும் ஆன்மிகமும் ஊடாடும் கலைஞர் கள் அவர்கள். அவர்களின் தோற்றமே அலாதியானது.
🌻தொளதொள ஜிப்பா, தொங்கு மீசை, முண்டாசு, வாய்நிறைய வெற்றிலை, உடைந்த வளையலாக வளைந்த கால், தாங்கித் தாங்கி நடந்து வருவார். நெற்றியில் நாமம், ஒரு தோளில் வளையல்களின் மலாரம், (கயிற்றில் கோத்த வளையல்கள்) மறு தோளில் சதுர வடிவப் பெட்டியை வெள்ளைத் துணியில் வைத்துத் தனியாகத் தொங்கவிட்டிருப்பார்.
🍊வளையல் வாசனை!
🌻வளையல் பெட்டியைத் திறப்பார். புத்தம் புது வளையல்களிலிருந்து ஒருவாசம் வீசும். என்ன பொண்ணே செளக்கியமா என்பார் சிரித்தபடி. வாயிலிருந்து வாசனைப் புகையிலை கமகமக்கும்.
🌻காகித அட்டைக் குழாய்களில் கலர் கலராக மின்னும் கண்ணாடி வளையல்கள். மோகனமான மோஸ்தர்களில் டால் அடிக்கும். வானவில்லால் செய்தது போன்ற வர்ண விசித்திரங்கள். கையில் அப்படியே ஒரு கொத்து எடுத்துக் காட்டுவதே ஒரு அழகுதான்!
🍊கையைத் தொடும் உரிமை
🌻பெண்களைத் தொட்டு வளையல் அணிவிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. ஆணாதிக்கமும் பெண்கள் மீதான சந்தேகமும் புரையோடிப்போன சமூகத்தில் இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது ஒரு புதிர்தான்.
🌻பெண்களின் கையைப் பிடித்து, விரல்களை அப்படியே ஒன்றுசேர்த்து வாழைப்பூ மொக்காகப் பிடித்துக்கொள்வார். பிறகு, கணுக் கையை நீவி வலிக்காமல் வளையலைப் போட்டுவிடுவார். என்ன லாவகம்.. என்ன நளினம்!
🌻பிடி சற்று இறுகி, வளையல் போடும்போது வலித்தால் நிறுத்திவிட்டு, ‘வலிக்காமல் போட்டுவிடுகிறேன் அம்மா’ என்று தெலுங்கில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வளையலைப் போட்டுவிடுவார்.
🍊உடைந்த வளையலுக்குக் காசில்லை
🌻வளையல்கள் அணிவிக்கும்போது உடைந்து விட்டால், அந்த வளையல்களுக்குக் காசு வாங்க மாட்டார். அறிமுகம் இல்லாத பெண்கள் ரொம்பவே கூச்சப்படுவார்கள்.- தமிழ் இணைய செய்திகள்..
🌻அப்போது சொல்வார்.. எதற்காகப் பயப்படுகிறாய் அம்மா? சிவபெருமான் திருவிளையாடல் புராணத்தில் வளையல்காரராக வந்து, பெண்களுக்கு வளையல் போட்டுவிடுவார் தெரியுமா? என்னை யார்னு நெனச்சே? சாட்சாத் அந்த சிவனேதான்! என்னை சிவனா நெனச்சுக்கோம்மா என்பார். அங்கிருக்கும் பெண்களின் கண்கள் தளும்பிவிடும்.
ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு கை நீட்டுவார்கள்.
🍊வளையல் சத்தம்
🌻வளையல் சத்தத்துக்குக் கிறங்காத மாப்பிள்ளைகள் உண்டா? வளையல் சத்தம் என்றதுமே வண்ணதாசன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🍊“ஒண்டுக் குடித்தனக்கார
🍊கூட்டுக் குடும்பஸ்தன்
🍊கண்டுபிடித்தது
🍊ரப்பர் வளையல்.”
🌻வளைகாப்பின்போது முதலில் அரக்கு வளையல்தான் போடுவார்கள். அப்புறம் வேப்பமர ஈர்க்குகளில் வளையல்செய்து அணிவிப்பார்கள். பிறகுதான் கண்ணாடி வளையல்கள், பிறகு வெள்ளி, பொன் வளையல்கள் அணிவிப்பார்கள். வயிற்றிலிருக்கும் குழந்தை, தாயின் கையில் கலகலக்கும் வளையல் சத்தம் கேட்டுச் சிரிக்குமாம்!
🌻பிறந்த குழந்தையின் கைக்கு திருஷ்டிப் பரிகாரமாக கருப்பு - வெள்ளை நிற வளையல்கள் போடுவது உண்டு. பால்பாசி வளையல், வசம்புத் துண்டுகளால் ஆன வளையல் என்று பிஞ்சுக் குழந்தையின் கைகளை அலங்கரிக்கும் வளையல் ஒவ்வொன்றுக்கும் ஒரு அபூர்வ வாசனை.. அழகு!
🌻நாற்று நடும் பெண்கள் வளையல்களுடன் வேலை செய்யும்போது, பூச்சிப் பொட்டுகள் ஓடிப்போகும் என்பதால் கையிலிருந்து கழற்ற மாட்டார்கள். நெல் குத்தும்போது கழற்றிவைத்து விடுவார்கள்! மெட்டி ஒலியும், வளையல்களின் கிணுகிணுப்பும், கொலுசுச் சத்தமும் கேட்ட வீடுகளில் வசிக்க நேர்ந்தவர்களுக்கு வாழ்க்கை சுகானுபவமாக இருந்தது! இப்போதெல்லாம் தெருக்களில் வளையல்காரர்கள் வருவதில்லை. அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்களும் இல்லை.
🍊வாழ்க்கை தொலைத்துவிட்டது வளையல் வம்சத்தை!
🍎கோயில் திருவிழாவில் பலியாகும் பக்தர்கள்:
🍏 கர்நாடகாவில் தொடரும் மூடப்பழக்க வழக்கம்
🌻கர்நாடகாவில் உள்ள இந்து கோயில் திருவிழாக்களில் நடைபெறும் சடங்கின்போது மரக்கம்பத்தில் சுழற்றப்படும் ஆண்.
🌻கர்நாடகாவில் உள்ள இந்து கோயில் திருவிழாக்களில் நடத்தப் படும் சடங்கினால் அப்பாவி பக்தர்கள் பலியாகி வருகின்றனர்.
🌻கர்நாடக மாநிலம் மண்டியா, ஹாசன், கார்வார், தாவணகெரே, பீதர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளன. இங்குள்ள இந்து கோயில்களில் தேர்த் திருவிழாவின்போது ‘சிதி' என்ற சடங்கு நடத்தப்படுகிறது.
🌻 ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும் இந்த சடங்கில் தலித் மக்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
🌻இந்த சடங்கின்போது காலை 4 மணிக்கு ஆண்கள், பெண்களின் வாயில் இரும்பு கொக்கி (அலகு குத்துவது போல) குத்தப்படும்.
🌻 ஆண்டுக்கு 10 முதல் 20 ஆண்களின் முதுகில் 4 இரும்பு கொக்கிகளால் குத்தி (வான் அலகு அல்லது கருட வாகன அலகு போல) 20 முதல் 30 அடி உயரத்தில் தொங்கும் மரக் கம்பத்தில் மாட்டுவார்கள்.தமிழ் இணைய செய்திகள்
🌻 பிறகு மரத்தின் இன்னொரு பாகத்தை ராட்டினம் போல சுழற்றுவார்கள். ஆண்களும் பெண்களும் ரத்தம் வடியும் நிலையில் 30 முறை கோயிலை சுற்றி வர வேண்டும்.
🌻மிகவும் ஆபத்தான இந்த சடங்கின்போது பல ஆண்கள் கீழே விழுந்து உயிர் பலியாகி உள்ளனர். பலர் கை, கால் முறிந்து அவதிப்பட்டு வருகிறார்கள்.
🌻ஹாசன் மாவட்டம் ஹொளெநர் சிப்பூர் அருகேயுள்ள ஹரிஹரபூரில் உடுசலம்மா (துர்கா பரமேஷ்வரி) கோயில் உள்ளது.
🌻 இங்கு கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.
🌻வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருவிழா தொடங்கியபோது கோயில் பூசாரி 70-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அலகு குத்திவிட்டார். இதையடுத்து ஆண்களும், பெண்களும் உடுசலம்மா கோயிலையும் ஊரையும் சுற்றி வலம் வந்தனர்.
🌻பிற்பகல் 2 மணியளவில் இந்த சடங்கு தொடங்கியது. இரு நாட்களும் தலா 12 ஆண்கள் வீதம் முதுகில் இரும்பு கொக்கிகள் மாட்டப்பட்டு மரக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள்.
🌻அந்த கம்பத்தை ராட்டினம் போல சுழற் றியபோது, கீழே இருந்த பெண்கள் குலவையிட்டனர். தலா 5 முதல் 10 நிமிடங்கள் சுழற்றிய பிறகு, அவர்கள் கீழே இறக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப் பட்டனர்.
🌻இந்த ஆண்டு பாதுகாப் புக்காக இந்த சடங்கில் ஈடுபடுத் தப்பட்ட ஆண்களின் கால்கள் மர கம்பத்தோடு இணைத்து கட்டப்பட்டது.
🍊தலித் அமைப்பினர் போராட்டம்
🌻இந்நிலையில் தலித் விடுதலை அமைப்பினர் இந்த சடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரபூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் பங்கேற்றனர். அப்போது இந்த சடங்கிற்கு தடை விதிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, ்அந்த அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பாளர்கள் கட்டிய*
*டெபாசிட் தொகையை வேட்பாளர்களுக்கு திரும்ப கொடுக்க*
*தேர்தல் ஆணையம் உத்தரவு.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக