*⚫⚪🔴 அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு இன்று முடிவு அதிமுகவினர் இடையே பரபரப்பு.*
_இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறுகிறது._
_ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து, அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்டுள்ளது. பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி. மு.க. செயல்பட்டு வருகிறது. தங்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளன._
_ஓ.பி.எஸ் தரப்பின் முறையீட்டை தொடர்ந்து, தங்கள் தரப்பு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கூடிய பிரமாண பத்திரங்களை 20-ஆம் தேதிக்குள் அளிக்குமாறு சசிகலாவுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.சசிகலா தரப்பில், ஆயிரத்து 912 பொதுக்குழு உறுப்பினர்கள், 122 எம்எல்ஏ.க்கள், 37 எம்.பி.க்கள் மற்றும் பல்வேறு நிலையிலான அதிமுக நிர்வாகிகள் கையெழுத்திட்ட ஆதரவை உறுதி செய்யும் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன._
_ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 6,000 பேர் கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்களை அவர்கள் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முன்னதாகவே தாக்கல் செய்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான 11 எம்.பி.க்கள், 12 எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என பல தரப்பினரும் அதில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது._
_இவற்றின் அடிப்படையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது. இதில் சசிகலா அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைக்கிறார்கள்.
இந்த விசாரணைக்கு பின்னர் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.
ஒருவேளை இரட்டை இலை முடக்கப்பட்டால் டி.டி.வி. தினகரனுக்கும், மதுசூதனனுக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்._ http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக