தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று
எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகின்றன.
இந்தத் தேர்வை 12 ஆயிரத்து 187 பள்ளிகளில் பயிலும், 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் எழுதுகின்றனர்.
இவர்களில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர் மாணவிகள்.
இவர்கள் தவிர, தனித் தேர்வர்களாக 39 ஆயிரத்து 741 பேர் பத்தாம் வகுப்பு தேர்வுகளை எழுதுகின்றனர்.
இவர்களில் 10 ஆயிரத்து 972 பேர் மாணவிகள் ஆவர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளுக்காக தமிழகம், புதுச்சேரியில் மூவாயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக