விருதுநகர் மாவட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அடிக்கல்நாட்டு விழா சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

விருதுநகர் மாவட்டத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அடிக்கல்நாட்டு விழா சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு

புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
சாத்தூரில் திறப்பு விழா
சிவகாசி, ராஜபாளையத்தில் பூமிபூஜை விழா
அமைச்சர்கள் சண்முகம், கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்பு
சாத்தூரில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழாவும் சிவகாசி, ராஜபாளையத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் பூமிபூஜை விழாவும் நாளை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொள்கின்றனர்.
சிவகாசியில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்கவும், நீதிபதிகளுக்கு 6 குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கவும், நீதிமன்ற வளாகத்திற்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் இணைத்து பாதுகாப்பு  சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு ரூ.16கோடியே 16லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் சிவகாசி இஎஸ்ஐ அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட உள்ளது. இதே போன்று ராஜபாளையத்தில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், நீதிபதிகளுக்கு 3 குடியிருப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கவும், நீதிமன்ற வளாகத்திற்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் இணைத்து பாதுகாப்பு  சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுக்கவும் தமிழக அரசு ரூ.9கோடியே 54லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.. இந்த புதிய  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட உள்ளது. சிவகாசி, ராஜபாளையத்தில் புதிய  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட தமிழக அரசு மொத்தம் ரூ.25கோடியே 70லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான கட்டிட பணிகள் நாளை சணிக்கிழமை பூமிபூஜையுடன் துவங்குகின்றது. மேலும் சாத்தூரில் புதிய நீதிமன்ற வளாகம் சுமார் 3கோடியே 82லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவும் நாளை நடைபெறுகின்றது. நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் நீதிபதிகள், கலந்து கொண்டு துவக்கி வைக்கின்றனர். நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டையில்  புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
==================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here