பணப்பரிமாற்றத்திற்கு SBI வங்கி கட்டணம் விதிக்கிறது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

பணப்பரிமாற்றத்திற்கு SBI வங்கி கட்டணம் விதிக்கிறது.

புதுதில்லி, மார்ச் 3 –
வாடிக்கையாளர்கள் அவர்களின் சொந்தப் பணத்தை வங்கிகளில் போடுவதற்கும், எடுப்பதற்கும் ரூ. 5 முதல் ரூ. 150 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என தனியார்
வங்கிகள் திடீரென அறிவித்தன. இந்த புதிய கட்டண விகிதம், தனியார் வங்கிகளில் மார்ச்
1 முதல் உடனடியாக அமலுக்கும் வந்தது.

எனினும் அரசுத்துறை வங்கிகள் எதுவும் ரொக்கப் பரிமாற்றத்திற்கு கட்டணம் எதை
யும் விதிக்காமல் இருந்தன. ஆனால், அரசுத்துறை வங்கிகளிலேயே முதல் வங்கியான, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் ரொக்கப் பரிமாற்றத்திற்கு ரூ. 50 கட்டணம் அறிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி தனது வாடிக்கை
யாளர்களுக்கு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது எச்டிஎப்சி வங்கியில் ஒரு மாதத்
திற்கு 4 முறை மட்டுமே பணப் பரிவர்த்தனைகள் இலவசம்; அதில், பணத்தை வங்கிக் கணக்
கில் டெபாசிட் செய்வது மற்றும் எடுப்பது என இரண்டும் அடங்கும் என்றும் அதற்கு
மேற்பட்ட பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் ரூ. 5 முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்
தனை செய்யும் தொகையைப் பொருத்துக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த
அறிவிப்பில் கூறப்பட்டது.

பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அதிகபட்ச ரொக்கப் பரிவர்த்தனை வரம்பை 3 லட்சமாக அறிவித்து இருக்கும் நிலையில், எச்டிஎப்சி வங்கியோ மாதத்திற்கு 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று அறிவித்தது. அதிலும் பிற கிளைகளின்வாடிக்கையா ளர்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் மட்டுமே
இலவசமாக வங்கியில் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்றாக்கியது.

ஐசிஐசிஐ வங்கியும், எசிடிஎப்சி போன்றே, ஐந்தாவது பணப் பரிவர்த்தனை
யில் இருந்து ரூ. 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கும் முடிவில் உள்ளதாகக் கூறப்பட்டது.

தனியார் வங்கி சேவையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள ஆக்சிஸ் வங்கி 5 பரி
வர்த்தனைகள் இலவசம் என்றும், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகப் பரிவத்தனை செய்யும் போது 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த முயற்சியை வங்கிகள் எடுத்து வருவதாகவும், இன்னும் பல வங்கிகளில் செல்லா ரூபாய் நோட்டுகள் சிக்கல்களுக்குப் பிறகு, பணத் தட்டுப்பாடு குறையாத நிலையில் இந்தப் புதிய முயற்சியின் மூலம் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதைக் குறைத்துப் பணத் தட்டுப்பாடு சிக்கலைத் தவிர்க்க முடியும் என்றும் வங்கிகள் கருதுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்க எப்படி 5 முறை, 3 முறை எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோ அப்படியே வரும் காலங்களில் வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கால வரம்பும் குறைக்கப்படும் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.
செல்லா ரூபாய் நோட்டுப் பிரச்சனைகள் குறையக் குறைய அரசு ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டையும் குறைக்க முயல்கின்றது என்றும் அதற்கான ஒரு படியே இது என்றும்
தனியார் நிறுவன நிர்வாகியான சந்திர பிரகாஷ் திவாரி தெரிவித்தார்.

வங்கிகளில் ரொக்கப் பரிமாற்றத்திற் கான கட்டணத்தை மாற்றி அமைக்குமாறு, ரிசர்வ் வங்கி, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை தான்தான் கேட்டுக் கொண் டேன் என்று, ரிசர்வ் வங்கியின் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுத் தலைவர் அஜய் வியாஸ் தெரிவித்தார்.
எஸ்பிஐ வங்கியின் செய்தித் தொடர்பாளர் உதய் பகவத்தோ புதிய கட்டண விகிதம் தொடர்பாக தங்களுக்கு எந்த அறிக்கையும் வரவில்லை என்று கூறியிருந்தார்.
ஆனால், தற்போது எஸ்பிஐ வங்கியும் புதிய கட்டண விகிதங்களை அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளது.

எஸ்பிஐ-யின் இந்த புதிய கட்டண விகிதங்கள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதுடன், எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் வரம்பிற்கு அதிகமாக ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்திப் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

வங்கி கிளைகளில், 1,000 ரூபாய்க்கும் குறைவாக 2 முறையும், 1,000 ரூபாய் முதல்
25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும்போது 2 முறையும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 10 முறையும், 50,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய் வரை பணப் பரிவர்த்தனை செய்யும் போது 15 முறையும் மற்றும் 1,00,000 ரூபாய்க்கு அதிகமாகப் பணப் பரிமாற்றங்கள் செய்பவர்கள் இலவசமாகப் பணப் பரிவர்த்தனை செய்யலாம். வரம்பு மீறினால் 50 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இணையதள வங்கி சேவையைப் பொறுத்தவரை, 1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் பரிமாற்றம் செய்யலாம். இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஏடிஎம் மையங்களைப் பொறுத்தவரை, எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும், இதுவே அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமான முறை பணம் எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

என்இஎப்டி பரிவர்த்தனைக்கு ரூ. 2 முதல் 25 வரையும், வாடிக்கையாளர்கள் செலுத்த
வேண்டியதிருக்கும். ஆர்டிஜிஎஸ் முறையிலான பரிவர்த்தனைக்கு ரூ. 25 முதல் ரூ. 50 வரை கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்கும்.

தற்போது வங்கிக் கணக்குகளில் இருந்து வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டு உள்ளது. இந்த வரம்பு மார்ச் 13-ம் தேதிக்குப் பிறகு நீக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான், வங்கிகளில் பணப் பரிமாற்றத்திற்கு கட்டணங்களை விதித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here