🌻அடிப்படையான எந்த தகவலும் இல்லாமல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் செயல்படுவதால், பணி நியமன தகவல்கள் கிடைக்காமல், பட்டதாரிகளும், ஆசிரியர்களும், அவதிக்கு ஆளாகின்றனர்.
🌻தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ய, டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது.
🌻 பதினோரு அடுக்கு மாடி கட்டடத்தில், பயன்படுத்தப்படாத கிடங்கு போல, ஆள் அரவமற்ற நிலையில், இந்த அலுவலகம் செயல்படுகிறது.
🌻 இங்கு செல்லும் பட்டதாரிகள், எந்த தகவல்களை கேட்டாலும், 'இணையதளத்தை பாருங்கள்; பத்திரிகைகளை பாருங்கள்' எனக்கூறி அனுப்பி விடுகின்றனர்.
🌻 இணைய தளமோ, அடிப்படை தகவல்கள் ஏதுமின்றி, வெறும் அறிவிப்புகள் மட்டுமே, ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளன.
🌻டி.ஆர்.பி., வரலாறு, செயல்பாடு, அதிகாரிகள், உறுப்பினர்கள் விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் யாரை அணுக வேண்டும், அவர்களின் பெயர் மற்றும் முகவரி, 'டெட்' தேர்வை அறிமுகம் செய்த அரசாணை, 'டெட்' தேர்வின் முந்தைய அறிவிப்புகள், வெயிட்டேஜ் மதிப்பெண் பட்டியல் போன்ற விபரங்கள் இல்லை.
🌻பொது அலுவலருக்கான தொடர்பு எண், செய்தி தொடர்பாளர் யார், அவரது தொலைபேசி எண்ணும் இல்லை.
🌻 தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, ஒரு இணையதளத்தில், எந்தெந்த அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டுமோ, அவை அனைத்தும், இதில் இல்லை.
🌻விதிகளின் படி, இணையதளத்தையே பராமரிக்க தெரியாத, டி.ஆர்.பி., அதிகாரிகள், வருங்கால சந்ததிகளை உருவாக்கும், ஆசிரியர்களின் பணி நியமனத்தை எந்த அளவுக்கு தரமாக நடத்த முடியும் என, ஆசிரியர்களும், பெற்றோரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
🍊தமிழை மறந்த அவலம் :
🌻 தமிழகத்தில், அரசாணை மற்றும் அறிவிப்புகளை, தமிழில் வெளியிடுவது கட்டாயமாகும்.
🌻 ஆனால், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில், தமிழ் மொழி மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
🌻ஒவ்வொரு ஆண்டும், பல ஆயிரம் பேரை பணி நியமனம் செய்யும், டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தை பார்த்தாவது, டி.ஆர்.பி., கற்றுக்கொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக