தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
02/04/2017
மீண்டும் தமிழகம் போராட்டகளமாக மாறுகிறதா?
ஏப்ரல் 25 முதல் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்..
திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல் : விஷால் வெற்றி
இந்தியன் ஓபன் பாட்மின்டன் : முதல் செட்டை கைப்பற்றினார் சிந்து
மைல்கல்லில் இந்தியில் எழுத உத்தரவிட்டது டி.ஆர்., பாலு தான்; பொன்.ராதா
ஈரான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நாளை பஹ்ரைன் செல்கின்றனர். குமரி, நெல்லை, ராமநாதபுரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் பஹ்ரைனிலிருந்து மீன்பிடிக்க சென்ற போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அந்நாட்டில் விடப்பட்ட தொடர் விடுமுறையால் 15 தமிழக மீனவர்களும் விடுதலையாவதில் தாமதம் ஏற்பட்டது
முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் எப்படி தப்பினார்-இந்த அதிகாரியை துக்கியடிச்சா என்ன பண்ணுவீங்க.அரசியல் அதிகாரத்தை மீறி நல்ல அதிகாரிகள் பணியாற்ற முடியாது. "தங்கம் மட்டுமல்ல, எடப்பாடிக்கு ஆதரவாக செயல்படும் எம்.எல்.ஏ.கள் எப்படி கோடிக்கணக்கில் பணத்தை சசிகலாவிடம் இருந்து பெறுகிறார்கள் என்பதையும் கண்காணித்துக்கொண்டுதான் வருகிறோம். மத்திய அமைச்சர் அருண்ஜெட்லியின் நேரடி கண்காணிப்பில் நடைபெறும் இந்தப் புலனாய்வில் இப்பொழுது தங்க விநியோகம் சிக்கியுள்ளது. அதற்கான டீமுக்கு நேர்மைக்கும் கண்டிப்பிற்கும் சிறப்பான புலனாய்வு திறனுக்கும் பெயர்பெற்ற தாமோதரன் தலைமை தாங்குகிறார்; இது இத்துடன் முடியாது'' என்கிறது வருமான வரித்துறை
தமிழகத்தை சார்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய கேரளா ஆளுநர் சதாசிவம்.ஒரு நீதிபதி ,அரசியல் பதவிக்கு ஆசைப்பட்டால் அவர் வழங்கிய தீர்ப்புக்கள் மீது சந்தேகம் எழாமல் இருக்குமா. இப்போது பாருங்கள் துணை ஜனாதிபதிக்கு ஆசைபடுகிறார் ஒரு முன்னாள் நீதிபதி. ஒரு ஐ.ஏ எஸ் அதிகாரியை அரசியல்வாதியுடன் இணைந்து மறைமுகமாக காப்பாற்றுகிறார் என்று தவல்கள் தெரிவிக்கின்றன.இதெல்லாம் என்ன சொல்கிறது.நீதி விலை போய்விட்டது. உண்மையா இல்லையா.
அப்ப நடந்த தேர்தலெல்லாம் தில்லுமுல்லு நடந்துள்ளதா? .ஆர்.கே .நகர் தேர்தலில் தில்லுமுல்லு நடக்கும் என்று தெரிகிறதாம் அதனால்-தில்லு முல்லு செய்தால் தானகவே நின்று விடக்கூடிய அளவில் புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
வெள்ளை சட்டை போட்ட கருப்பு ஆடுகள் உலாவல்-எவ்வளவு உள்ளடி வேலை நடக்குது பார்த்தீங்களா -வெங்கையாவும் மற்றொரு பக்கம் சதாசிவமும் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்க, வருமானவரித்துறையின் நடவடிக்கை, அடுத்த நிலைக்குப் போகாமல் பார்த்துக்கொண்டது மத்திய அரசு. 90 நாட்கள் கடந்த நிலையில் ராமமோகன ராவ் விசயத்தில் மத்திய அரசு பச்சைவிளக்கைக் காட்ட, எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் படி ராவுக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கி உத்தரவிட்டார் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்!!!???
நாளை விவசாயிகள் நடத்தப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அதிமுக(புரட்சித்தலைவி அம்மா) அணி ஆதரவு
தமிழகத்தில் நாளை விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு தீபா பேரவை ஆதரவு அளிக்கிறது. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாளை தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்
கொலம்பியாவில் எங்கு பார்த்தாலும் சடலம் நிலச்சரிவால் பலியானவர்கள் எண்ணிக்கை 254 ஆக உயர்வு
முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவு
நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடும் தீர்ப்பு; கோவாவிலும் கடும் பாதிப்புhttp://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கேரள மாநிலம் மலப்புரம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் என் ஸ்ரீபிரகாஷ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு அளித்து உள்ள வாக்குறுதியில் மாட்டிறைச்சியும் இடம்பெற்று உள்ளது. பிற மாநிலங்களில் பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறிஉள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜம்மு காஷ்மீரில்,நாட்டிலேயே மிக நீளமான சுரங்க சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்முவில் பிரிவினைவாதிகள் போராட்டம்
1991-96 கால கட்டத்தில் ஜெ தலைமையிலான அமைச்சரவையில் பொது பணித்துறை அமைச்சராக இருந்த R.S.ராஜகண்ணப்பன், அஇஅதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியில் ஓ.பி.எஸ் அணியில் இணையப்போவதாக சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில் விரைவில் அவர் ஓபிஎஸ் அணியில் இணையப்பேவதாக உறுதியாக கூறப்படுகிறது தமிழ் இணைய செய்திகள்
மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டவைகளாகவே இருக்க வேண்டும் - காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்தல்
குடி தண்ணீருக்காக வீடுகளை நொறுக்குவதும், சண்டையிட்டு மண்டையை உடைத்துக் கொள்வதும், கொடுமையிலும் கொடுமை அல்லவா?
அதிமுகவின் மூத்த துணைப் பொதுச்செயலராக தம்மை நியமிக்க வேண்டும் என சசிகலாவிடம் அவரது சகோதரர் திவாகரன் நெருக்கடி கொடுத்து வருகிறாராம்
தமிழ் இணைய செய்திகள்
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்துள்ளது. பெண் யானை உயிரிழந்தது
சென்னை ஆர்.கே.நகா் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட மேலும் 3 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளனர். ஏற்கனவே ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே.நகா் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தை சேர்ந்த 340 பேர் சென்னை வந்துள்ளனர்
தருமபுரி மாவட்டத்தில் மொரப்பூரையடுத்த கீழ்மொரப்பூரில் மானை வேடடையாடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னமுத்து, கோபி ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவாகளிடமிருந்து 20 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
R.K.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடு குறித்து நாளை தேர்தல் ஆணையம் நாளை ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளது. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி-யுடன் நாளை டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆய்வுக்கூட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது
R.K.நகர் இடைத்தேர்தல் ஏற்பாடு குறித்து நாளை தேர்தல் ஆணையம் நாளை ஆய்வுக்கூட்டம் நடத்த உள்ளது. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி-யுடன் நாளை டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆய்வுக்கூட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக