*_08 - 04 - 2017_*
*_சனிக்கிழமை_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
*_தமிழ் இணையசெய்திகள்_*
•┈┈•❀✴🇮🇳✴❀•┈┈•
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴புதுச்சேரியில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டார் கிரண்பேடி_*
புதுச்சேரி: புதுச்சேரியில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர அழைப்பை அடுத்து கிரண்பேடி டெல்லி புறப்பட்டார் கிரண்பேடி ஆட்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கிரண்பேடி டெல்லி செல்வதால் பரபரப்பு ஏற்பட்டது.
*_✴ஐஇடி குண்டு வெடிப்பில் சிஆர்பிஎஃப் மோப்ப நாய் உயிரிழப்பு_*
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்ட ஐஇடி குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் மோப்ப நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
*_✴மியூச்சுவல் பண்டில் ஆர்வமில்லை பொதுமக்கள் சேமிப்பில் வைப்பு நிதிதான் ‘டாப்’_*
புதுடெல்லி: மக்களின் சேமிப்பு, முதலீட்டு பழக்கம் தொடர்பாக இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் (செபி), ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதியில் 50,453 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 95% பேர் வங்கி நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் போட்டு வைத்திருப்பதையே விரும்புகின்றனர். 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் மியூச்சுவல் பண்ட் அல்லது பங்குச்சந்தையில் ஆர்வம் காட்டுகின்றனர்.
2வது இடத்தில் ஆயுள் காப்பீடும், 3வது இடத்தில் தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களில் முதலீடும் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் அஞ்சலக சேமிப்பு, ரியல் எஸ்டேட் உள்ளன. 6வது இடத்தை (9.7%) மியூச்சுவல் பண்ட் பிடித்துள்ளது. பங்குச்சந்தை 8.1%, பென்ஷன் திட்டங்கள், நிறுவனங்களில் முதலீடு, கடன் பத்திரம் போன்றவற்றில் முதலீடு 1 சதவீதம் என உள்ளது.
ஊரக மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மியூச்சுவல் பண்ட் பற்றி இவர்களில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை. ஊரக பகுதியில் 95 சதவீதம் பேர் வங்கி கணக்கு, 47 சதவீதம் பேர் ஆயுள் காப்பீடு, 29% பேர் அஞ்சலக சேமிப்பு திட்டம், 11 சதவீதம் பேர் தங்கத்திலும் முதலீடு செய்துள்ளனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.ஏழை, நடுத்தர மக்கள் தொடங்கி உயர் வருவாய் பிரிவினர் கூட சேமிப்புக்கு முதலிடம் கொடுக்கின்றனர். ஆனால், தற்போது சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், வங்கி முதலீடு பாதுகாப்பானது என்பதை தவிர, பணவீக்கத்தை தாண்டி அது பலன் கொடுப்பதில்லை என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
*_✴பாலத்தின் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி_*
ராமநாதபுரம்: திருவாடாணையில் பாலத்தின் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளார். வேளாங்கண்ணி சென்று திரும்பிய இமானுவேல், அதிபன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
*_✴பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை சத்தீஸ்கர் முதல்வர் ஆய்வு_*
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர். 2022க்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' என்ற திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*_✴நடிகர் கமல் வீட்டில் தீ விபத்து_*
சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. 3-வது மாடியில் ஏற்பட்ட சிறு தீ விபத்தின் புகை மூட்டத்தில் இருந்து கமல் வெளியேறினார். தீ விபத்தில் இருந்து தாம் தப்பித்து விட்டதாகவும் ஆபத்து ஏதுமில்லை என்று டுவிட்டரில் கமல் தகவல் தெரிவித்துள்ளார்.
*_✴அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமானவரி சோதனை : விஜயபாஸ்கர்_*
சென்னை : அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று வருமானவரி அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். சரத்குமாரை தாம் சந்தித்ததைத் தொடர்ந்து இருவர் வீட்டிலுமான சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சியே என்று தெரிவித்தார். மேலும் சோதனையில் குறிப்பிடும்படியான பணமோ, கைப்பற்றப்படவில்லை என்று கூறினார். அதே போல் புதுக்கோட்டையில் உள்ள என் வீட்டிலும் எந்த ஆவணமும் சிக்கவில்லை என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக