தமிழ் இணைய செய்திகள்
11/04/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*14 மாவட்டங்களில் மரணமடைந்த 20 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு: முதலமைச்சர் உத்தரவு.
*சரத்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை.*
*சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை.*
*கடந்த 7 ஆம் தேதி சரத்குமார் வீட்டில் வருமானவரி சோதனை நடந்த நிலையில் இன்று மீண்டும் சோதனை.*
*என்னுடைய வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை ஏதும் நடத்தவில்லை: ராடன் மீடியா நிறுவனத்திற்கு வந்த சரத்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி*
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 2011 க்கு முன்பு நியமனம்* *செய்யப்பட்டிருந்தால்*
*TET தேர்வு எழுத* *வேண்டியதில்லை..*தமிழ் இணைய செய்திகள்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
2011-ம் ஆண்டு நவம்பருக்கு முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.
15.11.2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு (TET) எழுத ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, 4 இடைநிலை ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
விசாரணையில் முடிவில், 2011-ஆம் ஆண்டுக்கும் முன்பிலிருந்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து இடைக்கால உத்தரவிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களை ஆசிரியர் தகுதி தேர்வை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 29, 30 ஆகிய தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடக்க உள்ளது நினைவுக்கூரத்தக்கது.
*மீண்டும் கைவிரித்த ஏடிஎம்கள்; நவம்பரை நினைவூட்டும் நீண்ட வரிசைகள்*
தமிழ் இணைய செய்திகள்
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கி வந்த ஏடிஎம்களில் கடந்த ஒரு வார காலமாக பணம் இல்லாத நிலையில், இருக்கும் ஒரு சில ஏடிஎம்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.
கடந்த வாரத்தில் இறுதி நாட்களில் பெரும்பாலான வங்கி ஏடிஎம்கள் பணமில்லாமல் மூடப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஏடிஎம்மாக ஏறி இறங்கும் பொதுமக்கள் கையில் காசில்லாமல் கவலையோடு வெளியேறுவதைப் பார்க்க முடிந்தது.
மாதத் துவக்கத்தில் சம்பளப் பணத்தை எடுக்க கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் அல்லல்பட்ட ஏராளமானோர் இந்த வாரத் துவக்கத்தில், திறந்து அதே சமயம் பணமும் இருக்கும் ஏடிஎம்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதைப் பார்த்து அச்சம் அடைந்தனர்.
எஸ்பிஐ வங்கியுடன், எஸ்பிஐ ஹைதராபாத் உள்ளிட்ட 6 வங்கிகள் இணைந்த பிறகு, பெரும்பாலான எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களின் செயல்பாடு ஸ்தம்பித்தது.தமிழ் இணைய செய்திகள்
பிற வங்கிகளும் பணம் இல்லை என்ற அட்டையை மட்டும் வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டின. பணமில்லாத ஏடிஎம்களும், நீண்ட வரிசைகளும் நவம்பர் மாதத்தையே நினைவூட்டுகின்றன.
இதற்கு சரியான காரணமோ, இதன் பின்னணியில் இருக்கும் காரியமோ இதுவரை தெரியவரவில்லை.சிவகாசி, விருதுநகர்,
சென்னை மற்றும் தமிழகத்தில் மட்டும் இல்லை. இந்தியா முழுக்கவே இந்த நிலை தான் உள்ளது. ஹைதராபாத், புனே, வாராணசி என ஏராளமான நகரங்களில் ஏடிஎம்களில் பணமில்லாமல் மக்கள் அவதிப்படுவதாகவும் செய்திகள் பதிவாகியுள்ளன.
*'அரசு வாய்ப்பளித்தால் பஸ் டிரைவராக சாதிப்பேன்': கிருஷ்ணகிரி முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர் உறுதி*
தமிழ் இணைய செய்திகள்
கிருஷ்ணகிரி: ''அரசு வாய்ப்பளித்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முதல் பெண் பஸ் டிரைவராக சாதித்து காட்டுவேன்,'' என, பெண் ஆட்டோ ஓட்டுனர் பவானி கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தை சேர்ந்தவர் குலகுமார், 32, கூலி தொழிலாளி. இவரது மனைவி பவானி, 35. இவர்களுக்கு, இரண்டு மகன்கள் மற்றும், ஒரு மகன் உள்ளனர். உடல்நிலை சரியில்லாமல், கடந்த, 2006ல் குலகுமார் இறந்து விட்டார். இதையடுத்து ஆதரவற்ற நிலையில் இருந்த பவானி, வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். குழந்தைகளை படிக்க வைக்க பணம் இல்லாமல் சிரமப்பட்டார். பின், வேலை செய்வதை விட்டு விட்டு, ஆட்டோ ஓட்டுனர் மைக்கேல் என்பவர் உதவியுடன், ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்டு, 2010ல் டிரைவிங் லைசென்ஸ் எடுத்தார். பின், ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தார். இந்நிலையில், புது ஆட்டோ வாங்க, தாட்கோ மூலம் மானிய கடன் கேட்டார். 'பேட்ஜ்' எடுக்காமல் மானியக்கடன் வழங்க முடியாது என, தாட்கோ கைவிரித்தது. இதுகுறித்து, தகவல் அறிந்த, அமெரிக்காவில் வசிக்கும் ராம்ராமானுஜம் என்பவர், கலெக்டர் அருண்ராய் மூலமாக, 1,000 டாலர் பணம் அனுப்பினார்.
அதை பெற்றுக்கொண்ட பவானி, அந்த பணத்தை ஆட்டோவுக்கு முன்பணமாக கட்டி, பழைய ஆட்டோ ஒன்றை வாங்கினார். இந்நிலையில், கடந்த, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், 'பேட்ஜ்' மட்டுமல்லாமல்,' ஹெவி டிரைவிங் லைசென்ஸ்' எடுத்துவிட்டு, தாட்கோவில் மறுபடியும் கடன் கேட்டு விண்ணப்பித்தார். இவருக்கு தாட்கோ மூலம்,2.26 லட்சம் 100 ரூபாய் கடனில், 67 ஆயிரத்து 780 ரூபாய் மானியத்தில், புதிய ஆட்டோ ஒன்றை, கலெக்டர் கதிரவன், நேற்று குறை தீர்க்கும் கூட்டத்தில், பவானிக்கு வழங்கினார்.ஆட்டோவை பெற்றுக்கொண்ட பவானி கூறியதாவது: தன்னம்பிக்கை காரணமாக, தற்போது சொந்தமாக ஆட்டோ ஓட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளேன். எனக்கு அரசு வாய்ப்பளித்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின், முதல் பெண் பஸ் டிரைவராக சாதித்து காட்டுவேன்.
எனவே, அரசு எனக்கு மேலும் சாதிக்க ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக