காலை செய்திகள் 12/04/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காலை செய்திகள் 12/04/2017

      °°°தமிழ் இணைய செய்திகள்°°°
                   12/04/2017
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*ஆளுநர் கிரண்பேடி அனுப்பும் தகவலை முதலில் தனக்கோ அமைச்சரவைக்கோ தெரிவிக்கவேண்டும்- அனைத்துத்துறை செயலர்களுக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமி*

*தமிழகம் முழுவதும் 11 டி.எஸ்.பி.,க்கள்  இடமாற்றம்*

*திருப்பூர் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் மீது போலீசார் தடியடி*

சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை மூடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தும் கலையாததால் போலீசார் தடியடி நடத்தினர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*எதனையும் சந்திக்க தயார்: நவாஸ் பேச்சு*

இஸ்லாமாபாத்: எந்த அச்சுறுத்தலையும், சந்திக்க தயாராக உள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜாதவை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ள மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், விமானப்படை அகடமியில் நடந்த நிகழ்ச்சியில் நவாஸ் ஷெரீப் பேசியதாவது:
பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடு. இதனை யாரும் பலவீனமாக எடுத்து கொள்ளக்கூடாது. குழப்பத்திற்கு பதில் ஒத்துழைப்பு வழங்கி, சந்தேகப்படுவதை தவிர்த்து இணைந்து செயல்படுதல் ஆகியவையே பாகிஸ்தானின் கொள்கையாக உள்ளது. பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. அனைவருடனும் நட்புறவை நீட்டுவதற்கு பாகிஸ்தான் எப்போதும் தயங்கியதில்லை. எந்தவித அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், அதனை சந்திக்கவும், பதிலடி கொடுக்கவும் பாகிஸ்தான் படைகள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

*சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமாரின் நீதிமன்ற காவல் ஏப்.25 வரை நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு*

*சென்னை: மயிலாப்பூரில் போலி கிரெடிட் மூலம் ரூ.2 லட்சத்துக்கு நகைகளை வாங்க முயன்றவர் கைது*

*விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம்*

*வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழிசை*

*டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பாரதீய ஜனதா போராட்டம் நடத்தும்: தமிழிசை*

*டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று ஆஜராக வலியுறுத்தி நினைவூட்டல் கடிதம் அனுப்பியது வருமான வரித்துறை.*

*ஆஜராக தவறினால் கீதாலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்படும் - வருமான  வரித்துறை.*

*வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக சரத்குமார் மற்றும் ராதிகா இன்று ஆஜராக உள்ளனர்.*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here