தமிழ் இணைய செய்திகள்
22/04/2017
*♨விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25ம் தேதி செவ்வாய்கிழமை அனைத்து கட்சிகள் சார்பாக மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவை தெரிவிக்கிறது.
*♨பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ரஜினிகாந்த்... விடாமல் துரத்தும் கட்சிகள்!*
நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர காட்டி வரும் நிலையில் பாஜகவோ ஒரு படி மேலே போய் அவருக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பதன் மூலம் அவர் தங்களை ஆதரிப்பது போன்ற மாயபிம்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
*♨வைகை அணை தண்ணீரை மூட ரப்பர் பந்து - செல்லூர் ராஜூவின் புது ஐடியா*♨
வைகை அணை தண்ணீர் ஆவியாவதை தடுக்க ரப்பர் பந்துகளைக் கொண்டு மூட திட்டமிட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். தெர்மாகோல் திட்டம் தோல்வியடைந்ததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக ரப்பர் பந்துகளை மிதக்க விட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
*♨டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்க... ஆளுநருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்யுமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உறுப்பினர்கள் நியமனம் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
*♨உள்ளாட்சித் தேர்தல்- ஏப்ரல் 28-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்*♨
*♨கடும் வறட்சி.. நெல்லையில் மே 1 முதல் தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் கட்!*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
♨அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவது குறித்து ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கிடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் முதல்வர், பொதுச் செயலாளர் ஆகிய பதவிகள் மீதான சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக