தமிழ் இணைய செய்திகள் 23/04/2017 - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ் இணைய செய்திகள் 23/04/2017

   தமிழ் இணைய செய்திகள்

              23/04/2017

*🔴🔴இந்தியாவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை: தலாய்லாமாவை வைத்து சீண்ட வேண்டாம் என்று மிரட்டல்*

*🔴🔴காபூல்: ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்வத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.*

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 6-ல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்!

சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறியதாவது:

"# நன்செய், புன்செய் விவசாயிகளுக்கும்,  விவசாயத் தொழிலாளர்களுக்கும், உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தியும்,

# வரும் காலங்களில் கிடைக்கும் மழைநீரை சேமித்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், தமிழகமெங்கும் உள்ள நீர்நிலைகளை உடனடியாக தூர்வார வலியுறுத்தியும்

புதிய தமிழகம் கட்சியின் சார்பில், சென்னையில் மே 6-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்"
என்று கூறினார்.

     🔴🔴*ஏப்.25ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழக அரசு பங்கேற்காது: அமைச்சர் செங்கோட்டையன்*

*_✴✴டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்ககைளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே. வாசன்_*

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்ககைளை நிறைவேற்ற வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி தீர்வு காணவும் வாசன் கோரிக்கை அளித்துள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யவும் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_🇮🇳நூலகம் தொடங்கிய காலத்திலிருந்தே புத்தகங்களுக்கு திமுக முக்கியதுவம் அளித்து வருகிறது: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலி்ன்_*

சென்னை: உலக புத்தக நாளான இன்று மாவட்ட திமுக அலுவலகங்களில் நூலகம் திறக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலி்ன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள நகர, ஒன்றிய திமுக அலுவலகத்திலும் நூலகம் தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நூலகம் தொடங்கிய காலத்திலிருந்தே புத்தகங்களுக்கு திமுக முக்கியதுவம் அளித்து வருகிறது. மேலும் சென்னையில் கலைஞர் கருணாநிதி தொடங்கிய அண்ணா நூலகம் தான் ஆசியாவிலேயே பெரிய நூலகம் என தெரிவித்துள்ளார். 

*_சென்னை அம்பத்தூரில் மை ஆலையில் தீ விபத்து_*

சென்னை: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.. இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எாிந்து சேதம் ஆகியுள்ளது. 5 வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 

*_✴பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது_*

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பங்கேற்றுள்ளனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴சென்னை நடிகர் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்திப்பு_*

சென்னை: சென்னையில் உள்ள நடிகர் சங்க நிர்வாகிகளை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது ஜி.எஸ்.டி. திருட்டு, டி.வி.டி. ஒழிப்பு உள்ளிட்டக் கோரிக்கைகளை வெங்கையா நாயுடுவிடம்  நடிகர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர் .

*_✴பொத்தேரியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு_*

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த ஜான் அக்ரீன் தனியார் கல்லூரியில் சமையல் படிப்பு படித்து வந்தார்.

*_✴ஜோலார்பேட்டை அருகே ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு_*

வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பச்சூர் பகுதியில் பெங்களூரு ரயிலில் கொள்ளையர்கள் பயணிகளிடம் நகை பறித்து சென்றுள்ளனர். அடையாளர் தெரியாத நபர்கள் கத்திமுனையில் பெண்களிடம் 25 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். டிஎஸ்பி குமரேசன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
   *டிடிவி தினகரன் ஆஜராக உள்ளதையொட்டி டெல்லியில் காவல்துறையினர் குவிப்பு;*

*🔷🔷விசாரணை நடக்க உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு*

*_✴✴தஞ்சையில் 55 சவரன் நகை கொள்ளை_*

தஞ்சை: தஞ்சை அருளானந்தம்மாள் நகரில் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் வீட்டில் 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அஷ்ரப் அலி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

*_✴டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது_*

புதுடெல்லி: டெல்லி மாநகராட்சியின் 270 வார்டுகளுக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 2,886 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 26-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

*_✴மருத்துவக் கல்லூரி விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்_*

கரூர்: மருத்துவக் கல்லூரி விவகாரம் குறித்து எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். கரூரில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரி தற்போது வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

*_✴✴பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதி: அய்யாக்கண்ணு பேட்டி_*

புதுடெல்லி:  பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் என அய்யாக்கண்ணு பேட்டியளித்துள்ளார். அனைத்து கட்சி தலைவர்களும் போராட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளார். பிரதமர் எங்களுக்கு உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என அய்யாக்கண்ணு கூறியுள்ளார். 

தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது என அய்யாக்கண்ணு கூறியுள்ளார். தேசிய வங்கியில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here